ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Monday, July 19, 2010
எந்திரனும்..திரையரங்க உரிமையாளர்களும்..
திரையரங்கு உரிமையாளர்கள் என்ன பாடு படப்போகிறார்களோ!!!
மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள எந்திரன் படப்பிடிப்பு முடிந்து விட்டது..ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம்.
ஆனால் குறிப்பாக இப்படிப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது அவை மினிமம் கேரன்டி/விழுக்காடு அடிப்படையிலேயே வெளியாகும்.
படங்கள் திரையரங்குகளில் நான்கு வித ஒப்பந்தங்களில் வெளியாகிறது..
முதல் - மினிமம் கேரன்டி..இந்த தொகையை அதிகமாக எந்த தியேட்டர் கொடுக்கிறதோ..அவர்கள் திரையரங்கிற்கு படம் கொடுக்கப் படுகிறது.வசூல் குறைவாக இருந்தால் நஷ்டம் திரையரங்க உரிமையாளருக்கு.ஆனால் கேரன்டி தொகையை விட அதிகம் வசூல் அதிகமானால்..அதிகப்படியாக ஆகும் தொகையில் பாதி தயாரிப்பாளருக்கு..பாதி திரையரங்கிற்கு..
உதாரணமாக மினிமம் கேரண்டி 60 லட்சம் எனில்..வசூல் பத்து லட்சம்தான் என்றால் திரையரங்கிற்கு 50 லட்சம் நஷ்டம்
அதுவே 80 லட்சம் வசூல் என்றால் லாபம் 20 லட்சத்தில் 10 லட்சம் தயாரிப்பாளருக்குக் கொடுக்க வேண்டும்.பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களும்..பெரிய நட்சத்திரங்கள் படமும் இந்த அடிப்படையிலேயே திரையிடப்படுகின்றன..ஆகவே படம் தோல்வியடைந்தாலும்..எதிப்பார்த்த வசூல் செய்யவில்லை என்றாலும் நஷ்டம் திரையரங்கிற்கு மட்டுமே.
இரண்டு- விழுக்காடு அடிப்படை..70:30., 65:35.,60:40 இப்படி..70:30 எனில் 70விழுக்காடு தயாரிப்பாளர்களுக்கு 30 விழுக்காடு திரையரங்கிற்கு.... திரையரங்கிற்கு..திரையரங்கு விழுக்காடு மாறுபடும்
மூன்று-ஃபிக்ஸட் ரேட்..படத்திற்கு இவ்வளவு தொகை தியேட்டர் அதிபர்கள் விலை கொடுத்து வாங்குவார்கள்.தொடர்ச்சியாக படம் ஓட வேண்டும்.பின் பெட்டி தயாரிப்பாளரிடம் ஒப்படைத்து விட வேண்டும்.
நான்கு-தியேட்டர் வாடகையை படத் தயாரிப்பாளர் முன் கூட்டியே தியேட்டருக்கு கொடுத்து விட வேண்டும்..சின்ன பட்ஜெட் படங்களுக்கு இது ஒத்து வராது.
மினிமம் கேரன்டி யில் பிரபலங்கள் படம் வருவதாலேயே சுறா,குசேலன் போன்ற படங்கள் நஷ்டத்தைக் கொடுத்தன..
எந்திரன் என்ன செய்யப்போகிறான் எனப் பார்ப்போம்
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இதெல்லாம் எங்க போய் சார் படிக்கிறது:))
//மினிமம் கேரன்டி யில் பிரபலங்கள் படம் வருவதாலேயே சுறா,குசேலன் போன்ற படங்கள் நஷ்டத்தைக் கொடுத்தன..//
எல்லாம் ஓகே, நஷ்டத்தை தயாரிப்பாளரிடம் தானே கேக்கணும், எதுக்கு ரஜினி, விஜய் இடம் கேட்டார்கள்
வருகைக்கு நன்றி Bala
வருகைக்கு நன்றி எப்பூடி..
திரையரங்குகள் நஷ்டம் அடைவதால் இனி ரஜினி,விஜய் படங்களை போடமாட்டோம் என பொதுவில் சொல்வது..சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு கௌரவ பிரச்னையாகி..ஒரு கட்டத்தில் தங்களது வர விருக்கும் படங்களை எண்ணி பிரபலங்களே இதைப் பற்றி பேசிவிடுகின்றனர்.
அது போகட்டும் இவர்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டலே தயாரிப்பு செலவு குறையுமே
சினிமா வியாபாரம். :) :)
வருகைக்கு நன்றி Surya
Post a Comment