Wednesday, July 1, 2009

Twenty 20 -- ஒரு விமரிசனம்

ஏல்லோரும்..இப்ப வலைப்பக்கங்களில் சினிமா விமரிசனம் செய்ய ஆரம்பிச்சாச்சு..நாம மட்டும் சும்மா இருந்தா எப்படி.

நம்ம பங்குக்கு நாமும் ஒரு படத்தை விமரிசனம் செய்யணுமே! என்ன செய்யலாம்னு யோசனை பண்ணப்போ..Twenty 20 மலையாளப் படம் பார்க்க நேர்ந்தது.அதைப்பற்றி..

மலையாளப் படங்களில்..நம்ம ஊர் மாதிரி நடிகர்களுக்கு ஈகோ கிடையாது.இந்த படத்தில்..மது,மம்முட்டி,மோகன்லால்,ஜெயராமன்,பிருத்விராஜ்,நயன்தாரா,கோபிகா,கலாபவன் மணி என ஒரு நட்சத்திர பட்டாளமே உண்டு.

பாத்திரங்கள் அமைப்பில்..மோகன்லாலை விட சற்று கூடுதல் வெயிட் உள்ள கேரக்டர் மம்முட்டியுடையது.ஒரு பிரபல வக்கீல் பாத்திரத்தில் வருவார்.மோகன்லால்..கிட்டத்தட்ட ஒரு வில்லன் போன்ற பாத்திரம்.ஆனாலும்...நம் மனம் மோகன்லால் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் .

ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியின் பேரன் படிக்கும் மருத்துவக் கல்லூரியில்..ஒரு கொலை செய்துவிட்டதாகக் கைது செய்யப்படுகிறான்.அவனை விடுவிக்க அட்வகேட் மம்முட்டியின் உதவியை நாட..அவரும் தன் வாதத் திறமையால் விடுவிக்கிறார்.ஆனால்..அந்த பையனையும் மோகன்லால் கொலை செய்துவிட்டதாய் பழி வர...மோகன்லாலையும்...மம்முட்டி விடுவிக்கிறார்.

ஆனால்..நிரபராதி என்று நினைத்த மோகன்லால் தான் கொலையாளி என தெரிந்ததும்..அவரை மீண்டும் கூண்டிலேற்ற நினைக்கிறார் மம்முட்டி.இதனிடையே..நீதிபதியின்..குடும்பத்தை பழி வாங்க நினைக்கும்
போலீஸ் அதிகாரி வேறு.

..இப்படி..மோகன்லால்,மம்முட்டி,போலீஸ் அதிகாரி என ஒவ்வொருவரும்...அவர்களே அறியாமல்..ஒரே காரணத்திற்கு உழைப்பது கடைசியில் தெரிய வருகிறது.

அனேக திருப்பங்களுடன் திரைக்கதை அமைந்துள்ளது.படத்தின் இயக்குநர் ஜோஷி.

சென்ற வருஷம் வந்த இப்படம் சூப்பர் ஹிட்..

திரைக்கதை அமைப்புக்காக..இப்படத்தை..அனைவரும் பார்க்க வேண்டும்.l

13 comments:

shabi said...

ME THE FIRST ...............................................

shabi said...

ஏன் இவ்ளோ லேட்டு

அக்னி பார்வை said...

படத்தபத்தி கேல்விபெட்டேன், சப்டைட்டிலுடன் டிவிடீயை தேடிக்கொண்டிருக்கிரேன்..நல்ல விமர்சனம் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// shabi said...
ஏன் இவ்ளோ லேட்டு//




வருகைக்கு நன்றி
என்ன செய்வது..அந்த படத்தை நான் இப்பத்தானே பார்த்தேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்னி பார்வை said...
படத்தபத்தி கேல்விபெட்டேன், சப்டைட்டிலுடன் டிவிடீயை தேடிக்கொண்டிருக்கிரேன்..நல்ல விமர்சனம் சார்//

தவறாமல் பாருங்கள் அக்னி

மங்களூர் சிவா said...

ஹீரோயின் எந்த சேச்சின்னு பரஞ்சிட்டில்லா சாரே!?
:((

T.V.ராதாகிருஷ்ணன் said...

இந்த படத்து நாயகி என்று யாரையும் குறிப்பிட முடியாது...ஆனால்...நயன்தாரா வருகிறார்

உண்மைத்தமிழன் said...

டிவிஆர் ஸார்..

படம் நல்ல திரில்லர்..

ஜோஷியின் திரைப்படங்கள் எப்போதுமே திரைக்கதையில் அசத்தலாக இருக்கும்.

அதேதான் இப்படத்திலும்.

நானும் இப்படம் பற்றி பதிவிட்டுள்ளேன்..

பார்க்க..

http://truetamilans.blogspot.com/2008/12/blog-post_13.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

படித்தேன் சார்..
தெரியாத..பல தகவல்கள் தெரிந்துக் கொண்டேன்..நன்றி

மங்களூர் சிவா said...

/
T.V.Radhakrishnan said...

இந்த படத்து நாயகி என்று யாரையும் குறிப்பிட முடியாது...ஆனால்...நயன்தாரா வருகிறார்
/

இதமட்டும் சொன்னாலே போதுமே கதை இல்லாட்டியும் படம் பாப்போமே!
:))))))))))






[ரகசிய பின்னூட்டம். கண்ணாலம் கட்டிகினா என்னென்ன தில்லாலங்கடி பண்ண வேண்டியிருக்கு]

குடுகுடுப்பை said...

பாத்துர வேண்டியதுதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருங்கால முதல்வர் said...
பாத்துர வேண்டியதுதான்//

கண்டிப்பா பாருங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சிவா said
ரகசிய பின்னூட்டம். கண்ணாலம் கட்டிகினா என்னென்ன தில்லாலங்கடி பண்ண வேண்டியிருக்கு//

இந்த பின்னூட்டம் மிஸஸ் சிவா விற்கு அனுப்பப்படுகிறது