1)எந்திரன் பட கேஸட் வெளியீட்டு விழா மலேஷியாவில் நடக்க இருப்பது..பழைய செய்தி..
ஆனால் இப்போது புதிதாக வந்துள்ள செய்தி...தீபாவளிக்கு தங்கள் படங்களை வெளியிடலாம் என நினைத்த பல தயாரிப்பாளர்கள்..நடிகர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறதாம்..
ஐங்கரனால் கழற்றிவிடப்பட்டு..சன் குழுமத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த படம் 190 கோடிகள் செலவில் தயாராகி வருகிறது.
3000 பிரிண்டுகள் (ஆதாரம்-தமிழ் சினிமா) போடப்போகிறார்களாம்..உலகம் முழுதும்..சைனா உள்பட தீபாவளி அன்று படத்தை வெளியிடப் போவதாகத் திட்டமாம்.
இந்நிலையில்..திரையரங்குகள் அனைத்தையும் இப்படம் ஆக்கிரமித்துக் கொண்டால்..அன்று வெளியிட திட்டமிட்டிருந்த சில முன்னணி நடிகர்கள் படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது..
ஆகவே..தீபாவளி அன்று சாதாரண தியேட்டர்களில் குறைந்த பட்ஜெட் படங்கள் மட்டுமே வரும் நிலை ஏற்படப் போகிறது.
2)நான் எழுதியிருந்த செம்மொழி சிறப்பு (3 இடுகைகள்) மின்னஞ்சலில் வலம் வரும் செய்தியைக் கூறி...சந்தோஷமும் பட்டுள்ளார் சக பதிவர் உலகநாதன்..
அவர் என் பதிவிற்கு இட்ட பின்னூட்டம் கீழே;-
// என். உலகநாதன் said...
சார்,
உங்களுடைய கட்டுரையான "தமிழ் செம்மொழி சிறப்பு" உலகம் முழுவதும் மெயிலில் சுற்றிக்கொண்டிருக்கிறது.
பரவாயில்லை, நன்றி "tvrk.blogspot.com" என்று போட்டு இருக்கிறார்கள்.
சந்தோசமாக உள்ளது.//
என் பதிவு மின்னஞ்சல் மூலம் பலரை சென்றடைகிறது என்ற சந்தோஷத்தைவிட உலகநாதனின் பண்பு என்னை வியக்கவைக்கிறது.நன்றி நண்பரே..
3)157 வயதாகும் இந்திய ரெயில்வேயில் 8000 ரயில்களும்..50000 பெட்டிகளும் 16 லட்சம் ஊழியர்களும் உள்ளனராம்.நாளொன்றிற்கு சராசரியாக இரண்டு கோடி மக்கள் பயணம் செய்கின்றனராம்.
4)இந்தியாவில் 25 கோடிகளுக்கு மேல் வருமான வரி பாக்கி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 550. வருமான வரி பற்றி கவலைப்படுபவர்கள் மாதம் பிறந்தால் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் மட்டுமே
5)தமிழில் படியுங்கள்..தமிழைத் தவறில்லாது எழுதுங்கள்....இப்படியெல்லாம் கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களும் சமீபத்தில் பேசி விட்டனர்..ஆனால்..அரிச்சுவடியில் வண்ணப்படங்களுடன் தமிழ்ச்
சொற்களை கொடுத்துள்ளனர்.ஒரு கிண்ணம் படத்தைப் போட்டு 'கின்னம்' எனக் குறிப்பிட்டுள்ளனர்..(ஒருவேளை சம்பந்தப் பட்டவர்கள்..கலைஞரின் 'கன்னம்..கன்னம்..சந்தனக் கிண்ணம் பாடலைப் பாடியபடியே இந்த வேலையில் ஈடுபட்டிருப்பார்களோ)
6)தமிழன்னைக்கு ஆறு இலக்கியப் படைப்புகள் அணிகலனாகச் சொல்லப்படுகின்றன
மணி முடி - சூடாமணி
காதுகள் - குண்டலகேசி
கைகள் - 'வளை' யாபதி
மார்பு - சீவக சிந்தாமணி
இடை - மணி'மேகலை'
கால்கள்- சிலம்பு(சிலப்பதிகாரம்)
கையில் இருப்பது திருமறையாம் 'திருக்குறள்'
7) வீட்டில் இருந்து வெளியே செல்கையில்..வாசலில் ஒரு பெரிய பாறாங்கல் என் கால்களைப் பதம் பார்த்து விட்டது...செம்மொழி மாநாடு பற்றி என் சில இடுகைகள் கிண்டல் செய்வது போல இருந்ததால்..கலைஞர் செய்த சதியே பாறாங்கல் சமாச்சாரம் என்கின்றனர் சிலர்.
