ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Friday, July 9, 2010
வாசகர் பரிந்துரையும்...குல்மாலும்..
இப்போதெல்லாம்..சில பி.ப.,க்கள் எழுதும் பதிவுகள் வாசகர் பரிந்துரையில் ஐந்து மணித்துளிகளில் தெரிய ஆரம்பித்து விடுகின்றன..பரிந்துரை வாக்குகள் எண்ணிக்கை அடேங்கப்பா...
இது எப்படி.
ஒரு வேளை சுஜாதா ஒரு சமயம்..நான் லாண்டிரி கணக்கு எழுதினாலும் படிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னது போல இவர்கள் எது எழுதினாலும் + ஓட்டு போட நண்பர்கள் உள்ளனரோ என எண்ணினேன்.
அப்போதுதான் buzzல்..ஒரு பதிவரின் எதிர்வினை பதிவும்..சுட்டியும் கொடுக்கப் பட்டிருந்தது.அதைப் படிக்கும் நோக்கில்..சுட்டியை கிளிக்கியதில்..இடுகையே வராமல்..'உங்கள் ஓட்டு சேர்க்கப் பட்டது' என தமிழ்மணம் தெரிவித்தது.
ஆஹா..இவர்களுக்கு வாசகர்கள் பரிந்துரையில் இப்படித்தான் இடம் கிடைக்கிறதா...என்ற எண்ணத்தை எனக்குத் தோற்றுவித்தது.
தேர்தலில்...நாம் ஓட்டுப் போடவில்லையெனில்..மாலை 4 மணிக்கு மேல்..நம்ம ஓட்டுகள் வேறு ஒரு நபர் போட்டிருப்பார்..அதாவது பரவாயில்லை..அதைவிடக் கேவலம்..நாம் படிக்காத..நாம் பரிந்துரை செய்ய விரும்பாத பதிவு..நம் ஆதரவு ஓட்டை நம்மை அறியாமல் போட வைக்கும் பதிவர்களின் சாணக்கியத்தனம்..(அவர்களும் நம் நண்பர்கள் என்பதால் வேறு வார்த்தையை உபயோகிக்க மனம் வரவில்லை)
தமிழ்மணம்..பதிவர்களுக்காக எதைச் செய்தாலும்..அதில் ஓட்டையைக் கண்டு பிடித்து...பலனையே கெடுப்போர் இருக்கும் வரை என்ன செய்ய முடியும்..
இந்நிலையில்..வாசகர் பரிந்துரையையே..நூற்குறியை தமிழ்மணம் நீக்கியது போல நீக்கிவிட்டு..பழைய முறையில்..அதிகம் படிக்கப்படும் இடுகையை சூடான இடுகை என பழைய முறையையே பயன்படுத்தலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
ஐயா இதே கருத்தை முன்வைத்து நானும் ஒரு இடுகை எழுதியிருந்தேன் இணைப்பு கொடுங்கள்
வேண்டாம் வாசகர் பரிந்துரை - புதிய பதிவர்களுக்கு வழிவிடுங்கள்
http://bikeel.blogspot.com/2010/06/blog-post_06.html
ஆனாலும் இந்த பதிவை எழுதி அடுத்த சுற்றை நீங்கள் ஆரம்பித்து வைத்திருக்கவேண்டாம் :-(
இந்த பரிந்துரை, அதிக வாக்குகள், சூடான இடுகை, குளிர்ச்சியான இடுகை எல்லாம் எந்த பயனும் தராது.
ஒரு பதிவில் மூன்று வாக்கியங்களை படிக்கும் பொழுதே வாசகர் முடிவு செய்து விடுவர், மேலே படிப்பதா, வாக்கு அளிக்கனுமா வேண்டாமா என்று.
நல்ல எழுத்தாக இருந்தால் அந்த பதிவு எப்படியும் எல்லா வாசகர்களையும் சேர்ந்து விடும்.
வேட்டைக்காரனும் , நகுலின் படமும் சன் பிக்டர்சால் எந்த அளவும் விளம்பரம் செய்தும் ஜெயிக்க முடிய வில்லை, அதே சமயம் அங்காடி தெருவும், பருத்தி வீரனும் எந்த வித விளம்பரமும் செய்யாமலேயே வெற்றி பெற்றது, மக்கள் ஆதரவு கிடைத்தது. அது போல தான் பதிவுகளும்.
இந்த இடுகை இன்னும் கொஞ்ச நேரத்தில் பரிந்துரையில் ஏறும்..சூடான இடுகை,பரிந்துரை எதுவும் வேண்டாம்.அந்த இடத்தை தமிழ்மணம் தற்காலிகமாக நீக்கியது.அங்கு வராது என்று தெரிந்ததும் ஓட்டுக்கள் அவ்வளவாக விழவில்லை.பரிந்துரை வேண்டும் என்றால் அதை தனிப்பக்கத்தில் வைக்கலாம்.அல்லது ஒரு ஓட்டுக்கே பரிந்துரையில் தெரிவது மாதிரி வைத்து கொண்டால் யார் இடுகையும் நிற்காது.அதை தான் செய்ய வேண்டும்.
அரசியல்ல இதல்ல ஜகஜம் சார்...
நாஞ்சில் பிரதாப்பை வழிமொழிகிறேன்.
தமிலீஸ்ல ஒட்டு போட்டேன் சார் , தமிழ் மனம் ஓபனாக மாட்டேன்கிறது .
ஹி,ஹி,ஹி
எப்பிடி இப்பிடி.. ம்ம்ம் என்ன தமிழரே??
அப்போதுதான் buzzல்..ஒரு பதிவரின் எதிர்வினை பதிவும்..சுட்டியும் கொடுக்கப் பட்டிருந்தது.அதைப் படிக்கும் நோக்கில்..சுட்டியை கிளிக்கியதில்..இடுகையே வராமல்..'உங்கள் ஓட்டு சேர்க்கப் பட்டது' என தமிழ்மணம் தெரிவித்தது.
உண்மை. ஆச்சரியப்பட்டேன்......
தாடிக்கொரு சீயக்காய், தலைக்கு ஒரு சீயக்காயா என்றொரு சொலவடை உண்டு. தமிழ்மணம் 4 ஓட்டில் நொண்டியடிக்கும். தமிழிஷில் 34 ஓட்டுகள் இருக்கும். அதென்னசார் இடுகை பிடிச்சிருக்கு ஆனா தமிழ்மணத்துக்கு போடுற அளவில்லை. தமிஷிஷ் போதும் என்ற மனப்பான்மை பலருக்கு.
என்னிடம் தமிழ்மணத்தில் ஓட்டு போடமாட்டங்குறாங்க என்று ஆதங்கப்பட்ட ஒரு பதிவர், தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டு பார்த்ததே இல்லை:))
இதோ ஜெட்லியின் மதராச பட்டிணம் மகுடத்தில். குறை தமிழ்மணத்தில் இல்லை. குத்துற நம்ம ஜனங்களிடத்தில் என நினைக்கிறேன்:))
இதுபற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். தமிழ்மண வாக்களிக்க 10 ஐடி தயார் செய்து கொண்டால் தனக்குத்தானே வாக்களித்து பரிந்துரைத்துக் கொள்ள முடியும்.
http://govikannan.blogspot.com/2010/07/blog-post_07.html
நிறைய விசயம் தெரிஞ்சு வைச்சுருக்கணும் போல இருக்கே..:)
பகிர்வுக்கு நன்றி
நிறைய விசயம் தெரிஞ்சு வைச்சுருக்கணும் போல இருக்கே..:)
பகிர்வுக்கு நன்றி
சுய மோகம்,புகழ் போதை...இவை எந்த நிலைக்கும் இட்டுச்செல்லும்..
அரசியல்வாதிகள் இததானே செய்கிறார்கள்...
நம்ம ஆளுங்களும் அவங்களால
முடிஞ்சதை செய்யீராங்க..
