Thursday, July 16, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (17-7-09)

1.ஆண்டிக்கு 15 கோடி வருமானம்

ஒரு பழத்திற்காக கோபித்துக் கொண்டு...எல்லாவற்ரையும் துறந்து..ஆண்டிக்கோலம் பூண்டு..பழனி மலையில் நின்றவர் முருகன் என்பது கதை.

அந்த ஆண்டியின் கோவிலுக்கு இந்த நிதி ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 15 கோடியாம்.

தமிழக கோயில்களில் பக்தர்கள் அதிகம் வரும் கோயில் இது.

பூஜை டிக்கட்டுகள் மூலம் வந்த வருமானம் 8 கோடியே 71 லட்சம்.

பஞ்சாமிர்த விற்பனை 15 கோடி..

இன்று ஆண்டிகள் என்றால் கோடிஸ்வரர்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா?

2.ஜீன்ஸ் படப் புகழைவிட ஒரு மிகப் பெரிய புகழை நடிகர் பிரசாந்த்...பொன்னர்-சங்கர் படத்தில் இயற்றித் தருவாரெனில்..அதைவிட பெரும் பரிசு எனக்கு எதுவும் இருக்க முடியாது..என்கிறார் கலைஞர்.

3.உறவு என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

தண்ணீரில் எண்ணெய் கலப்பது போல இருக்கக்கூடாது. தண்ணீரில் பால் கலப்பது போல் இருக்க வேண்டும்.

4.கடல் ஆழமாக இருப்பதால்..உயரமாக இருக்கும் மலையைவிட மட்டமாகி விடுமா?

5.ஒரு நாடு சுதந்திரநாடு என்பது வேறு..தனிப்பட்ட மனிதன் ஒவ்வொருவனும் போராடித்தான் சுதந்திரம் பெற்றாக வேண்டும்.

6.சென்னை சத்யமூர்த்தி பவனில்..பெருந்தலைவர் காமராஜரின் 107ஆம் பிறந்தநாள் விழா..எவ்வித தகராறும் இன்றி ..(பல தலைவர்கள் கூடியிருந்தும்) கொண்டாடப்பட்டது.

7.ஒரு ஜோக்..
வலைப் பதிவர்கள் எல்லாம்..கையில் ஒரு வலையைத் தூக்கிட்டு எங்கே போறாங்க?
அனானிகளை வலைவீசி தேடப்போறாங்களாம்.

8.இந்த வாரத்திற்கான ஜோக் விருது பெறுபவர் இரா.செழியன்..அவர் சொன்ன ஜோக்

ம.தி.மு.க., தான் அண்ணா வழி வந்த உண்மையான திராவிட இயக்கம்.இதற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.இக்கட்சிக்கு எதிர்காலம் இல்லையெனில்..நாட்டிற்கே எதிர்காலம் இல்லை.

23 comments:

கோவி.கண்ணன் said...

//இன்று ஆண்டிகள் என்றால் கோடிஸ்வரர்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா? //

என்ன அப்படிக் கேட்டுவிட்டிங்க அதனால் தானே சாமியார் தொழில் கோடிகளில் பறக்கது

கோவி.கண்ணன் said...

//3.உறவு என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

தண்ணீரில் எண்ணெய் கலப்பது போல இருக்கக்கூடாது. தண்ணீரில் பால் கலப்பது போல் இருக்க வேண்டும்.//

அப்ப பால்காரங்களெல்லாம் உறவுக் காரங்கன்னு சொல்லுங்க !
:)

கோவி.கண்ணன் said...

//8.இந்த வாரத்திற்கான ஜோக் விருது பெறுபவர் இரா.செழியன்..அவர் சொன்ன ஜோக்//

கொடுக்கலாம் கொடுக்கலாம்

goma said...

மாம்பழத்துக் கோபித்துக் கொண்டு போனதற்கே இவ்வளவு கோடியென்றால்,பலாப் பழத்துக்குக் கோபித்திருந்தால் ....
:-)))))))))

அக்னி பார்வை said...

//7.ஒரு ஜோக்..
வலைப் பதிவர்கள் எல்லாம்..கையில் ஒரு வலையைத் தூக்கிட்டு எங்கே போறாங்க?
அனானிகளை வலைவீசி தேடப்போறாங்களாம்.

8.இந்த வாரத்திற்கான ஜோக் விருது பெறுபவர் இரா.செழியன்..அவர் சொன்ன ஜோக்

ம.தி.மு.க., தான் அண்ணா வழி வந்த உண்மையான திராவிட இயக்கம்.இதற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.இக்கட்சிக்கு எதிர்காலம் இல்லையெனில்..நாட்டிற்கே எதிர்காலம் இல்லை///

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் "
என்பதை தேங்காய்..மாங்காய்..பட்டாணி..கிண்டல் " என மாற்றவும்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

என் அப்பன் ஆண்டிக் கோலத்தில் நிற்பவனுக்கு எதற்கு இத்தனை கோடிகள்..

