வரும் சட்டசபை இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிக்கும் என ஜெ அறிவித்துள்ளார்.
அதற்கு அவர் கூறும் காரணங்களில் ஒன்று..'மின்னணு இயந்திரத்தை பயன்படுத்துவது'.ஏற்கனவே அதன் பட்டனை அழுத்தினால்..ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே வாக்குகள் விழுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.பி.ஜே.பி.,கூட தேர்தல் ஆணையம்..இது குறித்த சந்தேகங்களை போக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சற்று யோசித்துப் பார்த்தால்..தமிழ்மண பரிந்துரையும் அப்படித்தான் இருக்கிறது...எனக்கு போடப்படும் தம்ஸப் வாக்குகளும்..தம்ஸ் டௌனில் விழுவதாக நினைக்கிறேன்.தேவையில்லாமல் எனக்கு நெகடிவ் வாக்குகள் விழுகின்றன.
ஒரு..உதாரணம்..என் சமீபத்திய..சன் டீவிக்கு கண்டனம் பதிவு..இதில் எதிர்த்து வாக்களிக்க என்ன இருக்கிறது.
தமிழ்மணம் என்னைப் போன்றோரின்..சந்தேகத்தை தீர்த்து வைக்கவேண்டும்.
அல்லது..குறைந்த பட்சம்..குறிப்பிட்ட பதிவிற்கு..ஏன் எதிர்த்து வாக்களிக்கிறோம்..என வாக்களித்தவரின் எண்ணத்தையாவது..சம்பந்தபட்டவர் அறிய வகை செய்தல் வேண்டும்.
அதுவரை வாசகர் பரிந்துரையை புறக்கணிக்க..எங்கள் செயல்குழு முடிவெடுத்துள்ளது.
11 comments:
ஓ.கே.. ஓகே.., நாங்கள் பரிந்துரைந்துவிட்டோம்
ஆனால் தமிழ் மணத்தில் ஓட்டுப் போட முடியவில்லை
அண்ணே நா ஓட்டு போட்டுட்டேன்(எதாவது பாத்து போட்டு கொடுங்க)அஞ்சு இடத்தில ஏமாத்திட்டாங்க
நானும் தமிழ் மணத்தில் ஓட்டு போட என்னென்னவோ வழிமுறைகளைப் பின் பற்றி பார்த்து விட்டேன். ஒன்றும் முடியவில்லை. தமிழ் மணத்தார் என் பெயரை blacklist செய்து விட்டார்கள் போலும். (அப்படிதான் சொல்ல தோன்றுகிறது.) நொந்து போய் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டேன். தமிழிஷில் இந்த பிரச்சினை இல்லை. அவ்வப்போது தங்களுக்கு ஓட்டு போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்
வருகைக்கு நன்றி சுரேஷ்
//தண்டோரா said...
அண்ணே நா ஓட்டு போட்டுட்டேன்(எதாவது பாத்து போட்டு கொடுங்க)அஞ்சு இடத்தில ஏமாத்திட்டாங்க//
உங்கள் கோரிக்கை..பரிசீலனையில் உள்ளது
//ananth said...
நானும் தமிழ் மணத்தில் ஓட்டு போட என்னென்னவோ வழிமுறைகளைப் பின் பற்றி பார்த்து விட்டேன். ஒன்றும் முடியவில்லை. தமிழ் மணத்தார் என் பெயரை blacklist செய்து விட்டார்கள் போலும். (அப்படிதான் சொல்ல தோன்றுகிறது.) நொந்து போய் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டேன். தமிழிஷில் இந்த பிரச்சினை இல்லை. அவ்வப்போது தங்களுக்கு ஓட்டு போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்//
நன்றி ananth
அது சரி செயற்குழுவில் யார் யாரெல்லாம் உறுப்பினர்
அடடா...செயற்குழு என்றால்..என்னவென்று தெரியாதா அக்னி...
நானே தலவர்,செயலர் உறுப்பினர்
:-))
நானும் புறக்கணிக்க முடிவு செய்துவிட்டேன்!
//வால்பையன் said...
நானும் புறக்கணிக்க முடிவு செய்துவிட்டேன்!//
நன்றி வால்
Post a Comment