உயிர் வாழ இன்றியமையாத உணவுப் பொருள்களைப் 'படி' என்பது வழக்கம்.இன்றும் பஞ்சப்படி,வீட்டு வாடகைப் படி என அது வழக்கில் உள்ளது. அதுபோல இன்றியமையா உணவு முதலியவற்றை இயற்கை நமக்கு வழங்கி வருவதால் 'இயற்கை படி அளக்கிறது' என்கிறோம்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் 'இறைவன் படியளக்கிறான்' என்பார்கள்.அளத்தல் என்பது கொடுத்தல்,தருதல்,செலுத்துதல் ஆகியவற்றை குறிக்கும்.
2)நீ பணக்காரன் என்பதால்..பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என எண்ணாதே! யார் உன் பணத்துக்கு மசிந்தாலும் காலனிடம் நீ லஞ்சம் கொடுத்து தப்பமுடியாது..(எங்கோ படித்தது)
3)தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு வாழ்நாளில் ஒவ்வாமை என்னும் நோய் வருவதில்லை.
4)பெண்களால் வஞ்சிக்கப் பட்டவர்கள் பெண்ணை 'வஞ்சி' என்றார்கள்.மனம் கன்னிப் போனவர்கள் எல்லாம் 'கன்னி' என்றழைத்தார்கள்.காதலில் தோல்வியுற்று குமரிக் கடலில் விழுந்தவர்கள் 'குமரி'என்றார்கள்.மது அருந்தியபின் கால் வாங்கியதால் 'மாது' என்றார்கள்.உள்ளதெல்லாம் அவள் மூலம் இழப்பதால் 'இல்லாள்' என்றார்கள். - கண்ணதாசன்
5)ஏவீ.எம் தயாரித்த 'அந்த நாள்' படத்தில் நடிக்க சிவாஜி கணேசன் அந்த நாளிலேயே லட்சம் ரூபாய் கேட்டாராம்.அவ்வளவு பணம் கொடுக்க முடியா நிறுவனம்..ஆனால் அப்பாத்திரத்தில் அவர் தான் நடிக்க வேண்டும் என விரும்பியதாம்.படத்தின் இயக்குநர் உடனே கால்ஷீட்டிற்கு இவ்வளவு என சம்பளம் பேசி சிவாஜியை புக் செய்தாராம்.எட்டு கால்ஷீட் முடிந்ததும் 'அடுத்து என்று ஷூட்டிங்' என்றாராம் சிவாஜி.'நீர் வரவேண்டாம்..உமது வேலை படத்தில் முடிந்து விட்டது' என்றார் இயக்குநர்.இப்படி ஒரு சிறு தொகையில் வேலையை முடித்த அந்த இயக்குநர் எஸ்.பாலசந்தர்
6)மனிதன் இறந்ததும் அவனது உறுப்புகள் செயல் இழக்கும் நேரங்கள்..கண்கள் 31 நிமிடங்கள், கால்கள் 4 மணி நேரம். மூளை 10 நிமிடங்கள், இதயம் ஒரு நிமிடம், தசைகள் 5 நாட்கள்
7) சென்ற வாரம் நான் படித்தவற்றுள் சிறந்த இடுகை இது..தமிழா..தமிழாவின் மகுடம் இந்த வாரம் இந்த இடுகைக்கு..வாழ்த்துகள் வினவு
8) கொசுறு ஒரு ஜோக்
என் மேலதிகாரி சரியான நன்றி கெட்ட ஜென்மம்..எதைக் கேட்டாலும் 'வள்..வள்..'ன்னு விழுவார்
'வள்..வள்' ன்னு விழறவர் நன்றியுள்ளவராகத்தானே இருக்க முடியும்.
8 comments:
அந்த நாள் .. அந்த நாள்தான்...
//எதையும் சாதிக்கலாம் என எண்ணாதே! யார் உன் பணத்துக்கு மசிந்தாலும் காலனிடம் நீ லஞ்சம் கொடுத்து தப்பமுடியாது..(எங்கோ படித்தது)//
காலனோட அட்ரஸ் தெரியாத காரணத்தால் இது. ஆமா அவருக்கு டாலரா தருனுமா இல்ல பவுண்டா .... ?
8) கொசுறு ஒரு ஜோக்
என் மேலதிகாரி சரியான நன்றி கெட்ட ஜென்மம்..எதைக் கேட்டாலும் 'வள்..வள்..'ன்னு விழுவார்
'வள்..வள்' ன்னு விழறவர் நன்றியுள்ளவராகத்தானே இருக்க முடியும்.
.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
எஸ். பாலச்சந்தர் விஷயம் புதுசு சார். கச்சேரியானாலும், சினிமாவானாலும் மனுஷன் கலக்கல்தான்:).
//பெண்களால் வஞ்சிக்கப் பட்டவர்கள் பெண்ணை 'வஞ்சி' என்றார்கள்.மனம் கன்னிப் போனவர்கள் எல்லாம் 'கன்னி' என்றழைத்தார்கள்.காதலில் தோல்வியுற்று குமரிக் கடலில் விழுந்தவர்கள் 'குமரி'என்றார்கள்.மது அருந்தியபின் கால் வாங்கியதால் 'மாது' என்றார்கள்.உள்ளதெல்லாம் அவள் மூலம் இழப்பதால் 'இல்லாள்' என்றார்கள். - கண்ணதாசன்//
இது போல் ஆண்களுக்கு யாராவது எழுதியிருக்கிறார்களா?
கதம்பம் மனம் வீசிகிறது.
முதலாவது செய்தி "படி" புதிதாய் இருந்தது ஐயா.நன்றி.
ஓ...யார் வள் வள்ன்னாலும் சிரிப்புத்தான் வரப்போகுது !
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
Post a Comment