நடப்பு நிதி ஆண்டில் முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் எதிர்ப்பார்ப்பைவிட குறைவாகவே வளர்ச்சிக் கண்டுள்ளதாம்.3.5 சதவிகிதம் வளர்ச்சி இருக்கும் என எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் வளர்ச்சி 2.7 சதவிகிதம் தானாம்
2)இந்தியாவில் 1000 பேரில் 62 பேருக்கு நீரிழிவு..159 பேருக்கு உயர் ரத்த அழுத்தம்..37 பேருக்கு இருதயக் கோளாறு,.ஒருவருக்கு பக்கவாதம் பாதிக்கப் பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுதும் 25 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனராம்
3)வீணை எஸ்.பாலசந்தர்..மாமேதை இசையில்..தவிர்த்து வெள்ளித்திரையில்..திரைக்கதை,வசனம், தயாரிப்பு,இசை, நடிப்பு என அஷ்டாவதானியாய் திகழ்ந்தார்.அந்தநாளிலேயே பாடல்கள் இடம் பெறாமல்
புரட்சி ஏற்படுத்திய படம் இவரின் 'அந்த நாள்'..இது எல்லாம் நாம் அறிந்த செய்திகள்..ஆனால் அவர் ஏழு வயதிலேயே செஸ் விளையாட்டில் அகில இந்திய சேம்பியனாகத் திகழ்ந்தாராம்
4)ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கு செப்டம்பர் 3ஆம் நாள் திருமணம் நடக்க உள்ளது.திருமணத்திற்கு சோனியாவும்..ராகுலும் வரக்கூடுமாம்...வழுவும் மீனுக்கு காங்கிரஸ் வலை வீசிப் பார்க்கிறதோ!!!
5)சென்னையில் 1000 பேரில் 45 பேரிடம் கார் உள்ளது.ஆண்டுதோறும் சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்து வருகிறதாம்..
6) செம்மொழி மாநாட்டில் கவியரங்கத்தில் வாலி..'சோ வின் ஐய நோக்கு..அது ஐய நோக்கல்ல அய்யர் நோக்கு'.. என்றார்..கலைஞர் ரசிக்க வேண்டும் என வாலி அப்படி சொன்னது 'அய்யங்கார் நோக்கு' என்பாரோ சோ :)))
7)கொசுறு ஒரு ஜோக்
செம்மொழி மாநாட்டிற்கு எப்படி போனே?
பஸ்ல சீட் கிடைக்காம..டிரைன்லயும் டிரை பண்ணி ஃபுல் ஆனதால் டட்கல்ல ரிசர்வ் பண்ணியும் டிரைன்ல கிரௌட்ல மாட்டிண்டு போனேன்..ஸ்டேசன்ல இருந்து டாக்சியோ..ஆட்டோவோ கிடைக்காம சஃபர் ஆகி மிட்னைட்லதான் லாட்ஜுக்குப் போனேன்
14 comments:
z:)
/6) செம்மொழி மாநாட்டில் கவியரங்கத்தில் வாலி..'சோ வின் ஐய நோக்கு..அது ஐய நோக்கல்ல அய்யர் நோக்கு'.. என்றார்..கலைஞர் ரசிக்க வேண்டும் என வாலி அப்படி சொன்னது 'அய்யங்கார் நோக்கு' என்பாரோ சோ :)))//
நேக்கு புரியறது.....அவா இரண்டு பேருக்கும் புரியுமோன்னு தெரியல :)
ஏழாவது அருமை ஐயா; நல்லா சிரிக்க வைத்தது
veru nice joke.ilikeit.cable shankar sir thai is ur photo
7:)))
நல்ல தகவல்கள்... அந்த கடைசி ஜோக் அருமை.. உண்மையும்கூட...
:))
ருசியாக இருந்தது.:)
நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன் நன்றி ஐயா.
ருசி மிக்க சுண்டல் :-).
//நேக்கு புரியறது.....அவா இரண்டு பேருக்கும் புரியுமோன்னு தெரியல :)//
நோக்கு புரிஞ்சதுல ரொம்ப சந்தோஷம் கோவி கண்ணன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
செம்மொழி மாநாட்டிற்கு எப்படி போனே?
பஸ்ல சீட் கிடைக்காம..டிரைன்லயும் டிரை பண்ணி ஃபுல் ஆனதால் டட்கல்ல ரிசர்வ் பண்ணியும் டிரைன்ல கிரௌட்ல மாட்டிண்டு போனேன்..ஸ்டேசன்ல இருந்து டாக்சியோ..ஆட்டோவோ கிடைக்காம சஃபர் ஆகி மிட்னைட்லதான் லாட்ஜுக்குப் போனேன்
//
ஹா ஹா ஹா... ஜோக் நல்லாருக்கு....
மாநாட்டின் நிகழ்ச்சி ஒன்றில் கடவுள் வாழ்த்து பாட சீர்காழி சிவசிதம்பரத்த அழைக்கும் போது "டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்" என்று அழைத்தார்கள். "முனைவர் சீர்காழி சிவசிதம்பரம்" என்று அழைத்திருக்கலாமே என்று நான் நினைத்தேன்...
வருகை புரிந்தவர்கள்..கருத்து தெரிவித்தவர்கள் அனைவருக்கும் நன்றி
//வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said
முனைவர் சீர்காழி சிவசிதம்பரம்" என்று அழைத்திருக்கலாமே என்று நான் நினைத்தேன்...//
சீர்காழி சிவசிதம்பரம் முனைவர் அல்ல..உண்மையில் டாக்டர் தான்..மருத்துவர் என சொல்லியிருக்கலாம்
Post a Comment