எல்லாத்தையும் நீங்களே வைச்சுக்கிடுங்க..

அவனை மட்டும் எங்ககிட்ட கொடுத்திருங்க..!

ஆதிமூலகிருஷ்ணன் said...

சுவாரசியமான பகுதிகள். கிளைமாக்ஸ் ஜோக் பிரமாதம்.

T.V.Radhakrishnan said...

சாமியார்கள் கேடிகளாய் இருப்பதால்தான் கோடிகளில் மிதக்கிறார்கள்...
பால்காரர் மட்டுமென்ன அனைவருமே கேளிர் தான்
வருகைக்கு நன்றி கோவி

T.V.Radhakrishnan said...

//goma said...
மாம்பழத்துக் கோபித்துக் கொண்டு போனதற்கே இவ்வளவு கோடியென்றால்,பலாப் பழத்துக்குக் கோபித்திருந்தால் ....
:-)))))))))//
முருகன் அரசியல்வாதியாக ஆகியிருப்பார் :-)))

T.V.Radhakrishnan said...

//அக்னி பார்வை said...
தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் "
என்பதை தேங்காய்..மாங்காய்..பட்டாணி..கிண்டல் " என மாற்றவும்//

கிண்டல் தான் சுண்டலில் மசாலா.

T.V.Radhakrishnan said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
என் அப்பன் ஆண்டிக் கோலத்தில் நிற்பவனுக்கு எதற்கு இத்தனை கோடிகள்..

எல்லாத்தையும் நீங்களே வைச்சுக்கிடுங்க..

அவனை மட்டும் எங்ககிட்ட கொடுத்திருங்க..!//

ஆனாலும் ரொம்ப ஆசை உங்களுக்கு...பொன் முட்டையிடும் வாத்தை கேட்கறீங்களே

T.V.Radhakrishnan said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
சுவாரசியமான பகுதிகள். கிளைமாக்ஸ் ஜோக் பிரமாதம்.//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஆதி

நாஞ்சில் நாதம் said...

\\\\\\\\ம.தி.மு.க., தான் அண்ணா வழி வந்த உண்மையான திராவிட இயக்கம்.இதற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.இக்கட்சிக்கு எதிர்காலம் இல்லையெனில்..நாட்டிற்கே எதிர்காலம் இல்லை. ////////

வெயில் ரெம்ம்ப அதிகமா அடிக்குதுல்ல அதுதான் இப்படி

ஹா ஹா ஹா ஹா

T.V.Radhakrishnan said...

//நாஞ்சில் நாதம் said...
\\\\\\\\ம.தி.மு.க., தான் அண்ணா வழி வந்த உண்மையான திராவிட இயக்கம்.இதற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.இக்கட்சிக்கு எதிர்காலம் இல்லையெனில்..நாட்டிற்கே எதிர்காலம் இல்லை. ////////

வெயில் ரெம்ம்ப அதிகமா அடிக்குதுல்ல அதுதான் இப்படி

ஹா ஹா ஹா ஹா//


வருகைக்கு நன்றி நாஞ்சில் நாதம்

நையாண்டி நைனா said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

T.V.Radhakrishnan said...

//நையாண்டி நைனா said...
:))))))))))))))))))))))))))))))))))'//

:-))

PPattian : புபட்டியன் said...

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டலில் பஞ்சாமிர்தம் குறித்த தகவல்.. சுவை கூடியது.

T.V.Radhakrishnan said...

//PPattian : புபட்டியன் said...
தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டலில் பஞ்சாமிர்தம் குறித்த தகவல்.. சுவை கூடியது.//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி புபட்டியன்

மங்களூர் சிவா said...

haa haa
nice!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

\\\\ 7.ஒரு ஜோக்..
வலைப் பதிவர்கள் எல்லாம்..கையில் ஒரு வலையைத் தூக்கிட்டு எங்கே போறாங்க?
அனானிகளை வலைவீசி தேடப்போறாங்களாம். ////

என்ன வலை கொண்டு போறாங்க

கொசு வலையா

சிக்குவாங்கன்னு நினைக்கிறீங்களா....

:-))))

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
சிவா
Starjan

ஷைலஜா said...

தேங்காய் மாங்காய் பட்டாணி க்கு எனது முதல் வருகை இதான்!!! சுவையாவே இருக்கு..சடையர் உங்களுக்கு இயல்பா வருகிறது ஸார்!

T.V.Radhakrishnan said...

//ஷைலஜா said...
தேங்காய் மாங்காய் பட்டாணி க்கு எனது முதல் வருகை இதான்!!! சுவையாவே இருக்கு..சடையர் உங்களுக்கு இயல்பா வருகிறது ஸார்!//

வருகைக்கு நன்றி ஷைலஜா