இதோ ஜெட்லியின் மதராச பட்டிணம் மகுடத்தில். குறை தமிழ்மணத்தில் இல்லை. குத்துற நம்ம ஜனங்களிடத்தில் என நினைக்கிறேன்:)) ////
வானம்பாடிகள் நீங்க ஜெட்லி பெயர் எழுதியதால் கேட்கிறேன்... நீங்கள் எழுதிய மொக்கை, மரண மொக்கை, மஹா மொக்கை, எதிர் கவுஜை, எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்க்கவுஜ ,இதெல்லாம் மகுடத்தில் ஏறும் போது இந்த ஞானம் வராமல் போன காரணம் என்னவோ..???தாடிக்கொரு சீயக்காய், தலைக்கு ஒரு சீயக்காயான்னு யாரோ சொன்னாங்க. :0)
நோ கமெண்ட்ஸ்:)
சரியாச் சொன்னீங்க டிவிஆர் சார். என்ன கொடுமை இது?..
//வானம்பாடிகள் நீங்க ஜெட்லி பெயர் எழுதியதால் கேட்கிறேன்... நீங்கள் எழுதிய மொக்கை, மரண மொக்கை, மஹா மொக்கை, எதிர் கவுஜை, எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்க்கவுஜ ,இதெல்லாம் மகுடத்தில் ஏறும் போது இந்த ஞானம் வராமல் போன காரணம் என்னவோ..???தாடிக்கொரு சீயக்காய், தலைக்கு ஒரு சீயக்காயான்னு யாரோ சொன்னாங்க. :0)//
இதை விட்டுடீங்களே , என்னோட வியாபாரப் பதிவும் , அதற்க்கு சாரோட எதிர் வியாபாரமும் இதுவும் மகுடம் ஏறியது . இதையும் படிங்க .
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/03/blog-post_4758.html
http://paamaranpakkangal.blogspot.com/2010/03/blog-post_10.html
இப்பிடியெல்லாம் நடக்குதா !
BIGLE ! பிகில் said...
இதோ ஜெட்லியின் மதராச பட்டிணம் மகுடத்தில். குறை தமிழ்மணத்தில் இல்லை. குத்துற நம்ம ஜனங்களிடத்தில் என நினைக்கிறேன்:)) ////
வானம்பாடிகள் நீங்க ஜெட்லி பெயர் எழுதியதால் கேட்கிறேன்... நீங்கள் எழுதிய மொக்கை, மரண மொக்கை, மஹா மொக்கை, எதிர் கவுஜை, எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்க்கவுஜ ,இதெல்லாம் மகுடத்தில் ஏறும் போது இந்த ஞானம் வராமல் போன காரணம் என்னவோ..???தாடிக்கொரு சீயக்காய், தலைக்கு ஒரு சீயக்காயான்னு யாரோ சொன்னாங்க. :0)//
அய்யா பிகிலு. நான் ஜெட்லிய குத்தம் சொல்லலைங்கய்யா. நல்ல இடுகைன்னா தமிழ்மணம் ஓட்டு தானே விழும்னுதான் சொல்லுறேன். இந்த குல்மால் வேலை தேவையில்லைன்னுதான் சொல்லுறேன். இந்த குறுக்குசால் எதுக்கு?
மதார் said...
//வானம்பாடிகள் நீங்க ஜெட்லி பெயர் எழுதியதால் கேட்கிறேன்... நீங்கள் எழுதிய மொக்கை, மரண மொக்கை, மஹா மொக்கை, எதிர் கவுஜை, எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்க்கவுஜ ,இதெல்லாம் மகுடத்தில் ஏறும் போது இந்த ஞானம் வராமல் போன காரணம் என்னவோ..???தாடிக்கொரு சீயக்காய், தலைக்கு ஒரு சீயக்காயான்னு யாரோ சொன்னாங்க. :0)//
இதை விட்டுடீங்களே , என்னோட வியாபாரப் பதிவும் , அதற்க்கு சாரோட எதிர் வியாபாரமும் இதுவும் மகுடம் ஏறியது . இதையும் படிங்க .
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/03/blog-post_4758.html
http://paamaranpakkangal.blogspot.com/2010/03/blog-post_10.html//
நன்றிங்க மதார். இவ்வளவு கவனமா சொல்றீங்க. ஆனா உங்க இடுகையில நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லமாட்டிங்க்றீங்களேம்மா?
மகுடம் ஏறினது நீங்க சொல்லித்தான் தெரியும். நன்றி. அந்த வரைக்கும் ஏத்தி விட்டதுன்னு சொல்லலை பாருங்க.
||வானம்பாடிகள் said...
