2009ல் இந்தியாவில் மொத்த ஜனத்தொகை 119.8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.சீனாவின் மக்கள் தொகை 134.5 கோடியாம்.அதுவே 2050ல் சீனாவில் 141.7 கோடியாய் இருக்குமாம்..இந்தியாவோ முதலிடத்தைப் பிடித்து 161.38 கோடியாகத் திகழுமாம்.
2)போலி மருத்துவர்,போலி ரேஷன் கார்டு,போலி முத்திரைத் தாள்,போலி ஆவணம்,போலி சாதிச் சான்றிதழ், போலி காவல்துறை அதிகாரி, இவற்றைத் தொடர்ந்து போலி மதிப்பெண் பட்டியல்...சபாஷ்..இந்தியன் என்று சொல்லி பெருமைப்படுவோம்.:(((
3)பேசுபவரின் முகம் பார்த்து பேசக்கூடிய வீடியோ கால் வசதிக் கொண்ட 3ஜி வசதிக் கொண்ட செல்ஃபோன்கள் எம்.பி.க்களுக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
4)ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்படங்களை மினிமம் கேரண்டி முறையில் வெளியிடுவதால் தமிழக தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு 200 முதல் 300 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறதாம்.தியேட்டர்களின் எண்ணிக்கைக் குறைய இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.
5)இந்திய ரூபாய்க்கான் சின்னம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.சின்னத்தை வடிவமைத்தவர் தமிழகத்தைச்சேர்ந்த உதயகுமார்.தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களை மனதில் கொண்டு இதை உருவாக்கியதாகவும், மேலே இரண்டு கோடுகளும்,நடுவே வெள்ளை நிறத்துடன் இடைவெளியும் இருக்கும் என்கிறார்.
6)quick brown fox jumps over the lazy dog
Pack my box with five dozen liquor jugs
இந்த இரு வாக்கியங்களிலும் ஆங்கில ஆல்ஃபபெட் 26ம் வரும்
7)ஒவ்வொரு வாரமும் நான் படிக்கும் இடுகைகளிலிருந்து 'தமிழா தமிழா' வின்'மகுடம் 'அளிக்கும் இடுகை ஒன்றை தேங்காய்..மாங்காயில் ஒவ்வொரு வாரமும் சொல்ல உள்ளேன். இந்த வாரம் தமிழா..தமிழாவின் மகுடம் வால்பையனின் இந்த இடுகைக்கு.. வாழ்த்துகள் அருண்
8)கொசுறு ஒரு ஜோக்
உன்னோட மேல் அதிகாரிஉன்னைப் பார்த்து பயப்படுவாரா? அப்போ ஒரு வேளை அவரும் போலி அதிகாரியாக இருக்குமோ?
20 comments:
வணக்கம் ஐயா.. இன்று நல்ல தகவல்...
வால் அருணுக்கும், உதயகுமாருக்கும் வாழ்த்துக்கள்..
இந்தி ‘ர’ எழுத்து மேல் இன்னோரு கோடு எதற்கு என யோசித்தேன். மேல் கோட்டுக்கும், இடை வெள்ளைக்கும் அர்த்தம் புரிந்தது. நன்றி சார். வால்பையனுக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் உதயகுமாருக்கு. வால் அருணுக்கும்
நல்ல பகிர்வு அய்யா... நன்றி
சுண்டல் நல்லாருக்கு.
முதல்வார மகுடமே முற்றும் கோணலா இருந்தா பின்னாடி எப்படி இருக்கும் :)- (ச்சும்மானாச்சும் !)
தமிழருக்குப் பெருமை சேர்த்த உதயகுமாருக்கு பிளாகர்களின் வாழ்த்துக்கள்
// கே.ஆர்.பி.செந்தில் said...
வணக்கம் ஐயா.. இன்று நல்ல தகவல்...
வால் அருணுக்கும், உதயகுமாருக்கும் வாழ்த்துக்கள்.. //
நன்றி செந்தில்
//வானம்பாடிகள் said...
இந்தி ‘ர’ எழுத்து மேல் இன்னோரு கோடு எதற்கு என யோசித்தேன். மேல் கோட்டுக்கும், இடை வெள்ளைக்கும் அர்த்தம் புரிந்தது. நன்றி சார். வால்பையனுக்கு வாழ்த்துகள்.//
நன்றி Bala
//Karthick Chidambaram said...
வாழ்த்துக்கள் உதயகுமாருக்கு. வால் அருணுக்கும்//
நன்றி Karthick Chidambaram
3ஜி போன்- ஹுக்கும். அது ஒன்னுதான் பாக்கி இவங்க கிழிக்கறதுக்கு:(
பகிர்வுக்கு நன்றி.
//
2050ல் சீனாவில் 141.7 கோடியாய் இருக்குமாம்..இந்தியாவோ முதலிடத்தைப் பிடித்து 161.38 கோடியாகத் திகழுமாம்
//
முதலிடத்தை நம் வசப்படுத்த நாம் அனைவரும் கண்ணும் கருத்துமாக செயல்படுவோம்...
//வித்யா said...
3ஜி போன்- ஹுக்கும். அது ஒன்னுதான் பாக்கி இவங்க கிழிக்கறதுக்கு:(//
வருகைக்கு நன்றி வித்யா
//அக்பர் said...
பகிர்வுக்கு நன்றி.//
வருகைக்கு நன்றி அக்பர்
//வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said... முதலிடத்தை நம் வசப்படுத்த நாம் அனைவரும் கண்ணும் கருத்துமாக செயல்படுவோம்...//
வருகைக்கு நன்றி வழிப்போக்கனின் கிறுக்கல்கள்...
//க.பாலாசி said...
நல்ல பகிர்வு அய்யா... நன்றி//
நன்றி க.பாலாசி
//மணிகண்டன் said...
சுண்டல் நல்லாருக்கு.
முதல்வார மகுடமே முற்றும் கோணலா இருந்தா பின்னாடி எப்படி இருக்கும் :)- (ச்சும்மானாச்சும் !)//
நம்ம வலைப்பூ பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு மணி...
வருகைக்கு நன்றி
//goma said...
தமிழருக்குப் பெருமை சேர்த்த உதயகுமாருக்கு பிளாகர்களின் வாழ்த்துக்கள்//
நன்றி Goma
கடகடன்னு நியூஸ் வாசிச்சமாதிரி இருந்தது. :-)
வருகைக்கு நன்றி ஆதி
Post a Comment