Tuesday, October 26, 2010

இலங்கையின் போர்க்குற்றம்: பதற வைக்கும் புதிய ஆதாரங்கள்! இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கையில் கிடைத்த தமிழர்களையும் பெண் போராளிகளையும் மிகவும் கொடூரமாக கொன்று குவித்துள்ளது இலங்கை ராணும். இதுகுறித்து இதுவரை வெளிவராத புதிய படங்களை வெளியிட்டுள்ளது தமிழ்வின் இணையதளம்.புலிகளுடனான போரில், பொதுமக்களை ராணுவம் கொல்லவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் பெருமளவில் போர்க்குற்றம் செய்த நாடு என பல நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது இலங்கை. ஆனாலும் தொடர்ந்து, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்கள் நாளுக்கு நாள் வெளி வந்து கொண்டே உள்ளன.அந்த வகையில் மிக அண்மையில் சில கொடூரமான படங்கள் வெளியாகியுள்ளன. இப்படங்கள் கடந்த 2009 மே மாதம் வன்னியில் நடந்த யுத்தத்தில், சிங்களப் படைகள் தமிழர் மீது நடத்திய வெறியாட்டத்தின்போது எடுக்கப்பட்டவை.ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி, அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு, மிகக் கோரமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்ப் பெண்கள் மற்றும் போராளிகளைக் கொன்று உடல்களை தெருவில் வீசிவிட்டு சிங்களர்கள் செல்லும் காட்சிகள், உயிரோடு தமிழர்களை ஓடவிட்டு சுட்டுக் கொல்லும் கொடூரம் போன்றவை இந்தப் படங்களில் இடம்பெற்றுள்ளன.போர்க்குற்றம் குறித்து பொதுமக்களும் தங்களுக்குத் தெரிந்த, தங்களிடம் உள்ள ஆதாரங்களைத் தரலாம் என ஐநா நிபுணர் குழு கூறியுள்ள நிலையில் இந்த படங்கள் வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.இவற்றையும் ஐநா போர்க்குற்ற விசாரணை நிபுணர் குழுவுக்கு ஆதாரங்களாக அனுப்பி வைக்க முடியும்.
புகைப்படங்கள்
-செய்தி - நன்றி தட்ஸ்தமிழ்

10 comments:

Unknown said...

இந்தக் கொடூரத்தை இந்திய ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வருத்தம் அளிக்கிறது..

குழலி / Kuzhali said...

இம்மாதிரியான படங்களை போட்டு அச்சச்சோ என்றோ ஏ ராஜபக்சே என்றோ திட்டிவிட்டு வேறு என்ன செய்யபோகின்றீர்கள்? கருணாநிதி வாழ்க என்று கோசம் போட்டு ஓட்டு தானே போட போகின்றீர்கள்!!! பின் ஏனிந்த பரிதாபம் பதறவைப்பது என்றெல்லாம்? யாரை ஏமாற்றிக்கொள்கின்றீர்கள் உங்களை நீங்களேவா அல்லது மற்றவர்களையா?

vasu balaji said...

இதெல்லாம் தெரியாமலா இருக்கு எல்லாருக்கும். எத்தனை ஆதாரம் இருந்தாலும் ஏதும் செய்ய மனசு வேணாமா? :(

ILA (a) இளா said...

பேசலாங்களா?

Unknown said...

:(

podang_maan said...

//கருணாநிதி வாழ்க என்று கோசம் போட்டு ஓட்டு தானே போட போகின்றீர்கள்!!! //

பாமகாவுக்கு ஓட்டு போட்டா ஓகேவா? இல்லை ஜெயலலிதாவுக்கு ஓக்கேவா? என்ன செய்யலாம்னு குழலி நீங்களே சொல்லிருங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///குழலி / Kuzhali said...
இம்மாதிரியான படங்களை போட்டு அச்சச்சோ என்றோ ஏ ராஜபக்சே என்றோ திட்டிவிட்டு வேறு என்ன செய்யபோகின்றீர்கள்? கருணாநிதி வாழ்க என்று கோசம் போட்டு ஓட்டு தானே போட போகின்றீர்கள்!!! பின் ஏனிந்த பரிதாபம் பதறவைப்பது என்றெல்லாம்? யாரை ஏமாற்றிக்கொள்கின்றீர்கள் உங்களை நீங்களேவா அல்லது மற்றவர்களையா?//தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி குழலி..
உங்களுக்கு சிலவற்றை சொல்ல நான் ஆசைப்படுகிறேன்..
நான் யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை..காரணம்..நான் அரசியல்வாதி அல்ல.ஒரு செய்தியைக் கேள்விப்பட்டால் மனம் வேதனையடைய..அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வது போலத்தான் இதுவும்..உங்களை ஏமாற்றி எனக்கு ஒன்றுமாகப்போவதில்லை.
இன்று தமிழகத்தை ஆளும் கட்சிகள் என்று பார்த்தால்..அவரை விட இவர் பரவாயில்லை என்ற நிலை.ஆகவே நீங்கள் சொல்வது போல என் ஓட்டு கலைஞருக்கே.என்ன ஒன்று..கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும்..அது தோல்வியடைய வேண்டும் என விழைபவன் நான்.
மற்றபடி..ராஜபக்க்ஷே விஷயத்தில்..காலம் பதில் சொல்லும்.
தமிழக அரசியல்வாதிகளை 'கோமாளிகள்' என்றவர் நிலை இன்று அங்கு என்ன என உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
இந்தக் கொடூரத்தை இந்திய ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வருத்தம் அளிக்கிறது..//

((

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

seervaalan said...

நான் கடந்துவந்த நேற்றைய நாள் நினைவுக்கு வருகிறது