Wednesday, July 29, 2009

அ.தி.மு.க., எம்.பி., தேர்தல் செலவும்..எஸ்.வி.சேகரும்..

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்..தென்சென்னையில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.இதையடுத்து..ஒவ்வொரு வேட்பாளர்களும் தான் செய்த செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

எஸ்.வி.சேகர்..அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.பத்திரிகையாளர்களிடையே பேசிய சேகர்..நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., வெல்ல தான் 6 லட்சம் செலவு செய்ததாகவும்..மயிலை தொகுதியில்தான் அ.தி.மு.க., விற்கு அதிக வாக்குகள் விழுந்தன என்றும் கூறியுள்ளார்.மேலும் 17 ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க.,விற்கு கிடைத்த வெற்றி இது என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஓராண்டுகாலமாகவே..ஓரம்கட்டப்பட்ட சேகர் ஏன் 6 லட்சம் செலவு செய்தார்?

வேட்பாளர் செலவு செய்த கணக்கில் இந்த பணம் சேர்த்துக் காட்டப்பட்டுள்ளதா?

இல்லையெனில்..கணக்கில் வராமல் செலவு செய்துள்ளதா இப்பணம்.அதுவும் ஒரு சட்டசபைதொகுதியில்.
(6 சட்டசபை தொகுதி ஒரு பாராளுமன்றதொகுதி)

சேகர் சொல்வது உண்மையெனில்..தேர்தலில் தி.மு.க., பணத்தை வாரி விட்டு..வெற்றி பெற்றது என்று ஜெ சொன்னது..அவருக்கும் பொருந்தும் அல்லவா?

தேர்தல் ஆணையம்..வேட்பாளர் கணக்கை ஆய்வு செய்யுமா?

11 comments:

மணிகண்டன் said...

என்ன சார் ? கொஞ்ச நாளா நகைச்சுவை பகுதி சரியா வரலைன்னு ஆதங்கமா ? உங்களோட ஒவ்வொரு கேள்வியும் புல்லரிக்க வைக்குது !!!!!

மணிகண்டன் said...

திருச்சில BSP சார்பா MP election ல நின்றவர் கூட பேசிக்கிட்டு இருந்தேன். மூவாயிரம் வாக்குகள் வாங்கினார். அவரே 11 லட்சம் ரூபா செலவழித்தார் ! சும்மா கூட சுத்தறவங்களுக்கு செலவு பண்ணினாலே இவ்வளவு ஆயிடுமாம் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நாம நகைச்சுவைன்னு சொல்ற சில விஷயங்கள் சீரியஸ் ஆயிடுது மணிகண்டன்

தினேஷ் said...

ஏண்ணே ஒரு சமஉ 6 லெட்சம் நாமஉக்கு செலவு செய்ரெதெல்லாம் கால் தூசுக்கு சமம்னே .. இங்கே சாதாரண பஞ்சாயத்து தலைவர் இல்ல கவுன்சிலர்க்கே 3 லெட்சம் அசால்ட்டு..

இதெல்லாம் ஜுஜூபி

மணிகண்டன் said...

***
நாம நகைச்சுவைன்னு சொல்ற சில விஷயங்கள் சீரியஸ் ஆயிடுது மணிகண்டன்
***

உண்மை தான்.

உடன்பிறப்பு said...

சேகர் சொல்வது உண்மையெனில்..தேர்தலில் தி.மு.க., பணத்தை வாரி விட்டு..வெற்றி பெற்றது என்று ஜெ சொன்னது..அவருக்கும் பொருந்தும் அல்லவா?

/\*/\

இதை ஆரம்பிச்சவங்களே அவங்க தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சூரியன் said...
ஏண்ணே ஒரு சமஉ 6 லெட்சம் நாமஉக்கு செலவு செய்ரெதெல்லாம் கால் தூசுக்கு சமம்னே .. இங்கே சாதாரண பஞ்சாயத்து தலைவர் இல்ல கவுன்சிலர்க்கே 3 லெட்சம் அசால்ட்டு..

இதெல்லாம் ஜுஜூபி//

வாக்காளர் அல்லாத ஒருவர்..வாக்காளருக்காக செலவு செய்வது பற்றிய பதிவுதான் இது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உடன்பிறப்பு said...
சேகர் சொல்வது உண்மையெனில்..தேர்தலில் தி.மு.க., பணத்தை வாரி விட்டு..வெற்றி பெற்றது என்று ஜெ சொன்னது..அவருக்கும் பொருந்தும் அல்லவா?

/\*/\

இதை ஆரம்பிச்சவங்களே அவங்க தான்//

ஊரறிந்த ரகசியம்

உடன்பிறப்பு..உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன்..என் முந்தைய பதிவை பார்க்கவும்.

உடன்பிறப்பு said...

ஐயா உங்கள் விருதினை பெற்றுக் கொண்டு பின்னூட்டம் இட்டிருக்கிறேன். மிக்க நன்றி ஐயா

நையாண்டி நைனா said...

கொலப்பத்தை உண்டு பண்ணாமே இருக்க முடியாது போல இருக்கே....?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நையாண்டி நைனா said...
கொலப்பத்தை உண்டு பண்ணாமே இருக்க முடியாது போல இருக்கே....?//

:-))