Wednesday, July 15, 2009

நீண்ட நாட்கள் வாழ....

இன்று மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது.ஆண்களின் சராசரி வயது 64 ஆகவும்..பெண்களின் சராசரி வயது 65 ஆகவும் உள்ளது.

சிலர் சைவ சாப்பாடு சாப்பிட்டால்..நீண்ட நாட்கள் இருக்கலாம் என எண்ணுகின்றனர்.

நீண்ட நாள் வாழ சைவ,அசைவ சாப்பாடுகள் காரணமில்லை.

சுத்த சைவமான ராஜாஜியும் 94 வயது வாழ்ந்தார்...கடைசி வரை பிரியாணியை விரும்பி உண்ட தந்தை பெரியாரும் 94 ஆண்டுகள் இருந்தார்.

நீண்ட நாட்கள் வாழ குடும்ப ஜீன்ஸ் ஒரு காரணம் என்றாலும்...கட்டுப்பாடான வாழ்க்கையும் அவசியம்.

அளவான சாப்பாடு

உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)

உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.

சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.

மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.

மனம் களங்கம் இல்லை என்றாலே...மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.

நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்கிறோமா?துன்பமாய் இருக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.

இயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.

எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.பாரதி இன்பமாய் நினைத்தவை...எதை எதைத் தெரியுமா?

தண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.
தீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்தாலே இன்பம் (தீபம்)
மண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.
காற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.
ஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்
நட்சத்திரக் கூட்டம் இன்பம்.
தவிர..உயிர்களிடத்தில் பழகுதல் இன்பம்.
மனிதர் உறவு இன்பம்
அன்பு இன்பம்
உண்ணுதல் இன்பம்
உழைத்தல் இன்பம்
உறங்கல் இன்பம்
கூடுதல் இன்பம்
கற்றல் இன்பம்
கேட்டல் இன்பம்
பாடுதல் இன்பம்
பார்த்தல் இன்பம்
எழுதுதல் இன்பம்

இப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்


ஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது...இன்பமாய் வாழ்வோம்.

இறந்த பின் சொர்க்கம் போக வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டு...வாழும் போது..வாழ்வை..நரகமாய் ஆக்கிக் கொள்ளாது சொர்க்கமாய் ஆக்கிக் கொள்வோம்

10 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல இடுகை

ஓட்டுக்கள் போட்டாச்சு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)

நாஞ்சில் நாதம் said...

இதை படித்தலும் இன்பம்

மாதங்கி said...

நல்லாயிருக்கு

அக்னி பார்வை said...

ஒரு முறை ரஜினி கூட சொன்னார் ”வெள்ளை நிற உண்வுகளை ஒரு வயதுக்கு மேல் தவிர்பது நல்லது என்று”..உங்க பதிவை படித்ததும் அது தான் என் நினைவிற்கு வருகிறது..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் ..பாராட்டுதலுக்கும் நன்றி
நாஞ்சில் நாதம்
மாதங்கி
அக்னி பார்வை

goma said...

உண்மைதான் மனமே ரிலாக்ஸ் என்றிருந்தால் கவலையெல்லாம் மாயமாய் போயே போச்சு என்றாகும்
நல்ல பதிவு

மங்களூர் சிவா said...

சூப்பர்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பதிவு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் ..பாராட்டுதலுக்கும் நன்றி
goma
சிவா
Starjan