Saturday, October 30, 2010

அறிமுகம்..(அரை பக்கக் கதை)

காலை அலுவலகம் கிளம்பும் வரை குழந்தை அனு எழுந்திருக்கவில்லை .
குழந்தைக்குத் தேவையான பால்,டயப்பர்,மாற்று உடை எல்லாம் எடுத்து வைத்தாள் கீதா.
சேகர்..அவளையையும், தூங்கும் அனுவையும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
கிரச் சில் குழந்தையை விட்டு விட்டு..வந்த கீதாவை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் அலுவலகம் சென்றான் சேகர்
மாலை தான் அலுவலகத்திலிருந்து திரும்ப நேரம் ஆகும் என்ப
தால்..கீதாவை மாலை ஒரு ஆட்டோ பிடித்து கிரச் சிற்குப் போய் அனுவையும் தூக்கிக் கொண்டு வீடு செல்லச் சொல்லிவிட்டான்.
அனுவும்..மாலை கிரச் சில் ஆட்டோவை நிறுத்திவிட்டு..குழந்தையை அழைத்துவரச் சென்றாள்.
குழந்தை ஆயாவின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது.இவள் கூப்பிட்ட போது வர மறுத்து அழுதது.
"அனுகுட்டி..இது உன் அம்மாடா..சமர்த்தா அம்மா கிட்ட போ' என கொஞ்சினாள் ஆயா..
கீதாவிற்கு விழியோரம் நீர்..
'அப்பாவையே..அம்மாதான் குழந்தைக்கு அறிமுகம் செய்கிறாள்..என்பார்கள்..ஆனால்..இன்று கிரச் ஆயா குழந்தைக்கு அதன் அம்மாவை அறிமுகப் படுத்துகிறாளே'என்று மனதிற்குள் விம்மினாள்.

16 comments:

Unknown said...

விலைவாசி விண்ணைத்தொட இருவரும் வேலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம் .. இதனைத்தான் தரும்..

நிதர்சனக்கதை....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அம்மா அப்பாவை,
குழந்தைக்கு அறிமுகம்
செய்விக்க,
அம்மாவை ஆயா,
குழந்தைக்கு
அறிமுகம்
செய்து வைத்தாள்..
-- என்ன ஒரு சத்யமான வார்த்தை!

மதுரை சரவணன் said...

அவசர உலகில் , எதார்த்தமான கதை.. அறிமுகம் பெற்றோர் வாழ்த்துக்கள்

Chitra said...

ம்ம்ம்ம்....... கண்ணை விற்று ஓவியம் வாங்குவது போல.... குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை முறை வழங்க - குழந்தையையே தவிக்க விட வைக்க வேண்டியது உள்ளதே!

Starjan (ஸ்டார்ஜன்) said...

உண்மையான உண்மை. நெகிழவைத்த கதை.

vasu balaji said...

அரைப்பக்க கதை அறைகிறது யதார்த்தம்.

க ரா said...

நிதர்சனம்...

R. Gopi said...

நச்சென்று ரத்தின சுருக்கமாக எழுதுகிறீர்கள்.

கதை சூப்பர் சார்.

Anisha Yunus said...

Stunning !!

:((

நிலாமதி said...

உண்மை உரத்துச்சொல்ல் படுகிறது

எல் கே said...

யதார்த்தக் கதை

பவள சங்கரி said...

உண்மை....உண்மை....ஆனால் ஒப்புக்கொள்ளப்படாத உண்மை.

சிவராம்குமார் said...

என்ன செய்வது.... பணத்தை நாட வேண்டி உள்ள வாழ்க்கை!!!!

பிரபாகர் said...

பெற்றவர்களைவிடவும் பார்த்துக்கொள்ளும் ஆயாவிடம் பாசமாய் இருப்பவர்களைக் கண்ணுற்றிருக்கிறேன் அய்யா... இச் சிறு கதையில் யதார்த்தம்...

பிரபாகர்...

'பரிவை' சே.குமார் said...

நிதர்சனக்கதை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி