பரிசல்..ஆதி..முயற்சி எடுத்து நடத்தும் சவால் சிறுகதைப் போட்டிக் குறித்து பரிசல் எழுதியுள்ள பதிவில்..
'பிரமிப்பாய் இருக்கிறது..75+ கதைகள் வந்துள்ளன (மொத்தம் 83 கதைகள்)' என்றுள்ளார்..ஆனால்..
உண்மையிலேயே பிரமிப்பா...நான் பரிசல் ஆக இருந்திருந்தால் அப்படி சொல்லியிருக்க மாட்டேன்..
சிறுகதைகளை திறம்பட எழுதும் பல (பிரபலம்!) பதிவர்கள் கலந்துக் கொள்ளவில்லை.கதைகள் எழுதியவர்கள் விவரம் பார்த்ததும்..நான் முதலில் போட்டி அறிவிக்கப் பட்டிருந்த பதிவைப் பார்த்தேன்..காரணம்..ஒருவேளை..இவர்களெல்லாம் கலந்துக் கொள்ளக் கூடாது..என பல பெயர்களை பரிசல் பட்டியல் இட்டிருந்தாரோ என்று..ஆனால்..அப்படியில்லை..
பின் ஏன் இவர்கள் கலந்துக் கொள்ளவில்லை..
ஒருவேளை பரிசுத் தொகை 1500 என்றிருந்தால் கலந்துக் கொண்டிருப்பார்களோ!!
அல்லது..பரிசல் நமது நண்பர் (அப்படியானால் முன்னர் போட்டி நடத்தியவர்கள் நண்பர்கள் இல்லையா? எனக் கேள்வி வேண்டாம்)..நாம் எழுதி..நம் கதை பரிசுக்குரியதாகி விட்டால்..பரிசல்-ஆதி க்கு பெயர் கெட்டுவிடும் என எண்ணியிருப்பார்களோ..
அப்படியிருக்க வாய்ப்பில்லை..பின்..
பரிசு சுஜாதா நாவல்களாம்..அது எதற்கு..அதுதான் நம்மிடம் உள்ளதே..என எண்ணியிருக்கக் கூடும்..
ஆகக் கூடி காரணம் எதுவானாலும்..பரிசு எதுவாயிருந்தாலும்..
பரிசுக்காக எழுதாது..ஒரு ஆரோக்கியமான போட்டி..மா பெரும் வெற்றி பெற..அதில் கலந்துக் கொண்டு... வெல்பவர்களுக்கும் உற்சாகம் ஏற்பட...இதில் கலந்துக் கொள்ளாத அந்த பிரபலங்களும் கலந்துக் கொண்டிருக்க வேண்டும்..
அப்படியில்லாதது..'இவன்(ர்) என்ன போட்டி நடத்துவது..நான் என்ன கலந்துக் கொள்வது' என்ற எண்ணம் காரணமாயின்..
மனவருத்தமே ஏற்படுகிறது.இதில் பிரமிப்பு எங்கே?
31 comments:
||அப்படியில்லாதது..'இவன்(ர்) என்ன போட்டி நடத்துவது..நான் என்ன கலந்துக் கொள்வது' என்ற எண்ணம் காரணமாயின்..||
சார்... சம்மந்தப்பட்டவங்க எனக்கு அவ்ளோவா பரிச்சயமில்ல...
ஆனா... இப்டி யாராவது நினைச்சிருப்பாங்களான்னா... அது ரொம்ப சொற்பமாதான் இருக்கனும்...
மத்தபடி... கவிதைப்போட்டி... எல்லாத்திலயும் ஆர்வமா கலந்துக்கிட்டவங்க... நொந்து நூடில்ஸ் ஆனதால... அனுபவம் கசப்பாகி... போதும்டா சாமீ... ஆள விடுங்கன்னு... எஸ் ஆவறவங்க ஜாஸ்தியா இருக்கலாம்...
எனக்கெல்லாம் போட்டிங்கிற ப்ரக்ஞையே இல்லாம போச்சு... மத்தபடி முன்னாடி நடந்த போட்டில எல்லாம் நிறைய வெளிநாட்டில இருக்கிறவங்க கலந்துக்கிட்டாங்க...அவங்க எல்லாம்... அட ஆயிரம் ரூவா கிடைக்குதுப்பான்னு கலந்துக்கல... ஒரு பரஸ்பர மரியாத இருந்திச்சு...
அதுதான் எல்லாம் காத்தில போச்சே...
யாரச் சொல்லி என்ன...
ஆனா உங்க ஆதங்கம் புரியுதுங்க... நல்ல பதிவுங்க...
ஆட்டத்திலே கலந்துகிறதுதான் முக்கியம்
1500 USD?
//நசரேயன் said...
ஆட்டத்திலே கலந்துகிறதுதான் முக்கியம்//
தோடா. இவ்ளோ நாள் எங்க போனீரு. இடுகையும் காணோம். கவுஜயும் காணோம். ம்க்கும் 1500 யு.எஸ். தம்பிடி:))
சார்! இப்புடி வேற ஒரு வில்லங்கமிருக்கோ.
/சிறுகதைகளை திறம்பட எழுதும் பல (பிரபலம்!) பதிவர்கள் கலந்துக் கொள்ளவில்லை./
அப்பாடா. நானில்ல நானில்ல:)
Jokes apart what you said is right.
டிவிஆர் சார்.. நல்லாருக்கீங்களா.. பேசி ரொம்ப நாளாச்சி.. செல் நம்பர் மாத்திட்டீங்களோ.. செல்லுக்கு டிரை பண்ணினேன்.. கிடைக்கவில்லை. நம்பரை மெயிலுக்கு அனுப்பி வைங்க.. நன்றி.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரியா
//நசரேயன் said...
ஆட்டத்திலே கலந்துகிறதுதான் முக்கியம்//
நானும் அதைத்தான் சொல்றேன்..
// நசரேயன் said...
1500 USD?//
நீங்க போட்டி நடத்தினா 1500 யு.எஸ்., டாலர் என்ன..15000மே கொடுக்கலாம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Bala
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
டிவிஆர் சார்.. நல்லாருக்கீங்களா.. பேசி ரொம்ப நாளாச்சி.. செல் நம்பர் மாத்திட்டீங்களோ.. செல்லுக்கு டிரை பண்ணினேன்.. கிடைக்கவில்லை. நம்பரை மெயிலுக்கு அனுப்பி வைங்க.. நன்றி.//
விவரமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்
எனக்கும் கூட கொஞ்சம் கவலையாக தான் இருக்கிறது. ரொம்ப பிரபலமான பதிவர்கள் சிலர் கலந்துகொள்ளாமல் இருப்பது.
எனக்கு கூட கவலையா இருக்கு சார், நான் ஏன் கலந்துக்கலைனு? வேலைப்பளுல அப்புறம் எழுதலாம் அப்புறம் எழுதலாம்னு நினைச்சு நினைச்சு கடைசி நாள் வந்துடுச்சு. அதனால எழுத முடியாம போச்சு.
என்றாலும் கூட இத்தனை பேர் கலந்து கொண்டதே வெற்றிதான்!
பிரமிப்பாய் இருக்கிறது..75+ கதைகள் வந்துள்ளன (மொத்தம் 83 கதைகள்)' என்றுள்ளார்..ஆனால்..
அட எனக்கும் கூட பிரம்மிப்பாகத்தான் உள்ளது.....வாழ்த்துக்கள் சார்.
கதைப் போட்டி மீது நீங்கள் கொண்ட ஆர்வம் தெரிகிறது. நன்றி ஸார்.
'இவர்களென்ன நடத்துவது?' என்ற எண்ணம் இருக்க பொதுவாக வாய்ப்பில்லை. பலருக்கும் நியாயமான காரணங்கள் இருக்கலாம். எங்களுக்கு பர்சனலாக தெரிந்த நண்பர்களாக இருப்பதனாலேயே கலந்துகொள்ளாமல் தவிர்த்தவர்கள் பலருண்டு.
/சிறுகதைகளை திறம்பட எழுதும் பல (பிரபலம்!) பதிவர்கள் கலந்துக் கொள்ளவில்லை./
நல்ல காலம் நான் பிரபலமில்லை (நீங்களும்தான் சார்..:)
சூப்பர் சார்.
சார்
எல்லாரும் எல்லாப் போட்டியிலும் கலந்துக்கனும்னு அவசியமில்லையே. இதற்கு முன் நடந்த சிறுகதைப் போட்டியில் நான் கலந்துக்கொள்ளவில்லை. என்கிட்ட 1500 ரூபாய் காசு இருந்ததால் இல்லை. வாஸ்ட் ஏரியா. எதை எழுதறதுங்கற பிரச்சனை. என்னிடம் சுஜாதா எழுதிய புக்குகள் நிறைய இருக்கின்றன. இந்தப் போட்டியில் நானும் என் பங்கிற்கு கதை எழுதிருக்கேன். காரணம். கருவைக் கொடுத்து கதை எழுதச்சொன்னது ஈசியாகப் பட்டதால். நீங்கள் குறிப்பிடும் நபர்களுக்கு இம்முறையில் கதையெழுதுவது சிரமமாக இருக்கலாம். வேலைப் பளுவாக இருக்கலாம். ஒருவேளை எழுதி பரிசு பெற்றிருந்தால் நண்பர்களுக்குள்/குழு மனப்பான்மை போன்ற பதிவுகள் வருவதை தவிர்ப்பதற்காக இருந்திருக்கலாம். அதுவும் இல்லாமல் புதிய பதிவர்களுக்கு வழிவிட்டு அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம். இப்படி எவ்வளவோ நல்ல காரணமிருக்கும் சார்.
