உடன்பிறப்பு இடுகை ஒன்றிற்கு அபி அப்பாவின் பின்னூட்டம் இது..
//அபி அப்பா said...
கோவை பொதுகூட்டத்திலே புரட்சி தலைவி இந்த மைனாரிட்டி திமுக ஆட்சியிலே விவசாயம் அழிஞ்சு போச்சுன்னு ஒப்பாரி வச்சாங்க. அதுக்கு உடன்பிறப்பு பதில் சொல்லலைன்னா நான் அ.தி.மு.கவுக்கு போய்விடுவேன் என மெரட்டுகின்றேன்:-))//
அதைப் படித்ததால் இந்த இடுகை
அபி அப்பா உண்மையில் அ.தி.மு.க., வில் சேரப்போவதாகச் சொல்லியிருக்கிறார் என எண்ணிய 'ஜெ' சசிகலாவைக் கூப்பிட்டு..'யாரையேனும் அனுப்பி அவரை என் முன்னிலையில் அ.தி.மு.க., அலுவலகத்தில் வந்து சேரச் சொல்..உடன் ஜெயகுமாரிடம் சொல்லி ஆயிரம் பேரை ஏற்பாடு பண்ணச் சொல்,,அபி அப்பா ஆயிரம் பேருடன் வந்து அ.தி.மு.க.,வில் சேர்ந்தார் என நமது எம்.ஜி.ஆரில் போட்டுவிடுவோம்' என்கிறார்.
சசிகலா உடன் பன்னீரைக் கூப்பிடுகிறார்..அம்மா சொன்னதைச் சொல்லி அபி அப்பாவைப் பார்க்கச் சொல்கிறார்..சசியைக் கண்டதும் கும்பிட்ட பன்னீர் 'ஆமாம் ..இதுக்கு மட்டும் நான் வேணும்..மத்த சமாச்சாரங்களுக்கு தினகரனும்..இளவரசியும்......' முணுமுணுக்க ஆரம்பிக்கிறார்.
அவர் முணுமுணுப்பை முடிப்பதற்குள்..'என்ன..'என மிரட்டல் தொனிக் கேட்க..'உடனே செஞ்சுடறேன்' என்கிறார்.
ஜெயகுமாரைப் பார்த்து ஆயிரம் பேர் விஷயத்தைச் சொன்னதும்...அதற்கென்ன இரண்டாயிரம் பேரையே ஏற்பாடு செய்கிறேன்..என்கிறார் அவர்.
பன்னீர் அபி அப்பாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னதுடன் நில்லாது..அம்மாகிட்ட 2011லே ராஜ்யசபா சீட்டும் வாங்கித் தரேன் என்கிறார்.
சிறிது யோசித்த அபி அப்பா ஒப்புக் கொள்கிறார் ..அதற்குள் விஷயம் மாயவரம் முழுதும் பரவ ஆயிரக்கணக்கில் அ.தி.மு.க. வினர் அபி அப்பா வீடுமுன் கூடிவிடுகின்றனர்.அவர்களிடம் தான் ஒரு நிமிடம் தனியாக பேச வேண்டும் என்கிறார் அபி அப்பா.பன்னீரும் ஒப்புக் கொள்கிறார்.
அடுத்த நாள் அம்மா கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளருடன் காத்திருக்கிறார்.
ஆனால் அபி அப்பா அழைத்து வந்த பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் சேர்ந்ததாக முரசொலியில் செய்தி வருகிறது
10 comments:
கிகிகிகி................................................
ஐயா போயஸ்ல இருந்து ஆட்டோ வராம இருந்தா சரி
இதுக்கு பேருதான் குசும்போ...?
டி வி ஆர் அய்யா! எனக்கு சிரிப்பை அடக்க சிறிது நேரம் பிடித்தது;-))))
நான் அந்த பின்னூட்டம் போட காரணம் சொல்லிவிடுகின்றேன்.
கோவையிலே அந்தம்மா பேசிய பேச்சு எல்லாத்துக்கும் எப்படி வரிக்கு வரி பதில் சொல்வது என்பதற்கான குறிப்புகள், ஆதாரங்கள், எதிர்வாதங்கள் எல்லாம் எப்போதுமே எல்லா திமுக பேச்சாளர்களாலும்,கட்டுரையாளர்களாலும் சேமிக்கப்படும் பலவிதமான செய்தி தாள்கள், மற்றும் முரசொலி போன்ற கட்சி தினசரிகள் மூலமாகவும்.
அதை பயன்படுத்தி தான் பொதுவாக எதிர்வாதங்கள் வைக்கப்படும். அந்தம்மா பேசிய பின்னர் அதற்கான எதிர்வாதங்கள் உடன்பிறப்பு வலைப்பூவில் வரவேண்டுமே என்கிற நோக்கிலே தான் அப்படி கிண்டலாக கேட்டேன்.
அப்படியே நான் அதிமுக போவதாக இருந்தாலும் நீங்க இந்த பதிவில் குறிப்பிட்டதை போலத்தான் ஆகும். அங்கிருந்து அந்தம்மாவையும் தள்ளிகிட்டு வரத்தான் முயலுவேன்:-)))
கவனம் கவரக்கூடிய நல்ல பதிவு. ஆக இதன் பின்னராவது உடன்பிறப்பு அந்தம்மாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்க ஏதுவாக அமைந்தது இந்த பதிவு.
விரைவில் எதிர்பாருங்கள் பதிவை!!!!!
மிக்க நன்றி அய்யா!!

பல எம்.ஜி.ஆர். விசுவாசிகள் பெயரளவில் தான் அ.தி.மு.க.வில் இருக்கின்றனர் டி.வி.ஆர். ஐயா சொன்னது கூடிய விரைவில் நடக்கும்
:)). சார் அட்டகாசம்:)))
//
அபி அப்பா சைட்.
அங்கிருந்து அந்தம்மாவையும் தள்ளிகிட்டு வரத்தான் முயலுவேன்:-)))
//
:)) :)) :))
neengalum oru udanpirappaa?
:)கொள்கை பிடிப்பாளர்.
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
Post a Comment