Thursday, July 9, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 17

1971ல் வந்த படங்கள்
இரு துருவம்
தங்கைக்காக
அருணோதயம்
குலமா குணமா
பிராப்தம்
சுமதி என் சுந்தரி
சவாலே சமாளி
தேனும் பாலும்
மூன்று தெய்வங்கள்
பாபு

இவற்றில் 3 படங்கள் 100 நாள் படங்கள்.அவை குலமா குணமா,சவாலே சமாளி,பாபு.

கே.எஸ்.ஜி.,படம்..குலமா குணமா..பாடல்கள் அருமை..பத்மினி நாயகி

சிவாஜியின் 150 ஆவது படம் சவாலே சமாளி..கே.எஸ்.ஜி.,யின் சீடராய் விளங்கிய மல்லியம் ராஜகோபால் தயாரிப்பு..இயக்கத்தில் வந்த படம். சிவாஜி நடிக்க வந்து 19 வருடங்களில் 150 ஆவது படம்.

சுமதி என் சுந்தரி..நல்ல கதையமைப்பு..பாடல்கள் இருந்தும் எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை.அருணோதயம்..படமும்..அப்படியே..

இரு துருவம்..பி.எஸ்.வீரப்பா படம்..படத்தின் கதையமைப்பு ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கு இல்லை.

பாபு..சிவாஜி தான் செய்த தவறுக்காக..ஒரு குடும்பத்தைக் காக்கும் பொறுப்பேற்பார்.

தேனும் பாலும்..நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததால் தோல்வியுற்ற படம். பிராப்தம்..சாவித்திரியின் சொந்தப் படம்..தோல்வி.

மூன்று தெய்வங்கள் படத்தில்.. ஜோடி,டூயட்,பாடல் ஏதுமில்லாமல் நடித்திருக்கிறார்.

இவ்வருடம்..ஒரே திரை அரங்கில் தொடர்ச்சியாக 15 மாதங்கள் சிவாஜியின் படங்கள் தொடர்ந்து ஓடி சாதனை புரிந்தது.

மதுரை..ஸ்ரீதேவி திரையரங்கில்..சென்ற வருடம் தீபாவளி முதல்..1971 முடிவு வரை தொடர்ந்து..எங்கிருந்தோ வந்தாள்,தங்கைக்காக,குலமா குணமா,சவாலே சமாளி,பாபு..என மொத்தம் 444 நாட்கள் சிவாஜி படங்கள் திரையிடப்பட்டது.

அடுத்த பதிவில் 1972 படங்களைக் காணலாம்.

10 comments:

வால்பையன் said...

சிவாஜி சார் வாங்குன காசுக்கு மேல நடிப்பாருங்குறது உண்மையா சார்!

(எங்க போனாலும் வாலு மறைய மாட்டிங்குது)

Chittoor Murugesan said...

ஒரு படத்துல சிவாஜி டைரக்டர். "போதும் விடுங்க "ங்கற டயலாகை நானாவித சிச்சுவேஷனுக்கு பேசி நடிச்சு காட்டுவாரு பாருங்க அட அட (1000 தடவை காப்பி பேஸ்ட் பண்ணனுங்க)
(Rajanadai?)

ஜோ/Joe said...

//சிவாஜி சார் வாங்குன காசுக்கு மேல நடிப்பாருங்குறது உண்மையா சார்!//

வால்பையன் சார்,
அது 100 ரூபா வாங்கிட்டு ரெண்டு பைசாக்கு கூட நடிக்க தெரியாத நடிகர்களும் அவங்க ரசிகர்களும் வயித்தெரிச்சல் பட்டு சொல்லிக்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

அன்று சற்று மிகையான நடிப்பு தேவைப்பட்டது உண்மைதான்.வருகைக்கு நன்றி வால்

ஜோ/Joe said...

//அன்று சற்று மிகையான நடிப்பு தேவைப்பட்டது உண்மைதான்//
அப்போ புடிச்சு வச்ச புள்ளையார் மாதிரி அவர் நடிக்கல்லியா இவர் நடிக்கல்லியா ..சும்மா டயலாக்கை வந்து நிண்ணு வாசிச்சிட்டு உலகத்தர நடிப்பை வழங்கல்லியா ..இப்படியெல்லாம் சொல்ல கொஞ்ச பேர் வந்துடுவாங்க..தேவையா? ஹி..ஹி ..மிகை நடிப்பு ,குறை நடிப்பு ,மத்திய நடிப்பு ,சுத்திய நடிப்பு ,பத்திய நடிப்பு என்னனென்ன நடிப்பு உண்டோ அத்தனை நடிப்புலயும் கிங் நம்ம பெருசு நடிகர் திலகம் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருகைக்கு நன்றி
chittoor.S.Murugeshan//

T.V.ராதாகிருஷ்ணன் said...

//என்னனென்ன நடிப்பு உண்டோ அத்தனை நடிப்புலயும் கிங் நம்ம பெருசு நடிகர் திலகம் .//

உள்ளங்கை நெல்லிக்கனி

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஜோ..வாலின் நோக்கமே இப்படி சர்ச்சை... சாரி....ஆரோக்யமான சர்ச்சை வரவேண்டும் என்பதுதான்.
வால் ஆயிற்றே1

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

SANKAR said...

தான் செய்த தவறுக்காக ஒரு குடும்பத்தை காப்பற்றுபவராக சிவாஜி
நடித்த படம் நீதி.பாபு கை ரிக்க்ஷா
இழுப்பவராக நடித்த படம்.இதோ எந்தன் தெய்வம் முன்னாலெ என்ற
பாடல் அருமை