Monday, October 11, 2010

தமிழ்ப்படங்கள் வெளியீடு ஏன் இல்லை

தமிழ்ப் படங்கள் புற்றீசல் போல வாரம் மூன்று வெளியாகிக் கொண்டிருந்தன.இவை பட்ஜெட் அதிக பட்சம் 10 கோடி என வைத்துக்கொள்வோம்.
அக்டோபர் ஒன்றாம் நாள் ரஜினியின் பிரம்மாண்ட படம் 'எந்திரன்' வெளியானது.இதற்கான செலவு கிட்டத்தட்ட 200 கோடிகள்.வேறு விதத்தில் கூற வேண்டுமாயின் 20 சாதாரண படங்கள் எடுக்க எவ்வளவு பணம் தேவையோ..அவ்வளவு பணத்தை இந்த ஒரு படம் முழுங்கியுள்ளது.
அதனால்தான் மூன்று வாரங்கள் எந்த புதுப் படமும் வெளீயிடுவது இல்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதா?
இதனால் எவ்வளவு சிறிய படத் தயாரிப்பாளர்கள் நசுக்கப்பட்டுள்ளார்கள்.குறிப்பாக நவராத்திரி விடுமுறைக் காலங்களில் ஓரளவு வசூல் செய்திருக்கும் இப்படங்கள் வெளிவந்திருந்தால்.
எந்திரனைப் பொறுத்தவரை பார்க்க நினைப்பவர்கள் அனைவரும் அதைப் பார்த்துவிடுவர்..அதனால் அதன் வசூல் இதனால் பாதிக்கப் படாது என்றே தோன்றுகிறது.
சின்ன மீன்களை விழுங்கித்தான் பெரிய மீன் வாழும் என்ற தத்துவம் இதற்கும் பொருத்தமே.
பாவம் இந்த தயாரிப்பாளர்கள்..இவர்கள் படங்கள் அக்டோபர் 22க்கு மேல்தான் வெளியிடப்படுமாம்.
எல்லோர் நலனையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டதாம்.
பணம் இருந்தால்..எந்த முடிவையும் எடுக்க வைத்துவிட்டு அவை ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவு என சொல்லிவிடலாம் போலிருக்கிறது.
'பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா" என்ற கண்ணதாசன் வரிகளே ஞாபகம் வருகிறது.

7 comments:

vasu balaji said...

'பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா" என்ற கண்ணதாசன் வரிகளே ஞாபகம் வருகிறது.//

:). அத்த்த்து

பிரபாகர் said...

பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு கேட்டது கருடா சௌக்யமா?..... சரியாய் சொன்னீர்கள், காலம் மாறும்.

பிரபாகர்...

Unknown said...

ஐயா பெரும்பாலான தியேட்டரில் எந்திரன் ஊத்திக்கொண்டது அதனால் அக்டோபர் 15, கிட்டத்தட்ட எட்டு படங்கள் வெளியாகின்றன ..

Radhakrishnan said...

ஆஹா எந்திரன் தோல்வியா?!

நல்ல படங்கள் விரைவில் வெளிவரட்டும்.

Unknown said...

nice comedy post :)

either you are really biased or don't know anything about of big films creating new markets for industry. wake up and read some north Indian news, I don't think any body is facing loss.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தவர்களுக்கும் கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//James Arputha Raj said...
nice comedy post :)

either you are really biased or don't know anything about of big films creating new markets for industry. wake up and read some north Indian news, I don't think any body is facing loss.//


தங்கள் வருகைக்கு நன்றி..நீங்கள் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய செய்தி படிப்பதில்லை என்று தெரிகிறது.பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப் பட்டுள்ள இப்படத்தின் வருவாய் பாதிக்கக் கூடாது, என்றும்..மேலும் சிறு படங்கள் தியேட்டர் கிடைக்காமலும், வரும்படியும் குறையக் கூடும் என்றும்..தமிழ்த் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்து (!!) மூன்று வாரங்கள் வேறு தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என தீர்மானம் போட்டனர்