8)கொசுறு ஒரு ஜோக்...
தமிழச்சி ன்னு ஒரு படம் எடுக்கப்போறியா...கதாநாயகி யார்..?
தமன்னா,அசின்,ஸ்ரேயா இவர்கள்ல யாராவது ஒருத்தர்தான்
14 comments:
Endhiran should not be a another Raavanan
வாசலில் பாறாங்கல்லை போட்ட தலைவர் கலைஞரை வன்மையாக கண்டிக்கிறேன்...
ஹா ..ஹா ( கலைஞர் சிரிப்பு....
:)). குஷ்பூ டமில் வளர்க்கும்போது தமன்னா தமிழச்சியாகப்பாடாதா:)))).
:-)))
6)தமிழன்னைக்கு ஆறு இலக்கியப் படைப்புகள் அணிகலனாகச் சொல்லப்படுகின்றன
மணி முடி - சூடாமணி
காதுகள் - குண்டலகேசி
கைகள் - 'வளை' யாபதி
மார்பு - சீவக சிந்தாமணி
இடை - மணி'மேகலை'
கால்கள்- சிலம்பு(சிலப்பதிகாரம்)
கையில் இருப்பது திருமறையாம் 'திருக்குறள்'
..... அழகு! அழகிய தமிழ் மகள் ...... :-)
//மணி முடி - சூடாமணி
காதுகள் - குண்டலகேசி
கைகள் - 'வளை' யாபதி
மார்பு - சீவக சிந்தாமணி
இடை - மணி'மேகலை'
கால்கள்- சிலம்பு(சிலப்பதிகாரம்)
கையில் இருப்பது திருமறையாம் 'திருக்குறள்'//
எல்லாம் சமண, பவுத்த நூல்களாக இருக்கு தமிழன்னை மணிமேகலையின் வடிவோ !
:)
.கலைஞர் செய்த சதியே பாறாங்கல் சமாச்சாரம் என்கின்றனர் சிலர்.///
இருக்கும் , இருக்கும் சார்
நான் எழுதியிருந்த செம்மொழி சிறப்பு (3 இடுகைகள்) மின்னஞ்சலில் வலம் வரும் செய்தியைக் கூறி...சந்தோஷமும் பட்டுள்ளார் சக பதிவர் உலகநாதன்..
.... இது நல்ல செய்தி..... மகிழ்ச்சி. :-)
பாராங்கல் என்ன, மலையே நின்னு தட்டினாலும், தமிழா தமிழா ,தப்பைச் சுட்டிக்காட்டாமல் இருக்கமாட்டார்
//வீட்டில் இருந்து வெளியே செல்கையில்..வாசலில் ஒரு பெரிய பாறாங்கல் என் கால்களைப் பதம் பார்த்து விட்டது...செம்மொழி மாநாடு பற்றி என் சில இடுகைகள் கிண்டல் செய்வது போல இருந்ததால்..கலைஞர் செய்த சதியே பாறாங்கல் சமாச்சாரம் என்கின்றனர் சிலர். //
நாலு வார்த்தை சொன்னாலும் நறுக்குன்னு சொல்லி இருக்கீங்க...
நல்ல சுவை ஐயா!
//மணி முடி - சூடாமணி
காதுகள் - குண்டலகேசி
கைகள் - 'வளை' யாபதி
மார்பு - சீவக சிந்தாமணி
இடை - மணி'மேகலை'
கால்கள்- சிலம்பு(சிலப்பதிகாரம்)
கையில் இருப்பது திருமறையாம் 'திருக்குறள்'
//
மணோன்மனி என்ன ஆபரணம்
//மார்பு - சீவக சிந்தாமணி//
அது நெத்தி சூடி என்று நினைத்திருந்தேன்
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
//புருனோ Bruno said...
மணோன்மனி என்ன ஆபரணம்
//மார்பு - சீவக சிந்தாமணி//
அது நெத்தி சூடி என்று நினைத்திருந்தேன்//
சூடாமணி - நெத்தி சூடி
Post a Comment