Sunday, July 25, 2010

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...

பதிவுலகம் என்பது நமக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்.

அச்சில் பார்க்க முடியா நம் படைப்புகளை..நம் வலைப்பூவில் எழுதி..அதை மற்ற பதிவர்களும் படித்து..அதற்கான பின்னூட்டம் இட்டு...ஆதரவு ஒட்டுகள் பெற்று...அடடா..நம் எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்ற மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

தவிர்த்து..நமக்குள் ஒரு அருமையான நட்பு வட்டத்தையும் உருவாக்குகிறது.

இன்று..அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்ற வலைப்பூ, கட்சிகளே நடத்தும் வலைப்பூ, குறிப்பிட்ட ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்கும் வலைப்பூ என அனேகம் உள்ளன.

சமீபத்தில் சர்ச்சைக் குரிய ஒரு நிகழ்வு குறித்து ஊடகங்கள் பற்றியும்,அரசியல் தலைவர்களை இணைத்தும் பல பதிவர்கள் பதிவிட்டிருந்தனர்.

நான் அதை தவறு என்று சொல்லவில்லை.. நம் கருத்தை நாம் தெரிவிப்பது தவறில்லை..

ஆனால் குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும்..

எல்லை மீறும் எந்த ஒரு செயலும்,நிகழ்வும் தவறாகும்.

பதிவர்கள் நாம் பெரும்பாலோர் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து, மாதசம்பளம் பெற்று வாழ்க்கையை ஓட்டுபவர்கள்.அவர்களுக்கு ஊடக பின்பலமோ,அரசியல் பின்பலமோ இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு...ஏன்..இல்லையென்றே கூறலாம்.

ஆகவே பதிவர்கள்...சர்ச்சை பதிவுகளுக்கும்..உணர்ச்சி தூண்டப்படும் பதிவுகளுக்கும்..அரசியல் ஆதாயம் வேண்டி எழுதப்படும் பதிவுகளுக்கும்..வரம்பு மீறாமல்..எல்லை மீறாமல் .சட்டச்சிக்கலில் மாட்டாதவிதமாக தங்கள் எண்ணங்களை பதிவிடவும்..

மீறி பதிவிடும்போது..சிக்கல்கள் வந்தால்..நம் எழுத்தால் ஆதாயம் அடைந்த யாரும் , நம் உதவிக்கு வர மாட்டார்கள் என்பதை மறக்காதீர்கள்.

35 comments:

அமைதி அப்பா said...

சரியான நேரத்தில், நல்ல வழிக்காட்டல்.
நன்றி.

Jey said...

நல்ல வழிகாட்டுதல். அனுபவத்தின் வெளிப்பாடு தெரிகிறது. நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

அருமையான கருத்து.நான் கூட நல்ல நேரம் சதீஷ் உடன் இது பற்றி விவாதித்தேன்.

பா.ராஜாராம் said...

உண்மை டி.வி.ஆர் சார்!

செந்தழல் ரவி said...

வேறு வகையில் பார்த்தால் இது 'ஒதுங்கிப்போங்கள்' என்ற வகையிலான வேண்டுகோளே !!!

மாத சம்பளம் வாங்குபவர்கள் சமூகத்தில் நடக்கும் அவலத்தை கண்டும் காணாமல் போய்விடவேண்டும் என்பது எந்த வகையில் நியாயம் ?

விபத்து நடைபெறுகிறது என்பதால் யாரும் சாலையில் இறங்காமல் இருக்கிறார்களா என்ன ?

சகமனிதன் சாக கிடக்கும்போது சமையல் குறிப்பு போடுவதும் ஒரு வகையில் சாடிஸம், சைக்கோத்தனமே !!!

நடிக்கச்சொல்கிறீர்கள். அது போலியான வாழ்க்கை. இயல்பாக இருக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்..

வாழும் கொஞ்ச நாளில், சாப்பிட்டு, தூங்கி, பாத்ரூம் போய், புள்ளை குட்டிகளை வளர்த்து, படிக்க வைத்து, ம்றுபடி சாப்பிட்டு தூங்கி செத்துப்போகும் சுயநலமிகளாக, தனிமனிதர்களாக எல்லோரும் இருந்துவிட்டால் ஊழல்வாதிகள், பொறுக்கிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வளையவருவார்கள். தேவையா ?

நான் இதை பதிவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், சமூகத்தின் அங்கமான தனிமனிதர்களாக பார்த்து எழுதுகிறேன். பதிவும் சமூக நடவடிக்கைகளின் நீட்சிதானே ?

செந்தழல் ரவி said...

முதல் முறையாக உங்கள் பதிவுக்கு என்னுடைய மைனஸ் வாக்கை செலுத்துகிறேன்.

சவுக்கடி said...

