Friday, July 23, 2010

தேங்காய்-..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (23-7-10)


1) இந்தியாவில் அதிகம் பேர் வேலை பார்ப்பது ரயில்வே துறையில்தான்.இத் துறை 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கின்றனர்

2)உலகின் மிகப் பெரிய நூலகம் வாஷிங்டனில் உள்ளது.இது 1800ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது.66 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்நூலகத்தில் 8.75 கோடி புத்தகங்கள் உள்ளனவாம்.

3)அ.தி.மு.க.,விலிருந்து பிரபலங்கள் பலர் தி.மு.க.,விற்கு சென்றுக் கொண்டிருப்பதால்..அதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்த ஜெ..கோவை..பொதுக்கூட்டத்தில் 'நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்' என்று பேசினாராம்.அதைக் கேட்ட சில ரத்தத்தின் ரத்தங்கள் ' கட்சி மாறும் எண்ணத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டுவிட்டதாகத் தெரிகிறது.

4) இதயமும், நுரையீரலும் சரியாக இயங்க தைராயிடு சுரப்பி முக்கிய பங்காற்றுகிறது.தைராயிடு சுரப்பி நன்கு சுரந்தால்தான் உடலின் சக்தி அதிக அளவாக இருக்கும்.தைராயிடு problem இருப்பவர்கள் அதை அலட்சியம் செய்யாது..உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான மாத்திரைகளை விடாது சாப்பிடவும்.

5)ஒவ்வொரு நாளும் நமது மூக்கு 14 கன மீட்டர் காற்றை குளிர்விக்கிறதாம்.இது ஒரு சிறிய அறையில் நிரம்பியிருக்கும் காற்றின் அளவாகும்.

6)ஐ.நா., வளர்ச்சிக் குழுவில் இடம் பிடித்து இருக்கிறார் முகேஷ் அம்பானி.பணத்தேவை உள்ள இடங்களையும்,மக்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்வது இக் குழுவின் வேலை.பில் கேட்ஸ் உள்ளிட்ட உலக பணக்காரர்கள் இடம் பெற்றிருக்கும் இக் குழுவில் ஒரு இந்தியர் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

7)சென்ற வாரம் நான் படித்த இடுகைகளில் தமிழா தமிழா வின் மகுட இடுகை இதுதான் ..வாழ்த்துகள் குமரன்

8)கொசுறு ஒரு ஜோக்..

ரீடர்ஸ் டைஜஸ்டில் நான் படித்த ஜோக்..

one sunday our house was filled with friends watching the finals of a foot-ball tournament.As the game was ending, my brother-in-law, a sold ier , called all the way from Japan where he is stationed.As he spoke with my wife, I told my pals 'He is 14 hours ahead of us.It is already monday there'.
one of my friend had a brilliant suggesion 'Ask him who won.'

11 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

அப்ப தி.மு.க வும், அ.தி.மு.க வும் கூட்டணி வச்சுக்க போவுதா!!!!

நல்ல ஜோக்...( நான் கடைசியில் உள்ளதை சொன்னேன் ஐயா)...

Chitra said...

3)அ.தி.மு.க.,விலிருந்து பிரபலங்கள் பலர் தி.மு.க.,விற்கு சென்றுக் கொண்டிருப்பதால்..அதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்த ஜெ..கோவை..பொதுக்கூட்டத்தில் 'நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்' என்று பேசினாராம்.அதைக் கேட்ட சில ரத்தத்தின் ரத்தங்கள் ' கட்சி மாறும் எண்ணத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டுவிட்டதாகத் தெரிகிறது.


....... இன்னுமா "உலகம்" இவங்களை நம்புது...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
அப்ப தி.மு.க வும், அ.தி.மு.க வும் கூட்டணி வச்சுக்க போவுதா!!!!//

வருகைக்கு நன்றி செந்தில்..
அந்த செய்தியில் உள்ள உள்குத்து புரியவில்லையா?

நாஞ்சில் பிரதாப் said...

//ஜெ..கோவை..பொதுக்கூட்டத்தில் 'நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்' என்று பேசினாராம்.//

வச்சா காங்கிரஸ் கூடவும், கேப்டன் கூடத்தான் வைக்கனும்... அது நடக்கறதுக்கு சாத்தியமே இல்லை... பாஜகவின் பல் பிடுங்கப்பட்டுள்ளது.

அம்மாகிட்ட என்னவோ திட்டம் இருக்கு.... இந்தவாட்டி ஆட்சியை எடுக்கலைன்னா எப்பவுமே எடுக்கமுடியாது....

வித்யா said...

Present sir.

AIADMK - No comments:)))))))

அக்பர் said...

அம்மா ரொம்ப கஷ்டப்படவேண்டாம். அய்யாவே ஆட்சியை கொடுக்குறதுக்கு உண்டான ஏற்பாடுகளைத்தான் பண்ணிட்டு இருக்காரு.

பிரபாகர் said...

அய்யா முதல்வராவே உயிர் இருக்கிற வரைக்கும் இருக்கிறதுக்கான எல்லா வழி முறைகளையும் அம்மா செஞ்சிக்கிட்டிருக்காங்கய்யா!

பிரபாகர்....

மோகன் குமார் said...

ரசித்த இடுகையை அறிமுகபடுத்துவது நல்ல விஷயம்; தொடருங்கள் சார்

Karthick Chidambaram said...

ஏற்கனவே சொன்னது தான் - மீண்டும் ஒரு முறை உங்கள் பதிவிலும் - பாராட்டுக்கள் குமரன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நாஞ்சில் பிரதாப்
வித்யா
பிரபாகர்
அக்பர்
Karthick Chidambaram
மோகன் குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra