Wednesday, October 6, 2010

திரைப்பட இயக்குனர்கள்-6..A.பீம்சிங்




                                     
                                     பாவ மன்னிப்பு படத்தில் ஒரு காட்சி




Posted by Picasa



தமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் மாபெரும் வெற்றி பட இயக்குனர் வரிசையில் முதலாவதாகக் காணப்படுபவர் ஏ.பீம்சிங் ஆவார்.1924ல் பிறந்த இவர் 60க்கும் மேற்பட்ட தமிழ்,தெலுங்கு,ஹிந்தி படங்களை இயக்கியுள்ளார்.
பிரபல இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு விடம் உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றிய இவருக்கு 1954ல் அம்மையப்பன் என்னும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடத்தது.பின் 'புத்தா பிக்சர்ஸ்' என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 'பதி பக்தி' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார்.சிவாஜி,ஜெமினி,சாவித்திரி ஆகியோர் நடித்திருந்தனர்.இந்த கூட்டணி பின் தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்தது.
பின் தன் நிறுவனத்திலும் .பிற நிறுவனங்களிலும் பல படங்களை இயக்கினார்.ராசியாக எல்லா படங்களும் 'பா' என்ற எழுத்தில் தொடங்குமாறு பார்த்துக் கொண்டார்.
இவர் இயக்கத்தில் வந்த வெற்றி படங்கள்..பாசமலர்,பாவ மன்னிப்பு,பாலும் பழமும்,பார் மகளே பார்,பச்சை விளக்கு,பாகப்பிரிவினை,பந்த பாசம்,பழனி, பாலாடை,படித்தால் மட்டும் போதுமா,படிக்காத மேதை, பார்த்தால் பசி தீரும்,களத்தூர் கண்ணம்மா..
ஹிந்தியில் கௌரி,லோஃபர்,சாது அவுர் சைத்தான்,காந்தன்,மை சுப் ரகேங்கி,பாய் பகன்
இவர் அளவிற்கு வெற்றி படங்களைக் கொடுத்தவர் வேறு எவருமில்லை எனலாம்.
1961ஆம் ஆண்டு வெளிவந்த பாசமலர், பாவ மன்னிப்பு இரண்டும் வெள்ளிவிழா படங்கள்..தொடர்ந்து அதே ஆண்டு வந்த பாலு பழமும் மாபெரும் வெற்றி படம்.
ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' இவர் இயக்கத்தில் வந்து வெற்றிக்கனியைப் பரித்தது.
கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் 'விஸ்வநாதன்-ராமமூர்த்தி' இவரது இசையமைப்பாளர் ஆவார்.
பாவமன்னிப்பு, பாசமலர் பாடல்கள் பிரபலம்.இன்றும் கல்யாண வீடுகளில்..பாசமலர் படத்தில் வரும் 'வாராயென் தோழி' பாடலை நாதஸ்வரக் கலஞர்கள் வாசிக்காமல் இருப்பதில்லை.
இவரது மகன்களில் ஒருவரான லெனின் ஒரு பிரபல படத் தொகுப்பாளர் ஆவார்.
1978ஆம் ஆண்டு பீம்சிங் அமரர் ஆனார்.54 ஆண்டுகளே வாழ்ந்த ஒருவர் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியது..ஒரு மா பெரும் சாதனை ஆகும்.
அவரது படப்பாடல் ஒன்று...கேளுங்கள்..மகிழுங்கள்..

11 comments:

ராமலக்ஷ்மி said...

பழைய படங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.

//பாவமன்னிப்பு, பாசமலர் பாடல்கள் பிரபலம்.//

பாவ மன்னிப்பு படத்தில்தானே அந்த ‘மாமா மாப்ளே’ பாடல்:)? ரகளையாய் இருக்கும்.

Vidhya Chandrasekaran said...

இந்தப் படத்துல தானே மனிதன் மாறிவிட்டான்னு ஒரு பாட்டு வரும்? படம் பார்த்ததில்ல. ஆனா என் பெரியம்மாவிற்கு ரொம்ப பிடித்தப் படம் எனக் கூறுவார்.

@ராமலக்‌ஷ்மி மேடம் நீங்க சொல்ற பாட்டு பலே பாண்டியா படம்:)))

ராமலக்ஷ்மி said...

ஓ:))! தகவலுக்கு நன்றி வித்யா!!

பிரபாகர் said...

பீம்சிங் அவர்களின் பெரும்பாலான படங்களை என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். இன்றைய தலைமுறைக்கு அந்த அருமையான படங்களைப் பார்ப்பதற்கு பொறுமை இருக்காது என எண்ணுகிறேன். ஆபாசம் சிறிதும் இல்லாமல், குடும்பப் பாங்காஅன படங்களுக்கு இவரை ஒரு முன்னோடி எனவும் சொல்லலாம். பகிர்ந்தமைக்கு நன்றிங்கய்யா!


பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி...உங்கள் கேள்விக்கு பதிலைச் சொல்லிவிட்டார் வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பிரபா

ஹேமா said...

தகவலுக்கு நன்றி.54 வயதில் 60க்கும் மேற்பட்ட படங்கள் இயக்கியது என்பது பெர்ம் சாதனையே !

vasu balaji said...

எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர்:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர்:)//

நன்றி வானம்பாடிகள்