இரண்டகத்தையும் இனஅழிப்பையும் தன்னலத்தையும் சுரண்டலையும் ஊழலையும் எதிர்க்கும் எழுத்தை எல்லை வைத்து எழுத வேண்டுமென்றால், அது எழுத்தாக இருக்காது!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உண்மையான வார்த்தைகள் டிவிஆர் சார்.

ராம்ஜி_யாஹூ said...

செந்தழல் ரவி, நீங்கள் வெளி நாட்டில் இருப்பதால் (தற்போது வசிப்பதால்) உணர்சிகளை சுதந்திரமாக எழுதும் வாய்ப்பு உள்ளது.
டிவி ஆர் சொல்வது உள் நாட்டில் சிறுய வேளையில், புதிதாக வேலைக்கு சென்றது உள்ள நபர்கள் உணர்ச்சி வேகத்தில் எதாவது வரம்பு மீறி எழுதி விட கூடாதே என்பது

ரவி என்ன செய்ய, உன்ன உணவு, உடுத்த உடை போன்ற சிறு தேவைகளுக்கே நானம் இன்று அதிக அளவு சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டோம்.

ராஜவம்சம் said...

உங்கள் பொதுநல அக்கரைக்கு நன்றி.

Karthick Chidambaram said...

அனுபவத்தின் வெளிப்பாடு தெரிகிறது. நன்றி.

நாஞ்சில் பிரதாப் said...

ராம்ஜியாரின் பின்னுட்டை அப்படியே ரிப்பிட்டிக்கிறேன்...

ராம்ஜி_யாஹூ said...

சிறு வயதினரின், இளைஞர்களின், மாணவப் பருவத்தில் இருக்கும் பதிவரின் உணர்வுகளை எளிதில் தூண்டும் இந்த செய்தி சார்ந்த பதிவை தமிழ் மனமும், முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக போடுவதை தவிர்க்கலாம்.

வானம்பாடிகள் said...

சரியான நேரத்தில் சரியான வழிகாட்டல்.

DrPKandaswamyPhD said...

பதிவுலகத்தின் நோக்கம் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். பலர் இந்தப் பதிவுலகத்தில் எழுதுவது மூலம் சமுதாயப்புரட்சி ஏற்படும் என்ற மாயையில் மூழ்கியுள்ளார்கள்.

மனித அவலங்களைத் தினமும் பார்க்கிறோம். அவைகளைத் தனி மனிதனாகத் தீர்க்கமுடியாது என்ற உண்மையை ஒத்துக்கொள்ளாமல் கற்பனை உலகில் மிதந்து கொண்டு இருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

கோவி.கண்ணன் said...

செந்தழல் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

எழுத்தினால் பயனேதும் இல்லை என்றால் எழுதுவதே வீண் தான்

கோவி.கண்ணன் said...

ஒதுங்கிப் போகாமல்,
வாழ்வது ஒருமுறை வாழட்டும் தலைமுறை என்றிருப்பதே நல்லது, தன்னுடைய சமூக பங்களிப்பால் தன்குடும்பம் பாதிக்கப்படும் என்று நினைப்பது சமூக கோழைத்தனம். சுயநலம் தான் சமூக சீரழிவுக்கு முதல்காரணம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அன்பின் ரவி
நான் பதிவிடுவதோ..நம் கருத்தைத் தெரிவிப்பதோ கூடாது என பதிவிடவில்லை.நம் கருத்தையும்,கண்டனத்தையும் தெரிவிப்பதில் தவறில்லை.

உணர்ச்சிப் பெருக்கால் சட்ட சிக்கலில் மாட்டாமல் பதிவிடவே சொல்கிறேன்.
ரவி...சட்ட சிக்கலில் மாட்டியதால் வேலை பறிபோன, பதவி உயர்வை இழந்த பொதுத்துறை ஊழியர்களை எனது வங்கிப் பணியில் நான் பார்த்திருக்கிறேன்.
மற்றபடி வருகை புரிந்த உங்களுக்கும்,உங்கள் கருத்தை ஆதரித்தவர்களுக்கும் நன்றி.

அன்புடன்
TVR

கோவி.கண்ணன் said...

//உணர்ச்சிப் பெருக்கால் சட்ட சிக்கலில் மாட்டாமல் பதிவிடவே சொல்கிறேன்.//

பொய்வழக்குகளுக்கு சட்ட சிக்கல் இல்லை, அதிகார வெறி. இதில் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம்

உடன்பிறப்பு said...

ராம்ஜி_யாஹூ said...

சிறு வயதினரின், இளைஞர்களின், மாணவப் பருவத்தில் இருக்கும் பதிவரின் உணர்வுகளை எளிதில் தூண்டும் இந்த செய்தி சார்ந்த பதிவை தமிழ் மனமும், முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக போடுவதை தவிர்க்கலாம்.

/\*/\

சூப்பர்

குறும்பன் said...

இரவி & கோவியின் கருத்தை வழிமொழிகிறேன்.

ஜோதிஜி said...

