கடந்த ஜூலை 31 ஆம் நாள் மலேஷியாவில் எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாய் நடந்தது.இதில்..கலாநிதி மாறன்,ஷங்கர்,ரஜினி,ரஹ்மான்,வைரமுத்து,ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் தமிழ்ப்பட பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.நிகழ்ச்சி சன் டீவியிலும் ஒலி/ஒளி பரப்பப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் சார்பில் ரெட் ஜயண்ட் மூவீஸ் தயாரிக்கும் மன்மதன் அம்பு படத்தில்.. கமல்,திரிஷா நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் பட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
எந்திரன் படத்தைப் போல பெரிய அளவில் பிரம்மாண்டமாய் நிகழ்ச்சியை நடத்த உள்ளனராம் தயாரிப்புத் தரப்பு.இப்படம் தெலுங்கு,ஹிந்தியிலும் டப் செய்யப் படுகிறது.
எந்திரனைவிட ஒரு திரையரங்கிலாவது அதிகமாக இப்படத்தை வெளியிட உள்ளனராம்.இதற்கான விளம்பரத்திற்கு பல கோடிகள் ஒதுக்கப் பட்டுள்ளது.
இப்படத்தின் இசை சிங்கப்பூரில் எக்ஸ்போ அரங்கில் நவம்பர் 20ஆம் நாள் நடைபெற உள்ளது.விழாவில் நாயக,நாயகியர்,இயக்குநர்,இசை அமைப்பாளர்,தயாரிப்பாளர்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி பிரசாத் நிகழ்ச்சியில் பாடல்களை மேடையில் பாட வைக்கிறார்.
இவ்விழா நடைபெறும் முன் தினம் சென்னையிலிருந்து ஒரு சொகுசு கப்பலில் 500 ரசிகர்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறாராம் தயாரிப்பாளர் (இசை வெளியீட்டு விழாவிற்கும் கட்சி மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்று கூட்டம் சேர்ப்பது போல சேர்க்கும் நிலை இனி வந்துவிடும் போல உள்ளது!!)
ஆரோக்யமான போட்டியானால் பரவாயில்லை..
நீயா..நானா போட்டி எனில்...
நிகழ்ச்சி கலைஞர் டீவியில் ஒளி/ஒலி பரப்பப்படுமாம்.
கான மயிலாட வான்கோழி ஆடும் சரிதான்..ஆனால் இங்கு
மயிலுக்கே இந்த நிலையா?
6 comments:
அதென்ன சார் லேபில்ல மன்மதன் அம்பு. எனி அம்பு குத்து?:))
//எந்திரனைவிட ஒரு திரையரங்கிலாவது அதிகமாக இப்படத்தை வெளியிட உள்ளனராம்//
நீங்கள் சொன்னது போல் நடக்க வாய்ப்பில்லை....
எந்திரன் 2250 பிரிண்டுகளுடன் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியானது..
மன்மத அம்பு குழுவினர் சுமார் 1000 பிரிண்ட் அளவே ரிலீஸ் செய்ய இருப்பதாக செய்திகள் கூறுகின்றன..
//R.Gopi said...
//எந்திரனைவிட ஒரு திரையரங்கிலாவது அதிகமாக இப்படத்தை வெளியிட உள்ளனராம்//
நீங்கள் சொன்னது போல் நடக்க வாய்ப்பில்லை....
எந்திரன் 2250 பிரிண்டுகளுடன் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியானது..
மன்மத அம்பு குழுவினர் சுமார் 1000 பிரிண்ட் அளவே ரிலீஸ் செய்ய இருப்பதாக செய்திகள் கூறுகின்றன..//
அன்பின் கோபி
இது என் யூகம் அல்ல..இணையத்திலும், சினிமா பத்திரிகைகளிலும் வந்த செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது.அவ்வளவே!
வருகைக்கு நன்றி
அது படத்தின் பெயர்..மற்றபடி எந்த உள்குத்து..வெளிக்குத்து ஏதும் இல்லை
வருகைக்கு நன்றி பாலா
இங்கு சினிமா வியாபாரம்.. அதற்காக என்ன வேண்டுமானலும் செய்வார்கள்...
வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்
Post a Comment