விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்படுபவர்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்களது உறவினர்கள் முன் வருவது தற்போது அதிகரித்துள்ளது. எனினும், உறுப்புகளை உரிய நேரத்தில் பயன்படுத்த இயலாமல் தடுக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன.
எனவே, உடல் உறுப்பு தானத்துக்கு உள்ள சட்ட நடவடிக்கைகளை தளர்த்த வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதில் உள்ள மருத்துவம் சார்ந்த சட்ட நடவடிக்கைகளில் நடைமுறைகளை தளர்த்தி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் ஏராளம். இதில் தலையில் அடிபட்டு அதனால் மூளைச்சாவு ஏற்படுபவர்களும் ஏராளம். மூளைச் சாவு என்பது, உடல் உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்க, அவர்களது மூளை செயலிழந்து, உயிர் வாழ வாய்ப்பே இல்லை என்ற நிலையில், அவர்களது உறவினர்கள், பாதிக்கப்பட்டவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருகின்றனர்.
ஆனால் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று உறவினர்கள் முடிவெடுத்து விட்டால் மட்டும் போதாது. அதற்கென சில மருத்துவ மற்றும் சட்ட நடைமுறைகள் உள்ளன. அவற்றை எல்லாம் முடிப்பதற்குள் பாதிக்கப்பட்டவரது உடல் உறுப்புகள் வீணாகிறது. இதனால் தானமாக கிடைக்க வேண்டிய உடல் உறுப்புகள் பயன்படுத்த முடியாத நிலையை அடைகிறது.
எனவே, உடல் உறுப்பு தானம் குறித்த சட்ட நடவடிக்கைகளை தளர்த்தி வழங்கப்பட்டுள்ள புதிய உத்தரவில், மூளை சாவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தால், மருத்துவரே முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளலாம். இது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினரிடம் (மனைவி,குழந்தைகள், பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகள்) உடல் உறுப்பு தானம் கொடுப்பது தொடர்பான விருப்பத்தை அறியலாம்.
தானம் கொடுக்க விரும்பினால், அடுத்த கட்டமாக விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக மருத்துவம் சார்ந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அவரது புலன் விசாரணைக்குப் பின்பு, உடல் உறுப்பு தான சட்டப்படி மூளை சாவு உறுதி செய்வதற்கான 2வது பரிசோதனை நடத்த வேண்டும். இறப்புக்கானகாரணத்தில் சந்தேகம் இல்லாவிட்டால், உடனடியாக விசாரணை அதிகாரி, உடல் உறுப்பு தானம் செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என விசாரணை அதிகாரி கருதினால், அதற்கான அனுமதி கடிதம், உடல் உறுப்புகளின் இயங்குநிலை குறித்து மருத்துவ அதிகாரி கொடுக்கும் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் உடல் உறுப்புகளை தானம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
(நன்றி - வெப்துனியா)
13 comments:
உடல் உறுப்பு தானம் என்பது மிகவும் அவசியான விசயம் ...
மன்னிக்கவும் அவசியமான விசயம் என்று வந்திருக்க வேண்டும் ...
thanks for the post sir..
நல்ல தகவல் மிக்க நன்றி
வருகைக்கு நன்றி செந்தில்
வருகைக்கு நன்றி LK
வருகைக்கு நன்றி Gayathri
me and wife had done உடல் உறுப்பு தானம்.
just for the record :)
Great Ravi
எனக்கும் இதுபற்றி முயற்சி செய்ய நீண்ட நாள் ஆசை.
நிச்சயம் செய்வேன்!
வருகைக்கு நன்றி ஹேமா
மிக அவசியமான பதிவு சார். நான் கூட கண் தானம் செய்வதாக முடிவு செய்து எழுதி வைத்திருக்கிறேன்.......உங்க இடுகையைப் பார்த்து இன்னும் சில யோசனைகள்.......நன்றி சார். மனிதம் காப்போம்.....
வருகைக்கு நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து
Post a Comment