Wednesday, July 1, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.நம்ம தலைவரோட வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது?
பழக்க தோஷத்திலே வேட்பு மனுவுக்கு பதிலா முன் ஜாமீன்
மனுவை தாக்கல் பண்ணிட்டாராம்.

2.டாக்டர் என் மனைவி உட்காரவே மாட்டேன்னு சொல்லறா..
எப்பவும் நின்னுக்கிட்டேதான் இருக்கா..
அப்படியா? உன் பெயர் என்னம்மா?
அமராவதி

3.கட்சி அலுவலகத்தை தலைவர் ஏன் a \c பண்றார்?
அவர் கிட்ட எல்லாருக்கும் குளிர் விட்டுப்போச்சாம்.
4.என் பையன் போற போக்கைப் பார்த்தா கவலையாயிருக்கு..
மதிக்கவே மாட்டேன்னு சொல்றான்.
உங்களையா ?
அவன் மனைவியை

5.அலுவலகத்திற்கு நேரமாயிடுச்சுன்னு சொல்றீங்க..ஆனா
போறப்போ வெத்தலை,பாக்கு பழம் எல்லாம் எடுத்துட்டு
போறீங்களே..ஏன்?
அலுவலகத்திற்கு தாமதமாய் போனால் அதிகாரி அர்ச்சனை
பண்ணுவார்னு சொன்னாங்க..அதுக்குத்தான்... .

11 comments:

அகநாழிகை said...

//கட்சி அலுவலகத்தை தலைவர் ஏன்
a \c பண்றார்?
அவர் கிட்ட எல்லாருக்கும் குளிர் விட்டுப்போச்சாம்.//

இது நல்லாயிருக்கே,

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Unknown said...

அனைத்தும் நன்று. வாய்விட்டு அல்லது மனம் விட்டாவது சிரிக்க வேண்டும் என்றால் அடிக்கடி தங்கள் blogற்கு வந்து போகலாம்.

மங்களூர் சிவா said...

:)))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வாசு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ananth
சிவா

கோவி.கண்ணன் said...

//2.டாக்டர் என் மனைவி உட்காரவே மாட்டேன்னு சொல்லறா..
எப்பவும் நின்னுக்கிட்டேதான் இருக்கா..
அப்படியா? உன் பெயர் என்னம்மா?
அமராவதி//

:))))))

"போலிஸ்கார் போலிஸ்கார்.. என் மனைவி அடிக்கடி காணமல் போய்விடுகிறாள்"
"அப்படியா உங்க மனைவி பெயர் என்ன ?"
"மாயாவதி"

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

கோவியார் சொன்னது அருமையிலும் அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...உங்க ஜோக்கிற்கும் நன்றி.ஜோக் அருமை கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி துபாய் ராஜா

cheena (சீனா) said...

சூபர் ஜோக்ஸ் - சுண்டல் காரம் மணம் நிறைந்து இருக்கு

நல்வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி cheena sir