அவனன் அலுவலகம் சென்று வந்துவிட்டு..மற்ற வேலைகள் செய்ய நேரமில்லை என்று சொல்வதைப் பார்த்திருக்கிறோம்..
ஆனால்..கலைஞரோ..முழு நேர அரசியல்வாதி..55வருடங்களுக்கு மேல்..கட்சி வேலை,எம்.எல்.ஏ., அமைச்சர்,முதல்வர்,எதிர்க்கட்சித்தலைவர் என தொண்டாற்றிவருபவர்.
ஆனால்..இவ்வளவிற்கும் இடையே..70 திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.(இது பற்றி தொடர் பதிவு ஒன்று போட உள்ளேன்.)
தவிர..ரோமாபுரி பாண்டியன்,தென்பாண்டி சிங்கம்,வெள்ளிக்கிழமை,நெஞ்சுக்கு நீதி,இனியவை இருபது,சங்கத் தமிழ்,குறளோவியம்,பொன்னர்-சங்கர்,திருக்குறள் உரை,தொல்காப்பிய பூங்கா..என பல நூல்களை எழுதியுள்ளார்.
தவிர..மணிமகுடம்,ஒரே ரத்தம்,பழனியப்பன்,தூக்கு மேடை,காகிதப்பூ,நானே அறிவாளி,வெள்ளிக்கிழமை,உதய சூரியன்,சிலப்பதிகாரம் அகிய மேடை நாடகங்களை எழுதியுள்ளார்.
ஆகவே..இனி நேரமில்லை என எக்காரியத்திற்கும் சொல்லாதீர்கள்.
மனமிருந்தால் வழி உண்டு.
நமக்கு இயற்கை அளித்துள்ள அதே 24 மணிநேரமே தான் கலைஞருக்கும் அளித்துள்ளது.
23 comments:
கலைஞர் ஒரு சகாப்தம்
கலைஞரை பத்தி அருமையான பதிவு
நேரம் இல்லைன்னு சொல்றது நம் சோம்பேறி தனத்தை காட்டுது
உங்களுடைய தொடர் பதிவு பட்டையை கிளபட்டும்
அப்ப கலைவாணர் அரங்கதுல ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திடலாம்...
கலைஞரது உழைப்பு ஆச்சர்யமானது!
இன்றளவும் நாம் அவருக்கு ஓய்வு தராமல் இருப்பது கேவலமானது!
கலைஞரின் வேலை பட்டியலில் ஒன்றை மறந்து விட்டீர்களோ ? ஈழத்தில் தமிழன் சாகும் வரை , அவனது சாவு உறுதிப்படும் வரை தொடர்ந்து ஓயாமல் தந்தி அடித்தது ..
இவரது உழைப்பு எல்லாம் எதற்கு , அல்லது யாருக்கு பயன்பட்டது ?.. நானும் கலைஞரை.. அரசியல்வாதியாக பார்க்காமல் .. "...அவர் வல்லவரு கவிதை எழுதுறதுல அவரு வல்லவரு சினிமா எழுதுறதுல ..""
.. என்று நினைத்த காலங்கள் உண்டு . சந்தோச பட்ட காலங்கள் உண்டு.
அட போங்கையா ... எல்லாமே வெறுப்பா இருக்குது..
தமிழனின் ரத்தம் குடிக்கும் தேனீ... கடைசி தமிழன் இருக்கும் வரை இந்த தேனீக்கும் அதன் குடும்பத்துக்கும் நேரம் இல்லை என்ற வார்த்தை தேவைப்படாது...
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கலைஞர் ஒரு சகாப்தம்
கலைஞரை பத்தி அருமையான பதிவு
நேரம் இல்லைன்னு சொல்றது நம் சோம்பேறி தனத்தை காட்டுது//
உண்மை ஸ்டார்ஜன்
வருகைக்கு நன்றி
//அக்னி பார்வை said...
உங்களுடைய தொடர் பதிவு பட்டையை கிளபட்டும்//
நன்றி அக்னி
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அப்ப கலைவாணர் அரங்கதுல ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திடலாம்...//
ஒரு கவி அரங்கமும் உண்டு..வாலி, வைரமுத்து பங்கேற்பர்
//வால்பையன் said...
கலைஞரது உழைப்பு ஆச்சர்யமானது!//
ஆம்...வருகைக்கு நன்றி வால்
//அவருக்கு ஓய்வு தராமல் இருப்பது கேவலமானது!//
ஓய்வுக்கு ஓய்வு தர எண்ணுபவர் அவர்
வருகைக்கு நன்றி
அனில்
அலெக்ஸ்
தன் வாழ்நாட்களில் கருமேகம் சூழா தலைவர்களே இல்லை எனலாம்.இலங்கை தமிழர் விவகாரத்தில்..உங்களைப் போல் எனக்கும் கலைஞர் மீது சற்று ஆதங்கம் உண்டு.ஆனால் அதனால் அவர் திறமைப் பற்றி சொல்கையில்..அதையும் ..இதையும் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை..
கலைஞரை தூற்றுபவர்கள் தத்தம் தலைவர்களை கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்
வருகைக்கு நன்றி உடன்பிறப்பு
ராதா அய்யா! அடிச்சாரு பாருங்க நம்ம உடன்பிறப்பு சிக்சர்!!!!! சூப்பர் பதில்!!!!!
பதிவு அருமை!!!!!!
//அபி அப்பா said...
ராதா அய்யா! அடிச்சாரு பாருங்க நம்ம உடன்பிறப்பு சிக்சர்!!!!! சூப்பர் பதில்!!!!!
பதிவு அருமை!!!!!!//
நன்றி அபி அப்பா
T.V.Radhakrishnan said...
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அப்ப கலைவாணர் அரங்கதுல ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திடலாம்...//
ஒரு கவி அரங்கமும் உண்டு..வாலி, வைரமுத்து பங்கேற்பர்//
நீங்கள் சொல்வது சரி ஐயா,
பூசாரிகள் இல்லாமல் பூசை எப்படி நடக்கும்.
ஆச்தான பூசாரிகளாயிற்றே...
radhakrishnan,
In your view who is the biggest sychophant of manja thundu?vairamuthu,vaali ,sumbai veera paandian,or the good old veeramani?opinion is well divided among the TN community
ஒவ்வோரு பிரச்சினைக்கும் சதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியே மக்களை ஏமாற்றுவது....
தன் பேரன்களுக்கும், மகன்களுக்கும் நடக்கும் சண்டையை தீர்த்துவைப்பது...
அடிக்கடி இராமன் சோமபானம் அருந்தினான், எந்த இன்ஜினியரிங் காலேஜில் படித்தான் என பேட்டி கொடுத்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவது.....
இவைகளையும் விட்டுவிட்டீர்களே திரு.இராதாகிருஷ்ணன் அவர்களே....
வருகைக்கு நன்றி
ஜோதிபாரதி
Vilwam
தமிழ் மதியன்
கலைஞர் போன்று பல தேனீக்கள் உலகில் உலா வருகிறார்கள் என்பதையும் அனைவரும் அறிந்திடும் வண்ணம் ஒரு சோற்றுப் பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல பலருக்கும் காட்டிய பதிவுக்கு மிக்க நன்றி.
//வெ.இராதாகிருஷ்ணன் said...
கலைஞர் போன்று பல தேனீக்கள் உலகில் உலா வருகிறார்கள் என்பதையும் அனைவரும் அறிந்திடும் வண்ணம் ஒரு சோற்றுப் பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல பலருக்கும் காட்டிய பதிவுக்கு மிக்க நன்றி.//
நன்றி Sir
http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=186:--mnc-&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
Post a Comment