இரு திறமைசாலிகள் இருக்கையில்...ஒருவர் மட்டும் பெரும் புகழ் அடைவதும்...அவருக்கு இணையான திறமையுள்ளவர் அவ்வளவு புகழ் அடையமுடியாமல் இருப்பதும் சகஜம் என்றாலும்...திரையுலக இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை அனைவரும் மறந்துவிட்டது அவரது துரதிருஷ்டமே.
திரை இசைத் திலகம் மாகாதேவன் என்றதும்..நமக்கு உடன் ஞாபகம் வருவது..அந்த கால எம்.ஜி.ஆர்., படப் பாடல்களே..அதுவும் தேவர் ஃபிலிம்ஸ் படப் பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை.
ஏமாறாதே..ஏமாற்றாதே,மஞ்சள் முகமே வருக(வேட்டைக்காரன்),மனுஷனை மனுஷன்(தாய்க்குப் பின் தாரம்),சிரித்து சிரித்து(தாய் சொல்லை தட்டாதே),உண்டாக்கி தந்தவர்கள் இரண்டு பேரு(முகராசி),உழைக்கும் கரங்களே..(தனிப்பிறவி),ஏதோ ஏதோ ஒரு மயக்கம்(குடும்பத்தலைவன்),பல்லாண்டு வாழ்க பாடல்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.விவசாயி படப் பாடல்கல் அனைத்தும் அருமை.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்களுக்கும் இசை இவர்தான்...'மாமா..மாமா' பாடலை எளிதில் மறந்துவிட முடியுமா..இப்பாடலுக்குப் பிறகு..மாகாதேவனை திரையுலகினர் அனைவரும் கூப்பிடுவது 'மாமா' என்றுதான்.இவர் இசை அமைத்த மற்ற மறக்க முடியா பாடல்கள்..என் நினைவிலிருந்து...
ஒரே ஒரு ஊரிலே (படிக்காத மேதை)
சிட்டுக்குருவி(டவுன் பஸ்)
மணப்பாரை மாடு கட்டி (மக்களை பெற்ற மகராசி)
அமுதும் தேனும் எதற்கு (தை பிறந்தால் வழி பிறக்கும்)
பசுமை நிறைந்த நினைவுகளே(ரத்த திலகம்)
பறவைகள் பலவிதம்,கண்ணெதிரே தோன்றினாள் (இருவர் உள்ளம்)
தூங்காத கண்ணென்று ஒன்று,சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (குங்குமம்)
தவிர திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்கள்.'ஒரு நாள் போதுமா" இவரை சொல்ல.ஏ.பி.என்.படங்கள் இசையை மறந்துவிட முடியுமா?
இதயக்கமலம்..படப்பாடல்கள்..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.இவருக்கு உடன் இருந்து கடைசி வரை தொண்டாற்றினார் புகழேந்தி.
ஆமாம்..இவ்வளவு சொல்லிவிட்டு...முக்கியமான ஒன்றை சொல்லவில்லை என்கிறீர்களா?
ஆம்...பல தெலுங்கு படங்களிலும் இவர் இசை பாராட்டப்பட்டது.
மகுடம் வைத்தாற்போல்..'சங்கராபரணம்" பாடல்களை மறக்கமுடியுமா?
இப்படிப்பட்ட இசைமேதை வாழ்நாளில் சரியாக கௌரவிக்கப் படவில்லை..திறமைசாலிகளுக்கு இப்படிப்ப நிலை என்பதுதான் தலைவிதி போலும்.
6 comments:
Yes. It is happening in our native.
கால ஓடையில் அடித்துச் செல்லப்படும் பெயர்களை ஒரு சின்ன சிப்பியில் சேமித்து வைத்துள்ளது போல் - உங்கள் இடுகை. வாழ்த்துக்கள் நண்பரே!
ஆமா எங ’கந்தன் கருணை’ய காணோம்.. ’மனம் படைத்தேன்...’ பாட்டு ஆல் டைம் இட் சார்
வருகைக்கு நன்றி நைனா
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
ஜெகநாதன்
// அக்னி பார்வை said...
ஆமா எங ’கந்தன் கருணை’ய காணோம்.. ’மனம் படைத்தேன்...’ பாட்டு ஆல் டைம் இட் சார்//
கடல் நீரை குடத்தில் அடக்கிட முடியுமா?
அதனால் தான் ஏ.பி.நாகராஜன் படங்கள் என குறிப்பிட்டேன்.
ஒரு வேளை கந்தன் கருணை..ஏ.எல்.எஸ்.,தயாரிப்பு என்பதால் இப்படிக் கேட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்
Post a Comment