ஆண்டுதோறும் பெண்களின் மரணத்திற்கு 51 விழுக்காடும், ஆண்களின் மரணத்திற்கு 37 விழுக்காடும் காரணமாக இருப்பது உயர் ரத்த அழுத்தமே என ஒரு ஆய்வு அறிக்கைக் கூறுகிறது
நாம் சாப்பிடும் உணவில்..தவறி எறும்பு விழுந்து..அதை நாம் சாப்பிட்டால்..கண் நன்றாகத் தெரியும் என நம் பெற்றோர்கள் வேடிக்கையாய் சொல்வதுண்டு.அது தவறு.எறும்புகளுக்கு கண் துல்லியமாய் தெரியும் என்பதே உண்மை..அதுவே மருவி..இப்படிச் சொல்லப் படுகிறது
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 1228950 கோடிகள்.நடப்பு நிதி ஆண்டில் மட்டும் முதல் மூன்று மாதங்களில் கடன் 1080 கோடி டாலர் அதாவது 48600 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது..(பொருளாதாரமாவது-வளர்ச்சியாவது)
2010 ஆண்டு ஆகஸ்ட் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 67கோடி செல்ஃஃபோன் இணைப்புகள் உள்ளனவாம்.இதில் ஏறக்குறைய பாதிபேர் இரண்டு செல்ஃபோன்களை பயன்படுத்துபவர்கள்
நான்கு ஆண்டுகளுக்கு முன் வாஷிங்டனில் நடத்தப்பட்ட வெளிநாட்டுக் கொள்கை என்னும் ஆய்வறிக்கை ஒன்றில் நிர்வாக இயந்திரம் தோல்வி அடைந்துவிட்டிருக்கும் 146 நாடுகளில் இந்தியாவிற்கு 97ஆம் இடம் கிடத்துள்ளதாம்.
ஒரு பொன்மொழி
எல்லாமே ஆட்டங்கண்டு வீழ்ச்சி அடைந்து முடிவுற்றாலும்
இதயம் தோல்வியுற்றாலும்
மரணமும் இருளும் மட்டுமே எஞ்சினாலும்
விளிம்பிற்கு வந்து இனி மரணம் மட்டுமே
என்றிருக்கும் போதும்
எந்த மனித வலிமையும் தடுக்கவோ
உதவவோ முடியாதென்றாலும்
இயற்கை கொடுத்துள்ள வலிமையால்
விதியை எதிர்த்து போரிட முடியும்
(அரவிந்தர்)
16 comments:
வழக்கம்போல் தொகுப்பு நன்று!
..இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 1228950 கோடிகள்.நடப்பு நிதி ஆண்டில் மட்டும் முதல் மூன்று மாதங்களில் கடன் 1080 கோடி டாலர் அதாவது 48600 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது..
இத எப்ப அடைக்கிறது....
/இந்தியாவிற்கு 97ஆம் இடம் கிடத்துள்ளதாம்./
அவமானம். அடுத்த ஐந்தாண்டுக்குள்ள முதல் 10 இடத்துக்குள்ளயாவது வரப்பாக்கணும்:))
வீட்டில் நாம் போடும் அரிசிமாக் கோலத்திலிருக்கும் அரிசிமாவை "எறும்பு தின்றால்" நமக்கு போகும் பாதைக்கு "கண் தெரியும்" என்பதுதான் சுருங்கி எறும்பு தின்றால் கண் தெரியும் என்றாகிவிட்டது.
//2010 ஆண்டு ஆகஸ்ட் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 67கோடி செல்ஃஃபோன் இணைப்புகள் உள்ளனவாம்//
நாம திரும்ப திரும்ப பேசறவங்க :)
//எஸ்.கே said...
வழக்கம்போல் தொகுப்பு நன்று!//
நன்றி எஸ்.கே
//சங்கவி said...
..இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 1228950 கோடிகள்.நடப்பு நிதி ஆண்டில் மட்டும் முதல் மூன்று மாதங்களில் கடன் 1080 கோடி டாலர் அதாவது 48600 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது..
இத எப்ப அடைக்கிறது
//
:))
//வானம்பாடிகள் said...
அவமானம். அடுத்த ஐந்தாண்டுக்குள்ள முதல் 10 இடத்துக்குள்ளயாவது வரப்பாக்கணும்:))//
the day is not too far
//azhagan said...
வீட்டில் நாம் போடும் அரிசிமாக் கோலத்திலிருக்கும் அரிசிமாவை "எறும்பு தின்றால்" நமக்கு போகும் பாதைக்கு "கண் தெரியும்" என்பதுதான் சுருங்கி எறும்பு தின்றால் கண் தெரியும் என்றாகிவிட்டது.//இப்படியும் ஒரு கோணம் உள்ளதா
வருகைக்கு நன்றி azhagan
//பிரசன்னா said...
//2010 ஆண்டு ஆகஸ்ட் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 67கோடி செல்ஃஃபோன் இணைப்புகள் உள்ளனவாம்//
நாம திரும்ப திரும்ப பேசறவங்க :)//
:)))
தொகுப்புகள் நல்லா இருக்கு.........
வருகைக்கு நன்றி வழிப்போக்கன் - யோகேஷ்
அருமை! நண்பரே
Rithtea
//தேவன் மாயம் said...
அருமை! நண்பரே//
வருகைக்கு நன்றி Dr
வருகைக்கு நன்றி Visa
Post a Comment