Saturday, October 2, 2010

எந்திரன்.. விமரிசனம் அல்ல ஆனால் விமரிசனம்

நான் சாதாரணமாக அனைத்துப் படங்களும் பார்த்து விடுவேன்.ஆனால் 'எந்திரன்' படம் எனக்கு மறக்க முடியா அனுபவம்..அதைக் கடைசி வரிகளில் பார்க்கலாம்.900 ரூபாய் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன்
எந்திரனை அனைவரும் பார்க்க வேண்டும்..ஏன் பார்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1)தமிழில் வந்த படங்களில் பிரம்மாண்ட பட வரிசையில் இதுவரை பேசப்பட்டு வந்தது. ஜெமினி எடுத்த சந்திரலேகா.அதுவும் அந்த Drum டேன்ஸிற்காக மட்டுமே.கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் கழித்து அந்த சாதனை முரியடிக்கப் பட்டுள்ளது.அதற்காக எந்திரன் பார்க்கலாம்.
2)பல ஆண்டுகளாக ஷங்கர் மனதில் இருந்த கதை..சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால்..தள்ளிக் கொண்டே போனது.இப்படத்தை முதலில் எடுக்கத் துவங்கிய ஐங்கரன் நிறுவனமும்..சில நாட்கள் படப்பிடிப்பு கழிந்ததும்..கைவிட..ஆபத்பாந்தவனாக வந்தவர் கலாநிதி மாறன்.200 கோடிகள் செலவான இப்படத்தில் என்னதான் இருக்கிறது என அறிய இப்படத்தைக் காணலாம்.
3) இளம் நடிகர்கள் பலர் இருக்க 60 வயதைத் தொட்ட நாயகனும்..37 வயது நாயகியும்..படத்தின் வெற்றிக்கு எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதற்காகப் பார்க்கலாம்.
4) கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்...அவதார் படத்தைப் பார்த்து வியந்த நாம் கிட்டத்தட்ட அதே ரேஞ்சிற்கு எடுக்கப் பட்ட நம்ம ஊர் ஆட்கள் எடுத்த படத்தை பார்க்க வேண்டாமா
5)ரஹ்மானின் இசைக்காக பார்க்கலாம்
6)ரோபோ வாக ரஜினி...இந்த நடிப்பிற்காகப் பார்க்கலாம்
7) சுஜாதா வின் வசனங்கள் பல இடங்களில் பளீச்சிடுகிறது..வசனம் சுஜாதா, ஷங்கர்,கார்க்கி என்று போட்டாலும்..எவை எவை சுஜாதாவின் பேனா எழுதியது என கண்டுபிடித்து விடலாம். அந்த ஜீனியஸின் வரிகளுக்காக படம் பார்க்கலாம்.
7) ரத்தினவேலு வின் ஒளிப்பதிவிற்காக பார்க்கலாம்.
8)கிளிமஞ்சாரோ, காதல் அணுக்கள் ஆகிய பாடல்கள், ரஜினி,ஐஸ் நடனம்.லொகேஷன் ஆகியவற்றிற்காக பார்க்கலாம்
9) எல்லாவற்றிற்கும் மேலாக ஷங்கர் என்னும் கலைஞனின் 10 ஆண்டுகள்(விஞ்ஞானி 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டு அந்த் ரோபோ வை உருவாக்கினேன் என்று வசனம் சொல்கிறார்.உண்மையில் ஷங்கர் தனது 10 ஆண்டு கனவைத்தான் சொல்கிறார் என்லாம்) ரோபோ கனவு நனவானதிற்காகப் பார்க்கலாம்
10) கடைசியாக..ஆனால் முதலாவதாக..தமிழ்த் திரையின் சூப்பர் ஹீரோவின் அருமையான வில்லத்தனத்திற்காகப் பார்க்கலாம்.