மதார் said...
//வானம்பாடிகள் நீங்க ஜெட்லி பெயர் எழுதியதால் கேட்கிறேன்... நீங்கள் எழுதிய மொக்கை, மரண மொக்கை, மஹா மொக்கை, எதிர் கவுஜை, எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்க்கவுஜ ,இதெல்லாம் மகுடத்தில் ஏறும் போது இந்த ஞானம் வராமல் போன காரணம் என்னவோ..???தாடிக்கொரு சீயக்காய், தலைக்கு ஒரு சீயக்காயான்னு யாரோ சொன்னாங்க. :0)//
இதை விட்டுடீங்களே , என்னோட வியாபாரப் பதிவும் , அதற்க்கு சாரோட எதிர் வியாபாரமும் இதுவும் மகுடம் ஏறியது . இதையும் படிங்க .
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/03/blog-post_4758.html
http://paamaranpakkangal.blogspot.com/2010/03/blog-post_10.html//
நன்றிங்க மதார். இவ்வளவு கவனமா சொல்றீங்க. ஆனா உங்க இடுகையில நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லமாட்டிங்க்றீங்களேம்மா?||
இந்த வியாபாரம் இன்னும் முடியலயா சார்... எங்க பார்த்தாலும் கூவிக் கூவி விக்கறாங்க...
வேணாம் சார்... கண்டுக்காதீங்க.. முடிஞ்சா காத தூரம்..!!!!.. உங்க நிலை வேற...!!! உங்கள அறிந்தவர்களுக்குத் தெரியும்.. உங்க பக்க நியாயமும்.. நிலையும்..!!! (weh... wot sort of ppl r they... omg..)
கோவி, பிகில் ஆகியவர்களின் பதிவை ஏற்கனவே படித்தேன் - தற்போது தங்கள் பதிவு.
தமிழனுக்கு ஒழுங்கா ஓட்டு போடவே வராதுங்களா ?
///குறை தமிழ்மணத்தில் இல்லை. குத்துற நம்ம ஜனங்களிடத்தில் என நினைக்கிறேன்:))///
இதையும் சொல்லிட்டு
இதையும் சொல்றீங்க
///நல்ல இடுகைன்னா தமிழ்மணம் ஓட்டு தானே விழும்னுதான் சொல்லுறேன்.////
இரண்டு கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்பாடா இருக்கே சார்
@@ இதையும் படிங்க ...
மதார்.
நான் படிக்காமயா என் பதிவுல உங்களுக்கு லிங்கு குடுத்திருப்பேன்...
இந்த தமிழ்மணம் ஓட்டே குழு வியாபாரம்... தமிழ்மணத்தை சில குழுக்கள் ஆண்டுகொண்டு இருக்கு.. அதுல ஒரு குழு உங்களுக்கு எதிரா பொங்கி எழுந்த கதைதான் சிரிப்பா சிரிச்சுதே!
BIGLE ! பிகில் said...
///குறை தமிழ்மணத்தில் இல்லை. குத்துற நம்ம ஜனங்களிடத்தில் என நினைக்கிறேன்:))///
இதையும் சொல்லிட்டு
இதையும் சொல்றீங்க
///நல்ல இடுகைன்னா தமிழ்மணம் ஓட்டு தானே விழும்னுதான் சொல்லுறேன்.////
இரண்டு கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்பாடா இருக்கே சார்//
ஆமாங்க. முழுசா பார்த்தா சரியா வரும். அல்லது ஜெட்லீ பதிவில் பார்த்தீங்கன்னா, தமிழிஷ்ல அதிகம் வோட்டு, தமிழ் மணத்தில கம்மியா இருக்கும். ஏன்னா, தமிழ்மணத்துல போடாமா போயிடுவாங்க.
ஒரு இடுகை பிடிச்சிருந்தா, தமிழிஷ்ல வோட்டு போடும்போது தமிழ்மணத்துலயும் போட்டா என்ன? இதுக்கு பிடிக்கும், அதுக்கு பிடிக்காதா? இதைத்தான் தாடிக்கு ஒரு சீக்காய் தலைக்கு ஒரு சீக்காயா? தலைக்கு வைக்கிற சீக்காய் தாடிக்கும் போதாதான்னு கேட்டது.
