Friday, October 8, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (8-10-10)

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் நஸ்ரின்
இவர் தற்போது இந்து கடவுள் ராமர் பற்றிய காவியங்களை உருது மொழியில் மொழிபெயர்த்து வருகிறார்.இவர் ஏற்கனவே துளசிதாசர் எழுதிய ராம பக்த ஹனுமான் பற்றிய காவியத்தையும், கடவுள் துர்க்கையின் காவியத்தையும் உருதில் மொழி பெயர்த்திருக்கிறார்

2)சூரிய குடும்பத்திற்கு வெளியே அதிக வெப்பமும் அதிகக் குளிரும் இல்லாமல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இப்புதிய கிரகம் கிளைஸ் 581 என்று அழைக்கப்படுகிறது.இது பூமியைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு பெரியதாக இருக்குமாம்.(அரசியல்வாதிகள் வேலி போட கிளம்பிவிடப் போகிறார்கள்)

3)மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைஞானி இளையராஜாவுடன் சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு,செந்தமிழ்ப் பாட்டு,செந்தமிழ் செல்வன் ஆகிய மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ளார்

4)லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்கு இணையாகத் தயாராகி வருகிறதாம் சென்னை சிதம்பரம் ஸ்டேடியம்.50000 இருக்கைகளாம்..எல்லாம் குஷன் இருக்கைகள்.இனியாவது முக்கியப் போட்டிகளை சென்னைக்குத் தருவார்கள் என நம்புவோமாக

5)புவி வெப்பமடைவதால் ஏற்படும் சூறாவளி, கடுமையான மழை, துருவப் பிரதேசங்களில் பனிப்படலம் காணாமல் போவது ஆகியவை அதிகரித்துள்ளதால் கடளுக்குள் வரும் புதிய நீர் வரத்து 18 விழுக்காடு அதிகரித்துள்ளதாம்.வரும் காலங்களில் இதன் விைள்வு என்னவாக இருக்கும் என விஞ்ஞானிகளால் கணிக்க முடியவில்லையாம்.

6)என்றோ கார் விபத்தில் மறைந்துவிட்ட டயானா ..காமென்வெல்த் போட்டிக்கு வருகை தந்தமைக்கு நன்றி கூறினாராம் கல்மாடி.அவரைப் பொறுத்தவரை சார்லஸுடன் யார் வந்தாலும் அவர் டயானா தான் போலும் (என்ன ஒரு வெட்கக் கேடு..இது கூட தெரியாதவர்)

7) இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் எனக்குப் பிடித்த இடுகை இதுதான்.http://maaruthal.blogspot.com/2010/10/blog-post_08.html இந்த வார மகுட இடுகை இதுதான்.வாழ்த்துகள் கதிர்

8) கல்யாண்ஜியின் எனக்குப் பிடித்த கவிதை ஒன்று

நீ வருவதற்காக


காத்திருந்த நேரத்தில்தான்

பளிங்கு போல்

அசையாதிருந்த தெப்பக்குளம்

பார்க்க ஆரம்பித்தேன்.

தலைகீழாய் வரைந்து கொண்ட

பிம்பங்களுடன்

தண்ணீர் என் பார்வையை

வாங்கிக் கொண்டது முற்றிலும்;

உன்னை எதிர்பார்ப்பதையே

மறந்து விட்ட ஒரு கணத்தில்

உன்னுடைய கைக்கல் பட்டு

உடைந்தது

கண்ணாடிக்குளம்.

நீ வந்திருக்க வேண்டாம்

இப்போது

-கல்யாண்ஜி

9)உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

16 comments:

Unknown said...

கல்யாண்ஜி கவிதை அருமை ...

எஸ்.கே said...

தொகுப்பு நன்றாக உள்ளது!

மாதேவி said...

"(அரசியல்வாதிகள் வேலி போட கிளம்பிவிடப் போகிறார்கள்)" :))))

நல்ல தகவல்கள்.

vasu balaji said...

எந்த கிரகமானாலும் அங்க முதல்ல வரது செல்ஃபோனாத்தான் இருக்கும்:)).முதல்ல போர்ட் ட்ரஸ்ட், ஹைகோர்ட்டெல்லாம் பூந்தமல்லிக்கிட்ட தள்ளி வைக்கணும்:))

ஈரோடு கதிர் said...

டாயானக்கு நன்றி சொன்னதுக்கு எதும் கமிசன் வந்திருக்குமோ!

மகுடத்திற்கு நன்றிங்க

suneel krishnan said...

ஒரு முறை இந்திய தென் ஆப்ரிகா போட்டி காண சேப்பாக்கம் சென்றேன் , மழை வந்து ஒரு பந்து கூட போடவில்லை , கடுப்பாகி திரும்பி வந்து விட்டேன் அதுலிருந்து நேரில் போய் பார்க்கும் எண்ணமே போச்சு .

ஹேமா said...

கவிதைதான் பிடிச்சிருக்கு.நானும் இதன் சாயலில் ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
கே.ஆர்.பி.செந்தில் said...
கல்யாண்ஜி கவிதை அருமை ...//

நன்றி செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எஸ்.கே said...
தொகுப்பு நன்றாக உள்ளது!//

நன்றி எஸ்.கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
நல்ல தகவல்கள்.//

நன்றி மாதேவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு கதிர் said...
டாயானக்கு நன்றி சொன்னதுக்கு எதும் கமிசன் வந்திருக்குமோ!

மகுடத்திற்கு நன்றிங்க//

வருகைக்கு நன்றி கதிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//dr suneel krishnan said...
ஒரு முறை இந்திய தென் ஆப்ரிகா போட்டி காண சேப்பாக்கம் சென்றேன் , மழை வந்து ஒரு பந்து கூட போடவில்லை , கடுப்பாகி திரும்பி வந்து விட்டேன் அதுலிருந்து நேரில் போய் பார்க்கும் எண்ணமே போச்சு //

வருகைக்கு நன்றி dr suneel krishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
கவிதைதான் பிடிச்சிருக்கு.நானும் இதன் சாயலில் ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன்//

நன்றி ஹேமா

R. Gopi said...

அருமையான கவிதை சார். ரொம்ப நல்லா இருந்தது தொகுப்பு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Gopi Ramamoorthy