Wednesday, October 27, 2010

கொன்றன்ன இன்னா செயினும்...

அவன் அனைவரின் நலம் நாடும் நண்பனாய் திகழ்ந்தான்.
நண்பர்களுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்...அதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும் கவலையின்றி அவர்கள் நலனுக்கு உழைத்தான்.
நண்பர்கள் நலமே தன் மூச்சு எனத் திகழ்ந்தான்.
அவன் நண்பர்களும் அவனை தலை மீது வைத்துக் கொண்டாடினர்.
காலம் ஓடியது..
அவன் முதுமை அடைந்தான்..முன்னர் போல அவனால் நண்பர்களுக்கு உதவிட முடியவில்லை.அப்படியே அவன் உதவ எண்ணினாலும்..சந்தர்ப்பம், சூழ்நிலை அதற்கேற்ப அமையவில்லை.
அவன் இனி பயனற்றவன்..என அறிந்த உடன் இருந்த நண்பர்கள்..அவனை விட்டு விலகினர்..விலகியவரில் சிலர் அவனைத் தூற்றினர்..அவன் அவர்களுக்கு கொடுமை இழப்பதைப் போல பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அவனுடன் ,அவன் நிலை அறிந்து சிலர் இன்னமும் இருக்கின்றனர்..அவற்றில் ஒருவர்..

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைக் கூட நம் உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது...என்றார்.

10 comments:

vasu balaji said...

பெஸ்ட் சார். கூடிய வரைக்கும் நம்ம பாலிசி இதான்:)

goma said...

இந்த குறள் எனக்குப் பிடித்த வரிசையில் இருக்கிறது.

நசரேயன் said...

உள்ளேன் ஐயா

நசரேயன் said...

//நம்ம பாலிசி//

பாலிசி தொகை எவ்வளவு ?

R. Gopi said...

நல்ல குறள். பகிர்வுக்கு நன்றி

பவள சங்கரி said...

சார் நான் அடிக்கடி நினைத்து என்னை அமைதியாக்கிக் கொள்ள துணை நிற்கும் குறள்...இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்...

Unknown said...

நல்ல குறள் விளக்கம். நன்றி

suneel krishnan said...

நல்ல ,எளிய விளக்கம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தோர்,கருத்து தெரிவித்தோர்,வாக்களித்தோர் ஆகிய அனைவருக்கும் நன்றி

அந்நியன் said...

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்