Monday, October 4, 2010

மூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும்

கையில் இருந்த பணத்தை எண்ணினான்..மீண்டும் எண்ணினான் முத்து..ஒரே மாதிரி தான் இருந்தது.ஐநூறு ரூபாய்.

இன்றைக்கு டாஸ்மாக் போயிட வேண்டியதுதான்.நாளைக்குப் போனால்..காந்தி ஜெயந்தி..கடை இருக்காது என்பதால்..மக்கள் இரண்டு நாட்கள் முன்னதாகவே சரக்கை வாங்கி கை இருப்பில் வைத்து விடுவார்கள்.சமயத்தில்.. கடைசியில் வருபவர்களுக்கு ஸ்டாக் இல்லை என்று சொல்லி விடுவார்கள்.

அப்படியெல்லாம் சொல்லி விடக்கூடாது என ஆண்டவனை எல்லாம் வேண்டிக்கொண்டு..டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று மூன்று பீர் பாட்டில் வாங்கினான்.

**** **** **** ***

'என்னங்க..போன மாச வாடகையே பாக்கி..வீட்டு ஓனர் வந்து கத்திட்டுப் போனார்..பிறகு ரேஷன் வாங்கணும்..பால் காசு கொடுத்தாத் தான் கொடுப்பேன்னு சொல்லிட்டார் பால்காரர்..குழந்தைக்குபால் இல்லை என்றாள் பாக்கியலட்சுமி.

'ம்..ம்..' என்றான்.

அப்படின்னா என்ன அர்த்தம்ங்க..என்றாள்

அடச்சே..மனுஷனுக்கு வீட்டிலே நிம்மதி இல்ல..ஏண்டா வரோம்னு இருக்கு

அப்படி சொன்னா எப்படி..கையில இருந்த பணத்திலே டாஸ்மாக்குக்குப் போய் தொலைச்சுட்டீங்க..வீட்டு ஞாபகமே இல்லை உங்களுக்கு..குழந்தைகள் எல்லாம் நான் யாருக்கோவா பெத்தேன்..உங்களுக்குத் தானே..அப்ப அவங்களுக்கான செலவு பத்தியும் யோசிக்கணும்

என்னடி சொன்னே..என்றபடியே அவள் கன்னத்தில் பளார் என அறைந்தான்..பின் வாங்கிவந்த பீர் பாட்டிகளை ஜாக்கிரதையாக உள்ளே கொண்டு சென்று வைத்தான்.

***** ***** ****** *****

'முத்து..எவ்வளவு பணத்தோட வந்திருக்க?'

'..கையில நூறு ரூபாயும்..கொஞ்சம் சில்லறையும் தான் இருக்கு'

'என்ன முத்து.. நீயே இப்படிச் சொன்னா எப்படி..முப்பது அடி தலைவர் கட் ஆவுட்டுக்கு பீர் அபிஷேகம் பண்ணனும்னா எவ்வளவு பீர் வேணும்..அதைத்தவிர படத்துக்கு டிக்கட் இரு நூறு ரூபாய்' என்றவாறு தலையைச் சொறிந்தான்..லோகல் தலைவன்.

'இல்ல தலைவா..என்னால முடிஞ்சது மூணு பீர் வாங்கியாந்திருக்கேன்'

'அப்படியா..சரி..சரி..அந்த அண்டாவுலபோய்க் கொட்டு..படத்துக்கு துட்டு இல்லேனா படம் அப்புறம் பார்த்துக்கலாம்'

படம் பார்க்க முடியா..ஏமாற்றம் அடைந்த முத்து..பீரை அண்டாவில் கொட்டிவிட்டு..தன் தலைவன் நடித்த படத்தை முதல் நாள் பார்க்க முடியாத துக்கம் தாளாது ..கையில் இருந்த காசுக்கு கள்ள சாரயத்தை வாங்கி குடித்துவிட்டு..அந்த நடிகர் நடத்த படம் வெளியாகும் தியேட்டரின் நடைபாதையில் வீழ்ந்து கிடந்தான்..

**** ***** **** *****

குழந்தை பசியால் பாலுக்கு கத்தியது. சத்தான உணவில்லாததால் பால் சுரக்காத வற்றிப் போன தன் மார்பை குழந்தை சுவைக்க அதன் வாயில் திணித்தாள் பாக்கியலட்சுமி.

**** ***** ***** *****

தன் படம் வெற்றியடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட பிரபலங்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்துக் கொண்டிருந்தார் நடிகர்

14 comments:

ஹேமா said...

என்ன சொல்ல!
ஏன்தான் சிலர் இப்படி
இருப்பார்களோ.அடிமுட்டாள்கள் !

Anonymous said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 



நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

velji said...

அடிமுட்டாள்கள் என்ற ஹேமாவின் வார்த்தையே சரி!

பிரபாகர் said...

அடிமுட்டாள்கள் என்பதைவிட கேணைகள் என்பதும் சரியாக இருக்கும் அய்யா!

பிரபாகர்...

பவள சங்கரி said...

சே.....இப்படியும் சில ஜென்மங்கள் பூமிக்குப் பாரமாக......

NAGA INTHU said...

//தன் படம் வெற்றியடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட பிரபலங்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்துக் கொண்டிருந்தார் நடிகர்//
தற்போதுஉள்ளஎந்திரதனமானசூழலுக்கு இந்த பதிவு சரியான சம்மட்டிஅடி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஹேமா said...
என்ன சொல்ல!
ஏன்தான் சிலர் இப்படி
இருப்பார்களோ.அடிமுட்டாள்கள் !//

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தமிழினி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//velji said...
அடிமுட்டாள்கள் என்ற ஹேமாவின் வார்த்தையே சரி!//

வருகைக்கு நன்றி velji

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
அடிமுட்டாள்கள் என்பதைவிட கேணைகள் என்பதும் சரியாக இருக்கும் அய்யா!

பிரபாகர்...//

வருகைக்கு நன்றி பிரபா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
சே.....இப்படியும் சில ஜென்மங்கள் பூமிக்குப் பாரமாக......//


நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து

T.V.ராதாகிருஷ்ணன் said...

//NAGA said...
//தன் படம் வெற்றியடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட பிரபலங்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்துக் கொண்டிருந்தார் நடிகர்//
தற்போதுஉள்ளஎந்திரதனமானசூழலுக்கு இந்த பதிவு சரியான சம்மட்டிஅடி//

வருகைக்கு நன்றி Naga

நிகழ்காலத்தில்... said...

தண்ணியடிக்கிறவனே பரவாயில்ல போல:)

நான் இதைப் படிக்கும்போது முதலில் அப்படித்தான் நினைத்தேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நிகழ்காலத்தில்...