பொய்வழக்குகளுக்கு சட்ட சிக்கல் இல்லை, அதிகார வெறி. இதில் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம்சுயநலமிகளாக, தனிமனிதர்களாக எல்லோரும் இருந்துவிட்டால் ஊழல்வாதிகள், பொறுக்கிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வளையவருவார்கள்.

தன்னுடைய சமூக பங்களிப்பால் தன்குடும்பம் பாதிக்கப்படும் என்று நினைப்பது சமூக கோழைத்தனம். சுயநலம் தான் சமூக சீரழிவுக்கு முதல்காரணம்

இதற்கு மேல் வேறு என்ன சொல்ல முடியும் ஐயா?

சுரண்டலையும் ஊழலையும் எதிர்க்கும் எழுத்தை எல்லை வைத்து எழுத வேண்டுமென்றால், அது எழுத்தாக இருக்காது!

கே.ஆர்.பி.செந்தில் said...

ஐயா உங்களின் அக்கறை புரிகிறது.. ஆட்சியாளர்களை பற்றி எழுதினால் பொய் வழக்கில் மாட்டி உள்ளே போகும்போது வேலை போய் குடும்பம் பட்டினி கிடக்கும் அவலம் நிறைய இந்தியா மாதிரி ஜனநாயக நாடுகளில் அதிகமே..

யாரவது சிலர் துணிச்சலாக எழுதுவதை நாம் ஆதரித்தே ஆக வேண்டும்.. ஒரு தந்தையின் நிலையில் இருந்து நீங்கள் கூறும் கருத்தை மதிக்க வேண்டும்..
ஆனால் இளங்கன்று எப்போதும் பயமறியாது.....

அவர்களின் துணிச்சலை நான் ஆதரிக்கவே செய்வேன்...

Robin said...

உங்கள் கருத்துகளை அப்படியே வழிமொழிகிறேன்.
தாம் புழங்குவது பொது இடம் என்ற அறிவில்லாமல் வாய்க்கு வந்தபடி எழுதுபவர்களுக்கு இது கசக்கத்தான் செய்யும்.

வித்யா said...

கண்டனத்தின் போது வார்த்தைகளில் கண்ணியம் தேவை.

கோவி.கண்ணன் said...

// Robin said...

உங்கள் கருத்துகளை அப்படியே வழிமொழிகிறேன்.
தாம் புழங்குவது பொது இடம் என்ற அறிவில்லாமல் வாய்க்கு வந்தபடி எழுதுபவர்களுக்கு இது கசக்கத்தான் செய்யும்.//

டிவிஆர் கருத்து சுதந்திரம் பற்றி எதுவும் சொல்லவில்லை, அதிகாரவர்கத்தை எதிர்க்கும் போது அடக்கி வாசிக்கலாம் என்பது போல் சொல்கிறார்.
***
கசக்குறவங்களை விடுங்க இனிக்கிறவங்க வார இதழ்களுக்கு வாசகர் கடிதம் எழுதினால் எந்த பிரச்சனையும் இல்லை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

முனைவர்.இரா.குணசீலன் said...

தாங்கள் சொல்வத உண்மை நண்பரே.

ஜோதிஜி said...

இனிக்கிறவங்க வார இதழ்களுக்கு வாசகர் கடிதம் எழுதினால் எந்த பிரச்சனையும் இல்லை

தமிழ்நாட்டில் எத்தனை பூச்சாண்டிகளும் சாமியாடிகளும் வந்துட்டாங்க.....

ஆனால்


இப்போது உள்ள சூழ்நிலையில் இதனால ஒன்னும் ஆகிடப்போவதில்லைங்ற மாதிரி
இவ்வளவு நடக்குதான்னு தெரிந்து கொள்ளவாவது இந்த இணைய தளங்கள் தான் பிரயோஜனமாயிருக்கு..........

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
அதிகாரவர்கத்தை எதிர்க்கும் போது அடக்கி வாசிக்கலாம் என்பது போல் சொல்கிறார். //
பதிவில் எந்த இடத்திலும் நான் அப்படிக் குறிப்பிடவில்லை.

அக்பர் said...

உங்களது அறிவுரை ஏற்றுக்கொள்ள கூடியதே.

சே.குமார் said...

அருமையான கருத்து.


உங்களது அறிவுரை ஏற்றுக்கொள்ள கூடியதே.

Cool Boy கிருத்திகன். said...

http://tamilpp.blogspot.com/2010/07/blog-post_23.html
இதே கருத்தை தான் நாங்களும் வொல்லியிருக்கிறோம்...
நன்றி..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

R.Gopi said...

நாம் சொல்ல வரும் கருத்தை சரியாகவும் (டூ தி பாயிண்ட்) அதே சமயம் கண்ணியத்துடனும் சொன்னால், பலனுண்டு....

வெறுமே எப்போதும், எல்லோரையும் திட்டி எழுதுவது கண்டிப்பாக வேண்டாம்....