ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Friday, July 2, 2010
ஏழுமலையானுக்கே போடப்பட்ட பட்டை நாமம்..
திருமலையில் ஏழுமலையான் கோயிலை கட்டிய கிருஷ்ண தேவராயர் 1513ஆம் ஆண்டு முதல் கிரீடம் உட்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை வழங்கியதாக கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன..
கிருஷ்ண தேவராயரின் 500 ஆவது பட்டாபிஷேக நாளை ஹைதராபாத்தில் நடத்துமாறு தேவஸ்தானத்திற்கு ஆந்திர அரசு உத்தரவிட்டது.அவ்விழாவில் நமது ஜனாதிபதி கலந்துக் கொள்ள உள்ளார்.
விழாவில்..தேவராயரின் புகழை வெளிப்படுத்தும் முறையில்..ஏழுமலையானுக்கு அவர் அளித்த நகைகளை காட்சிக்கு வைக்க அரசு முடிவெடுத்தது.அது பற்றி கோயில் அதிகாரிகளிடம் தெரிவித்த போது
'அது போன்ற நகைகள் ஏதுமில்லை..40 ஆண்டுகளுக்கு முன்னரே அவை உருக்கப்பட்டு..தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டன' எனக் கூறப்பட்டது. ஆனால் அதை நிரூபிக்க ஆவணங்கள் ஏதும் இல்லை.அறங்காவலர்க் குழுத் தலைவரோ..அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறார்.முன்னால் அதிகாரி ஒருவரோ..'தேவராயர் நகை அளித்தற்கான ஆதாரம் ஏதுமில்லை' என்கிறார்.
இந்நிலையில் தலைமை செயல் அதிகாரியோ'தேவராயர் கொடுத்து கிரீடம் 1930-33 ஆம் ஆண்டுகளில் உருக்கப்பட்டு வேறு கிரீடம் தயாரிக்கப் பட்டுவிட்டது என்கிறார்.மேலும் 52-53 ஆம் ஆண்டுகளில், கோயிலின் ஆனந்த நிலையத்திற்கு தங்க முலாம் பூசப்பட்டபோது ..கோயிலுக்குச் சொந்தமான 20 நகைகள் உருக்கப்பட்டன ..காணாமல் போனதாகச் சொல்லப்படும் நகை இவையாகவும் இருக்கலாம் என்கிறார்.
இது குறித்து தொல்பொருள் துறை அதிகாரிகளும்..கோயில் அதிகாரிகளும் ஆய்வு செய்ய உள்ளனர்.அதில்..மைசூர் மகாராஜா கொடுத்த நகைகளும்..தேவராயர் கொடுத்த நகைகளும்..காணாமல் போன நகைகள் விவரமும் தெரியவந்துவிடும் என்கின்றனர்.தெரிய வருமா..அல்லது உண்மை மறைக்கப்பட்டுவிமா..என நாம் அறியோம் பராபரமே!
பார்ப்போம்...நகைகள் இருக்கின்றனவா...உருக்கப்பட்டதாகச் சொல்வது உண்மையா..இல்லை
அந்த ஏழுமலையானுக்கே பெரிய நாமம் போட்டுவிட்டனரா...என்று...
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஏழுமலையான் நாமம் வாழ்க என்று பக்தி பரவசத்தோடு அவருக்கு நாமமும் சாற்றி விட்டனரே....
அவருக்கே அந்த கதியில் என்றால் ,...நாமெல்லாம் நாமத்திலிருந்து தப்ப முடியுமா
அவர்கள் மாற்றி மாற்றி பேசுகின்றனர் .. நிச்சயம் பெரிய தலைகள் சம்பந்தபட்டிருக்கும்.. அதனால் அமுக்கபட்டுவிடும்..
தின்னு ஏப்பம் விட்ருப்பானுங்க... எல்லாம் திருடனுங்க...
’பட்டை நாமம் பரக்க சாத்தினாள்’னு ஒரு நலங்கு பாட்டு வருமே. அப்படி பாடியே திருமஞ்சனம் பண்ணி அடிச்சிட்டானுவளோ:))
// goma said...
ஏழுமலையான் நாமம் வாழ்க என்று பக்தி பரவசத்தோடு அவருக்கு நாமமும் சாற்றி விட்டனரே....
அவருக்கே அந்த கதியில் என்றால் ,...நாமெல்லாம் நாமத்திலிருந்து தப்ப முடியுமா//
கண்டிப்பாக முடியாது...அழுத்தி தீட்டிவிடுவார்கள்..
வருகைக்கு நன்றி கோமா
நானும் அப்படியே நினைக்கிறேன்..
வலைச்சர வாழ்த்துகள்
கே.ஆர்.பி.செந்தில்
//நாஞ்சில் பிரதாப் said...
தின்னு ஏப்பம் விட்ருப்பானுங்க... எல்லாம் திருடனுங்க...//
:-))))
வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்
//வானம்பாடிகள் said...
’பட்டை நாமம் பரக்க சாத்தினாள்’னு ஒரு நலங்கு பாட்டு வருமே. அப்படி பாடியே திருமஞ்சனம் பண்ணி அடிச்சிட்டானுவளோ:))//
அடிச்சிட்டானுக :))))
Post a Comment