குறையே இல்லையா..
சொல்லலாம்..
முதல் பாதி அசுர வேகம்..படம் ஆரம்பித்ததுமே..இடைவேளை வந்தாற்போன்ற உணர்வு..அருமையான திரைக்கதை அமைப்பு..ஆனால் அதற்கு பின் ஒரு மணி நேரம்..ஒரு பெண்ணிற்காக சண்டை..வில்லன் டேனிடொன்சங்க்பா (ஆரம்பகால பொதிகை ஜுனோன் கால மெகாத்தொடர் நாயகன்) விஞ்ஞானி ரஜினி..என வழக்கமான தமிழ்த் திரைப்பட திரைக்கதை (ஷங்கர் இந்த கட்டத்தில்..திரைக்கதைக்கு சற்று முயன்று வித்தியாசமாக சொல்லியிருக்கலாம்)
கட்டிடம் தீப் பிடித்து எரிவது..ரோபோ ரஜினி மக்களைக் காப்பாற்றுவது..சற்று சிரிப்பைத்தான் எற்படுத்துகிறது.
அவ்தார்,அனகொண்டா,ஸ்பைடெர்மேன் ஆகிய ஆங்கிலப் படங்களும்..திரீ இடியட்ஸ் (பிரசவ காட்சி) ஹிந்தி படமும் ஆங்காங்கே ஞாபகம் வருவதைத் தடுக்க முடியவில்லை.
சேர்ந்தார் போல கம்யூட்டர் கிராஃபிக்ஸ் கடைசி அரை மணீ நேரம் வருவது ரசிக்க முடிந்தாலும்..சற்று இருக்கையில் நம்மை கொட்டாவி விடவைக்கிறது.
சுஜாதாவிற்கு இன்னும் சற்று மரியாதைக் கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில்..ரஜினியின் ரோபோ நடிப்பு, ஷங்கரின் உழைப்பு,டெக்னீஷியன்ஸ் அனைவரின் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்காக பார்க்கலாம்.
வெல்டன் ஷங்கர்

ஆமாம் ..என் அனுபவம் கடைசியில் சொல்கிறேன் என்றேனே என்ன தெரியுமா..

நான் முதல் நாள் பார்த்த..முதல் ரஜினி படம்..
அமெரிக்க ரசிகர்களுடன் $20 டிக்கெட் வாங்கி பார்த்தேன்..(ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 900 ஆச்சே ..அதைத்தான் சொன்னேன்)..ஹி..ஹி..ஹ்ஹி.


டிஸ்கி- சன் டி.வி., பங்குகள் கடந்த சில நாட்களில் கணிசமாக உயர்ந்து 530 ரூபாய் அளவில் தற்போது உள்ளது.

9 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ படத்த பாத்துட வேண்டியதுதான்!

சிவகுமாரன் said...

பார்க்கலாம் தான். டிக்கெட் கெடைக்கலியே மதுரையில

Ashok D said...

Pts are exactly suited :)

Anonymous said...

படம் நல்லாருக்குண்ணே!!!!!!!

vasu balaji said...

ahaa.யுஎஸ் போயிருக்கீங்களா.:)

butterfly Surya said...

வாழ்த்துகள் சார். அமெரிக்கா போனதற்கு ..

என்னை பொறுத்தவரை: பிரும்மாண்ட இரைச்சல்.

எந்திரன்: இது போன்ற குப்பையை தமிழ் சினிமா சரித்திரத்திலேயே பார்த்ததில்லை. தமிழ் சினிமாவின் நிரந்தர அவமானம்.{ டிவிட்டரில் எழுத்தாளர் சாரு நிவேதிதா)

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

அமெரிக்காவில் 20 டாலரா - ஓ நல்வாழ்த்துகள்

விமர்சனம் நன்று

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சிவகுமரன்

//பார்க்கலாம் தான். டிக்கெட் கெடைக்கலியே மதுரையில //

அம்பிகாவிலே ஃப்ரீயா கிடைக்குதுங்க - 200 / 250 ரேட்

கூட்டமெல்லாம் இல்லீங்கோ

நல்வாழ்த்துகள் சிவகுமரன்
நட்புடன் சீனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி