Tuesday, July 21, 2009

திரைகவி திலகம் மருதகாசி...சில நினைவுகள்..

தமிழ்த் திரையில் பாடலாசிரியர்களில் மறக்கமுடியாதவர்களில் மருதகாசியும் ஒருவர்..அவர் பாடல்களில் இன்னமும் என் நினைவில் நிற்கும் பாடல்கள்..

தாய்க்குப்பின் தாரம்..படத்தில்..
மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே
இது மாறுவதெப்போ...தீருவதெப்போ நம்ம கவலை

சமுதாயத்தில்..மக்களிடம் காணப்படும்..மேலோர் கீழோர் பற்றிய கவியின் கவலை இப்பாட்டில் தெரியும்.

2.நீலமலைத் திருடன் படத்தில்..
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா...பாடல்..அதில் வரும் பிடித்த வரிகள்

குள்ளநரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மயக்கிடும்..நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா-அவற்றை
யமனுலகுக்கு அனுப்பி வைக்க தயங்காதேடா

3.மன்னாதி மன்னன் படத்தில் வரும்..ஆடாத மனமும் உண்டோ? பாடல்

4.நினைத்ததை முடிப்பவன் படத்தில்...கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..என்ற பாடல்

5.தூக்கு தூக்கியில்
கண்விழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம் - என்ற பாடல்
6.மருத மலை மாமணியே..முருகையா..மதுரை சோமு பாடிய இப்பாடலை மறக்க முடியுமா? இப்பாடல் மருதகாசிக்கு தமிழ்நாடு அரசின் விருது பெற்று தந்தது.

7.யார் பையன் படத்தில் கண்டசாலா பாடிய..'சுயநலம் பெரிதா..பொது நலம் பெரிதா..' என்றபாடல்

8.சாரங்கதாரா படத்தில்..இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்..'வசந்த முல்லை' பாடல்..இவர் எழுதியது என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

9.மக்களைப் பெற்ற மகராசியில்...;'மனப்பாறை மாடு கட்டி..மாயவரம் ஏரு பூட்டி' பாடல் அருமை.

10.மண்மீது மானம் ஒன்றே பிரதானம்..என்றெண்ணும் குணம் வேண்டும்..என்ற பாடல் சதாரம் படத்திற்காக எழுதப்பட்டது.

11.மனமுள்ள மறுதாரம் படத்தில் வரும்..இன்பம் எங்கே..பாடல்..இதன் வரிகள் சில
கனிரசமாம் மது அருந்தி பார்ப்பதல்ல இன்பம்
கணிகையரின் பேச்சினிலே கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மணையாளின் தேன் மொழியே இன்பம் - எவ்வளவு அருமையான கருத்து.

மேலும்..வண்ணக்கிளியில் அடிக்கிற கைதான் அணைக்கும்
ரம்பையின் காதலனில்..சமரசம் உலாவும் இடமே..
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்..

இவ்வளவு சொல்லிவிட்டு..ஒன்றை சொல்லாவிட்டால் இளா விற்கு கோபம் வரும்..அதுதான்
விவசாயி..படத்தில் வரும்..விவசாயி பாடல்

முன்னேற்ற பாதையில் மனச வைச்சு
முழு மூச்சாய் அதற்காக தினம் உழைச்சு
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும்
குணமுடையோன் விவசாயி..

ஆகா..எத்தனை அருமையான வரிகள்..

மருதகாசி...தமிழ்திரைஉலகின்..திரைகவிதிலகம் என்பது உண்மை.

தமிழ்க் கவிகள் பலர் மறக்கப்படுகிறார்கள்.

7 comments:

ஜோ/Joe said...

//மண்ணிலே முத்தெடுத்து வழங்கும் //
மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ வழங்கும் - என்றிருக்க வேண்டும்.

T.V.Radhakrishnan said...

தட்டச்சும் போது ஏற்பட்ட பிழை..இப்போது சேர்த்துவிட்டேன்..சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஜோ

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//மருதகாசி...தமிழ்திரைஉலகின்..திரைகவிதிலகம் என்பது உண்மை.//

முற்றிலும்

//தமிழ்க் கவிகள் பலர் மறக்கப்படுகிறார்கள். //

நாம் பன்னாடையானதன் விளைவு.
செட்டாகப் கவியின் சிறப்பைக் கூறியுள்ளீர்கள்.

வால்பையன் said...

இன்றைய சூழலுக்கும் ஒத்துபோகும் பாடல்கள்!

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Johan-Paris

T.V.Radhakrishnan said...

//வால்பையன் said...
இன்றைய சூழலுக்கும் ஒத்துபோகும் பாடல்கள்!//

உண்மை வால்

சகாதேவன் said...

காது வழி புகுந்து கருத்தினில் கலந்த அருமையான பாடல்களை நினைவூட்டியதற்கு நன்றி.