Wednesday, July 14, 2010

கர்மவீரரின் 108ஆம் பிறந்தநாள்..
பெருந்தலைவர் காமராஜரின் 108ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது..அவரைப் பற்றி சில குறிப்புகள்..

1)காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு அனைக்கட்டுகள் கட்டப்பட்டன.பேச்சிப்பாறை,மணிமுத்தாறு,வைகை,ஆழியாறு,பரம்பிக்குளம்,குந்தா,கீழ்-மேல் பவானி,கிருஷ்ணகிரி,சாத்தனூர்,கோமுகி அணைகள் கட்டப்பட்டன. அவர் அதனால் அணைகளின் நாயகன் எனப்பட்டார்.

2)காமராஜர் தனது 27 ஆவது வயதில் முதன்முறையாக சிறை சென்றார்.1930ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.பின் பல முறை சிறை சென்றுள்ளார்.தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார்.தவிர்த்து..நாட்டின் விடுலை எண்ணத்திலேயே இருந்து தன் திருமணத்தை புறந்தள்ளியவர்.

3)அமெரிக்க அதிபராய் இருந்த நிக்சன் இந்தியா வந்த போது காமராஜரைப் பற்றி கேள்விப் பட்டு அவரை சந்திக்க விரும்பினார்..ஆனால் காமராஜர் அதற்கான நேரத்தை ஒதுக்கவில்லை.உதவியாளர் 'ஐயா உலகே பெருமைப்படும் அமெரிக்க அதிபரே வலிய வந்து பார்க்கத் துடிக்கும் போது...'என இழுத்தார்.
காமராஜர் அவருக்கு பதில் அளித்தார்..'அவர் பெரிய ஆளா இருக்கலாம்னேன்..ஆனா நம்ம ஊர் அண்ணாதுரை அமெரிக்கா போனப்போ நிக்சனைப் பார்க்க விருப்பப்பட்டார்..நிக்சன் பார்க்கமுடியாதுன்னு சொல்லிட்டார்.நம்ம ஊர்க்காரரை பார்க்க விரும்பாதவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றார் த்ன்மானத் தலைவர்.

4)பள்ளியில் படிக்கவரும் மாணவர்கள்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு உடையில் வருவதால் அவர்கள் மனதில் வேற்றுமை ஏறபடும் என்பதால், குழந்தைகள் மனதில் பணக்காரன்,ஏழை என்ற ஏற்றத்தாழ்வு வராமல் தடுக்க என்ன செய்யலாம் என எண்ணிய காமராஜரின் சிந்தனையில் உதித்ததுதான் இலவச சீருடைத் திட்டம்

5)ரஷ்யா செல்லும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது..மாஸ்கோவில் குளிர் வாட்டி எடுத்தும், அவர் கோட் அணியாது எளிய கதர் வேட்டி,சட்டையுடன் இருந்தார்..'நான் எந்நேரத்திலும் எந்நிலையிலும் ஓர் ஏழை இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன்' என்றார்.

6)1956ல் பள்ளியில் இலவச உணவு திட்டமும்..1960ல் பள்ளியில் இலவச கல்வியும் இவர் காலத்தில்தான் அமுலாக்கப்பட்டது.

7)காமராஜர் கடைசிவரை எம்.டி.டி. 2727 என்ற எண்ணுள்ள ஒரே சவர்லே காரை உபயோகித்தார்...சென்னையில் வாடகை வீட்டிலேயுமே இருந்தார்..தன்னலமற்ற தலைவர் அவர்.

8)காமராஜர் பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது

10 comments:

பிரபாகர் said...

ஒரு முழுமையான, உண்மையான அரசியல்வாதி என்றால் அது காமராஜ் அவர்கள் தான்! பகிர்வுக்கு நன்றிங்கய்யா!

பிரபாகர்...

ரவிச்சந்திரன் said...

பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பற்றிய பகிர்விற்கு நன்றி. நான் வணங்கும் தமிழக தலைவர்கள் இரண்டு பேர்... தந்தை பெரியார், தலைவர் காமராஜர்.

ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து இன்று நான் வாழும் வாழ்க்கை காமாராஜர் தயவால் எங்கள் ஊருக்கு கிடைத்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியினால்தான்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

வித்யா said...

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

vijayan said...

நன்றிமறவா தமிழர்கள் நாம் என்றால் மத்திய அரசின் மதிய உணவு திட்டத்திற்கு காமராஜ் பெயர் வைக்க போராடுவோம்.

வானம்பாடிகள் said...

காலை தினத்தந்தியில் ஜகஜ்ஜோதியாக காமராஜரின் இல்லம்னு படம் பார்த்ததும், அவர் இருந்திருந்தா என்ன சொல்லியிருப்பார் என்ற நினைப்பு வந்தது:)))

அக்பர் said...

அப்போது செய்த சாதனையையும் இப்போது செய்யப்படுகின்ற சாதனையையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தலை சுற்றுகிறது.

படிக்காத மேதை அவர்.

மங்குனி அமைச்சர் said...

மனிதன்

ஈரோடு கதிர் said...

நாடு பார்த்ததுண்டோ....

அந்த பாடல் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வரிகை புரிந்த அனைவருக்கும் நன்றி