1.பிறப்பையும்..இறப்பையும் தவிர..அனைத்தும் மறுபரீசலனைக்குரியது.பூமியில் மிகப் பெரியவனாகத் தெரிபவன்...கடலுக்குள் விழுந்து விட்டால் அதில் உள்ள மீனுக்கு சிறியவனாகி விடுகிறான்.
2.கப்பல் கரையில் இருக்கும்வரை பிரச்னை இல்லை.அது கடலில் செல்லும்போதுதான் புயலை சந்திக்க நேரிடும்.ஆனாலும் கப்பல் என்பது..கரையில் இருக்க கட்டப்பட்டதில்லை.பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வதில்தான் திறமை இருக்கிறது.
3.ராமன் ஆண்டா என்ன..ராவணன் ஆண்டா என்னன்னு இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க...ஆனா என்னைக் கேட்டா அது தப்புன்னு சொல்வேன்..யார் ஆண்டாலும் நம் குடும்பத்துக்கு நாம் உழைச்சாத் தான் சோறு.இந்த எண்ணம் அனைவருக்கும் வேண்டும்.
4.அச்சத்தை தவிருங்கள்..இதுதான் என் வழி என தீர்மானியுங்கள்.பின்..அந்த லட்சியத்தில் முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள்.நமக்கு அதில் பயணம் மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
5.ஒரு ஜோக்
சார்..நீங்க என் அப்பாவைவிட பெரியவங்க.
தம்பி என்ன சொல்றீங்க
ஆமாம்..சின்ன வயசில என்னை தூங்க வைக்க எங்கப்பா படாத பாடு படுவார்.கதை சொல்வார்..பாடுவார்..ஆனா நீங்க இது எதுவும் இல்லாமல் பேசியே எனக்கு தூக்கத்தை வரவழித்து விடுகிறீர்கள்.
6.இந்தவார சிறந்த ஜோக் விருது ஸ்ரீதர் வாண்டையாருக்கு..அவர் சொன்னது
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 இடங்களில் தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம்னு சொல்லிவிட்டு 12 இடங்களில் வெற்றியை பெற்று தந்துள்ளோம் என்கிறார் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்.
14 comments:
//5.ஒரு ஜோக்
சார்..நீங்க என் அப்பாவைவிட பெரியவங்க.
தம்பி என்ன சொல்றீங்க
ஆமாம்..சின்ன வயசில என்னை தூங்க வைக்க எங்கப்பா படாத பாடு படுவார்.கதை சொல்வார்..பாடுவார்..ஆனா நீங்க இது எதுவும் இல்லாமல் பேசியே எனக்கு தூக்கத்தை வரவழித்து விடுகிறீர்கள்.//
காதால் கேட்டதா ?
:))))))))
****
கப்பல் கரையில் இருக்கும்வரை பிரச்னை இல்லை.அது கடலில் செல்லும்போதுதான் புயலை சந்திக்க நேரிடும்.ஆனாலும் கப்பல் என்பது..கரையில் இருக்க கட்டப்பட்டதில்லை.பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வதில்தான் திறமை இருக்கிறது.
****
தவறு. கரையில் இருக்கும் கப்பலுக்கு தான் ஆபத்து அதிகம். (சான்று - சாண்டில்யனின் கடல் புறா - பாகம் 2. பக்கம் - 246)
****
அச்சத்தை தவிருங்கள்..இதுதான் என் வழி என தீர்மானியுங்கள்.பின்..அந்த லட்சியத்தில் முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள்.நமக்கு அதில் பயணம் மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்
****
பயணம் மட்டுமே நமது குறிக்கோள். ரொம்ப அருமையான வார்த்தைகள்.
*****
ஒரு ஜோக்
சார்..நீங்க என் அப்பாவைவிட பெரியவங்க.
தம்பி என்ன சொல்றீங்க
ஆமாம்..சின்ன வயசில என்னை தூங்க வைக்க எங்கப்பா படாத பாடு படுவார்.கதை சொல்வார்..பாடுவார்..ஆனா நீங்க இது எதுவும் இல்லாமல் பேசியே எனக்கு தூக்கத்தை வரவழித்து விடுகிறீர்கள்.
******
பதிவு மூலமா தூக்கம் வரவழைத்தால் ?
வருகைக்கு நன்றி கோவி
//மணிகண்டன் said...
****
கப்பல் கரையில் இருக்கும்வரை பிரச்னை இல்லை.அது கடலில் செல்லும்போதுதான் புயலை சந்திக்க நேரிடும்.ஆனாலும் கப்பல் என்பது..கரையில் இருக்க கட்டப்பட்டதில்லை.பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வதில்தான் திறமை இருக்கிறது.
****
தவறு. கரையில் இருக்கும் கப்பலுக்கு தான் ஆபத்து அதிகம். (சான்று - சாண்டில்யனின் கடல் புறா - பாகம் 2. பக்கம் - 246)//
அது சாண்டில்யனின் எண்ணம்..இது என் எண்ணம்.அவரவர் எண்ணங்கள் மாறுபடலாம்
//மணிகண்டன் said...
ஒரு ஜோக்
சார்..நீங்க என் அப்பாவைவிட பெரியவங்க.
தம்பி என்ன சொல்றீங்க
ஆமாம்..சின்ன வயசில என்னை தூங்க வைக்க எங்கப்பா படாத பாடு படுவார்.கதை சொல்வார்..பாடுவார்..ஆனா நீங்க இது எதுவும் இல்லாமல் பேசியே எனக்கு தூக்கத்தை வரவழித்து விடுகிறீர்கள்.
******
பதிவு மூலமா தூக்கம் வரவழைத்தால் ?//
எனக்கு தெரிஞ்ச ஒருவர் பதிவை தட்டச்சு செய்யும் போதே தூங்குவார்
வருகைக்கு நன்றி மணி
/
எனக்கு தெரிஞ்ச ஒருவர் பதிவை தட்டச்சு செய்யும் போதே தூங்குவார்
/
ஹைய்யா எனக்கு தெரியுமே அது நீங்கதானே!
:)))))))))))
///மங்களூர் சிவா said...
/
எனக்கு தெரிஞ்ச ஒருவர் பதிவை தட்டச்சு செய்யும் போதே தூங்குவார்
/
ஹைய்யா எனக்கு தெரியுமே அது நீங்கதானே!
:)))))))))))//
பிறரையும் தன்னைப்போல் பாவிக்கும்..உங்களுக்கு என் பாராட்டு சிவா
:-))
வாண்டையார் சொல்வதுதான் மிகப் பெரிய ஜோக்..!
வேறென்ன செய்றது.. அவரை நம்பியிருக்குறவங்களுக்கு ஏதாவது தைரியம் சொல்ல வேண்டாமா..? அதான்..!
வருகைக்கு நன்றி உண்மைத் தமிழன்
காலையிலேயே கண்ணக்கட்டுதே
//குடுகுடுப்பை said...
காலையிலேயே கண்ணக்கட்டுதே//
குடுகுடுப்பைக்கு காலைலேயே கண்ணைக்கட்டினா...தொழிலை எப்படி பார்க்கறது
வாண்டையார் மாதிரி ஆளுகதான் நகைச்சுவை உணர்ச்சி செத்துப் போகாமக் காப்பத்துறாரு. இல்லைன்னா பாசக்கிளிகளும் உளியின் ஓசையிலும் என்றோ செத்திருப்போம்.
வருகைக்கு நன்றி வேலன்
Post a Comment