தமிழிஷ்ல ஓட்டு போட்டு தமிழ்மணத்துல ஓட்டு போடாம போறது யார் குற்றமுங்க. வாசகருடையதுதானே? இப்ப முரண்பாடு இருக்காதுன்னு நினைக்கிறேன்.
ஆனா பாருங்க, சுட்டியில வோட்டுப்பதிவு சுட்டியைக் கொடுத்த மோசடி பத்திதாங்க இடுகை. அதப்பத்தி ஒன்னும் சொல்லலைங்களே:)). அந்தப் பதிவரைக் கண்டிக்கலாமில்லைங்களா பிகில்.
வருகை புரிந்து..கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி..
எனது இந்த இடுகை..வாசகர் பரிந்துரையில் குல்மால் பண்ணி ஓட்டுகள் பெறுவதை சுட்டிக்காட்ட மட்டுமே..
மேலும்..நண்பர்கள் அதிகம் உள்ள பதிவர்கள் எப்பதிவு போட்டாலும்..பரிந்துரையில் வந்துவிடுவதை கட்டுப்படுத்த முடியாது.
ஆகவே..இவற்றுக்கெல்லாம் ஒரே வழி..இடுகைகளை படிப்போர் எண்ணிக்கையை வைத்து..தமிழ்மணமே பரிந்துரைக்க வேண்டும் என்பதே..
அதனாலே சூடான இடுகை மீண்டும் வரவேண்டும் என்றேன்.
தமிழிஷ்ல ஓட்டு போட்டு தமிழ்மணத்துல ஓட்டு போடாம போறது யார் குற்றமுங்க. வாசகருடையதுதானே? இப்ப முரண்பாடு இருக்காதுன்னு நினைக்கிறேன்.///
முதலில் ஓட்டுப்போடாததை குற்றமாக கருத்துவது பாசிச போக்கு. அவரவர் தனக்குறிய எல்லைக்கு மேல் தலையிட முடியாது. நான் ஓட்டுபோடுவதும் போடாததும் என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.
அடுத்தது தமிழிஷையும் தமிழ்மணத்தையும் ஒப்பிடுவது தவறு.
தமிழ் மணத்தில் உங்கள் பதிவின் வழியாகத்தான் ஓட்டளிக்க முடியும். தமிழிஷில் அப்படியில்லை, அவர்கள் தளத்திலிருந்தும் நேரடியாக வாக்களிக்கலாம் என இரு வழி வசதியுண்டு. தமிழ்மணத்தை தாண்டிய வாசகர்வட்டம் தமிழிஷில் உள்ளது. அதன் 'டிராஃபிக்' தமிழ்மணத்தை விட பலமடங்கு அதிகம் எனவே ஓட்டும் அதிகம்.
ஆனால் தமிழ்மணம் அப்படியல்ல இங்கே ஆதிக்கம் செலுத்துவது பதிவர் குழுக்கள். என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை விட யார் எழுதியிருக்கிறது என்பதுதான் இங்கே முக்கியமாக உள்ளது. அதனால் தான் சில பதிவர்களே தொடர்ந்து மகுடத்திலும் பரிந்துரையிலும் இடம் பெற முடிகிறது. இந்த குழு மனநிலை பிளஸ் ஓட்டு குத்துவதில் மட்டுமல்ல கேந்திரமான பிரச்சனைகளில் மைனஸ் ஓட்டு குத்துவதையும் தீர்மானிக்கிறது
அதனால்தான் வாக்குகளை பெற பலவிதமான வேலைகளை செய்யவேண்டியுள்ளது. அதில் ஒன்றுதான் ரவி செய்தது. என்னை பெறுத்த அளவில் அது மோசமான ஆனால் கலக நடவடிக்கை. குழு ஓட்டு ஆபாசத்திற்கும் அதற்கும் ஒன்றும் வேறுபாடில்லை வழிமுறை வேறு செயல் ஒன்று அவ்வளவே.
எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும். குழு ஓட்டை ஓழிக்க பரிந்துரை பக்கத்தை காலிசெய்ய வேண்டும். வேறு வழிஇல்லை
Post a Comment