Tuesday, July 7, 2009

திரை இசைமேதை ஆர்.சுதர்சனம்

ஆர்.சுதர்சனம் என்ற திரைப்பட இசையமைப்பாளரை நம்மில் பலர் மறந்திருப்போம்..அல்லது தெரியாது இருந்திருப்போம்.

அவர் இசை அமைப்பில் வந்த படப்பாடல்கள் அருமை.அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஏவி.எம்.,மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான இவர்...நாம் இருவர் படத்தில் பாரதி பாடல்களுக்கு இசையை பிரமாதமாக அமைத்துள்ளார்.அவற்றில் ஒரு பாடல் "ஆடுவோமே..பள்ளு பாடுவோமே"

அறிஞர் அண்ணாவின்..திரைக்கதை வசனத்தில் வந்த ஓர் இரவு படத்தில்..'அய்யா சாமி' பாடலும்...'துன்பம் நேர்கையில்' பாடல்கள் இவர் இசை அமைத்தவை.பிந்தைய பாடலின் ஆசிரியர் பாரதிதாசன்.

களத்தூர் கண்ணம்மா படப்பாடல்கள் அருமை.'ஆடாத மனமும்' 'அருகில் வந்தாள்' குறிப்பிடத்தக்கவை.

கொஞ்சும் சலங்கை..'சிங்கார வேலனே' இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தெய்வப்பிறவி..'அன்பால தேடிய" மறக்க முடியா பாடல்.

அன்னை படத்தில்..பானுமதி பாடிய "அன்னை என்பவள்'பாடல்,சந்திரபாபு பாடிய 'புத்தியுள்ள மனிதரெல்லாம்" இவர் திறமைக்குச் சான்று.

காட்டு ரோஜா படத்தில்...'ஏனடி ரோஜா" பாடலும்..பி.பி.ஸ்ரீனிவாசன் பாடிய..கண்ணதாசனின்..'எந்த ஊர் என்றவனே" அருமையானவை.

திலகம் என்ற படத்தில்..'B..O..Y..பாய்' பாடல்..அந்த நாளில் பிரசித்தம்.

'கண்ணா கருமை நிறக் கண்ணா' பாடல் மட்டுமில்லாது..நானும் ஒரு பெண் பாடல்கள் அனைத்தும் அருமை.

பெண் படத்தில்...'கல்யாணம்' என்ற பாடல்..எஸ்.பாலசந்தருக்காக..சந்திரபாபு பிண்ணனி பாடிய பாடல்.

பராசக்தியில் அனைத்து பாடல்களும்..குறிப்பாக..'கா..கா..கா..'பாடல்.மற்றும் பூமாலை நீ ஏன் பிறந்தாய் பாடல்கள்

ஸ்ரீவள்ளி படத்தில்...கானாத காயகத்தே..இன்றும் பல திருவிழாக்களில் தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது.

தவிர்த்து..கலைஞரின்..பூம்புகாரில்..'என்னை முதன் முதலாய்' பாடல்..பூமாலையில்..'பாரிஸ் நகர பியூட்டி' பாடல்..

இப்படி...தேனினும் இனிய பல பாடல்களுக்கு இசை அமைத்தவர் சுதர்சனம்.

ஏ.வி.எம்.மின் லோகோ விற்கு இசை அமைத்தது இவர்தான்... இன்றும் நம் காதுகளில் தினம் ஒலித்துக் கொண்டிருக்கிறது அது.

6 comments:

குடுகுடுப்பை said...

நீங்க சிறுவனா இருந்தப்ப வந்த படங்களா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

இசைக்கு வயதில்லை அல்லவா?
இதில் பல பாடல்களை நீங்களும் கேட்டிருப்பீர்கள்

சகாதேவன் said...

பெண் படத்தில் சுதர்சனம் இசையில் டி.எஸ்.பகவதி பாடிய, 'பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா, இனி போதும் மலர் கண்ணனே' கல்யாணி ராகத்தில் அமைந்த பாட்டு லிரிக் எழுதினேன். பார்த்து சொல்லுங்களேன்.
சகாதேவன்

goma said...

அத்தனை பாடல்களும் மனதை விட்டு இன்றும் அகலாத இசை தேன் சொட்டுக்கள்.
அருமையான நினைவூட்டல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சகாதேவன் said...
பெண் படத்தில் சுதர்சனம் இசையில் டி.எஸ்.பகவதி பாடிய, 'பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா, இனி போதும் மலர் கண்ணனே' கல்யாணி ராகத்தில் அமைந்த பாட்டு லிரிக் எழுதினேன். பார்த்து சொல்லுங்களேன்.
சகாதேவன்//


பொல்லாத்தனத்தை..பாடலை ஏ.பி.கோமளா பாடியிருக்கிறார்.படத்தில் அஞ்சலி பாடியபடியே நடனம் ஆடுவார்.வருகைக்கு நன்றி சகாதேவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
அத்தனை பாடல்களும் மனதை விட்டு இன்றும் அகலாத இசை தேன் சொட்டுக்கள்.
அருமையான நினைவூட்டல்//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி கோமா