\\பரிசு சுஜாதா நாவல்களாம்..அது எதற்கு..அதுதான் நம்மிடம் உள்ளதே..என எண்ணியிருக்கக் கூடும்..\\
ஆயிரம் புக்ஸ் இருந்தாலும் போட்டியில் பரிசாக வென்றது எனும்போது பெருமையாக இருக்குமே சார்.
\\அப்படியில்லாதது..'இவன்(ர்) என்ன போட்டி நடத்துவது..நான் என்ன கலந்துக் கொள்வது' என்ற எண்ணம் காரணமாயின்..\\
மூத்த பதிவரான தாங்களே இவ்வாறு எழுதுவது:(((
:)
வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி..
ஆயிரம் சமாதானகள் சொல்லப்பட்டாலும் ஆதி சொல்வதை மனம் ஏற்கவில்லை.மேலும் அவர் நண்பர்கள் என்றால் மற்றவர்கள்? அவர் நினைப்பவர்களைத் தவிர்த்து பல சிறுகதை எழுதும் வல்லுநர்கள் கலந்துக் கொள்ளவில்லை.
வித்யா..என் எண்ணங்கள் சரியே..பல விவரங்கள் பொதுவில் எழுத விரும்பவில்லை.மூத்த பதிவர் என்பதாலேயே..கலந்துக் கொள்ளாதவர்கள் மீது உரிமையுடன் கோபம்
ஐயா..
வாட்டு ஈசு திஸ்ஸூ?
இதுல என்ன சங்கடம்லாம்? நிஜமாவே கதைக்கு வரிகளெல்லாம் குடுத்து எழுதச் சொன்னது அவங்க சுதந்திரத்துல தலையிடற விஷயம் இல்லையா? அதைக் கூட தப்பா நினைக்காம இத்தனை பேர் கலந்து கிட்டது நிஜமாவே பிரமிப்பான விஷயம்தாங்க ஐயா!
பிரபலம்ன்னு இந்த உலகில யாருமே இல்லை! சுஜாதா சொன்ன மாதிரி எல்லாமே 15 நிமிட புகழ்தானே!
அதை விட ஒண்ணு கவனிச்சீங்களா? இதுவரைக்கும் எழுதாத சில பேர் எழுதி இருக்காங்களே.. அதை விட வேற என்ன வேணும்?
உங்க அன்புக்கு நன்றி.. ஆனா இதுக்கும் அதிகமா எதிர்பார்க்கற அளவு வொர்த் இல்லைங்க நானு!
:-)))
எழுதுற போட்டி அப்படின்னு ஒன்னு வைச்சா அதுல நிச்சயம் கலந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன். சர்வேசன் அவர்கள் வைத்த நச்ன்னு ஒரு கதை என வைத்த போட்டியில் என்னால் எழுத இயலாமல் போனது.
அதுபோல் சில காரணங்கள் பலருக்கு இருக்கலாம். என்னை பொருத்தவரை இத்தனை பேர் எழுதியதே பிரமிப்புதான் அதிலும் சளைக்காமல் கதைகள் எழுதி குவித்திருப்பவர்களும் உண்டு, குறிப்பாக கோபி.
அடுத்த முறை நீங்கள் ஒரு போட்டி நடத்துங்கள் ஐயா. :)
இதில் என்ன பிரபல பதிவர், பழைய பதிவர் என்ற பாகுபாடு.
இன்று காலை ஐ டி ஆரம்பித்து எழுதும் ஒரு நபர் சிறப்பாக எழுதினால் அவரு௦ பாராட்டப் பட வேண்டியவர், பரிசு பெற அணைத்து தகுதியும் உள்ளவர்.
தாலுகா அலுவலகம் போல அவர் பழைய பதிவர், இவர் புதிய பதிவர் என்ற சிந்தனையை அடியோடு தவிர்ப்போம்.
என்னைப் போன்ற மூத்த பதிவர்கள் (5 வருஷமா "எழுதறேன்"), ஹிஹி, (பிரபலம் இல்லை, அதுனால என்ன?) கலந்துக்காததற்குக் காரணம் நேரம் இல்லைன்றது தான். போட்டி முடிந்தப்புறம் கதை எழுதினேன்: http://kekkepikkuni.blogspot.com/2010/03/blog-post.html
இன்னுமொன்று, கதைக்களன் குறிப்பிட்ட எல்லைகளுக்குட்பட்டது என்பதும் போட்டியில் நிறைய பேர் கலந்துக்காததற்குக் காரணம்.
//அதை விட ஒண்ணு கவனிச்சீங்களா? இதுவரைக்கும் எழுதாத சில பேர் எழுதி இருக்காங்களே.. அதை விட வேற என்ன வேணும்?// இதைக் கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்
// V.Radhakrishnan said...
எழுதுற போட்டி அப்படின்னு ஒன்னு வைச்சா அதுல நிச்சயம் கலந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன். சர்வேசன் அவர்கள் வைத்த நச்ன்னு ஒரு கதை என வைத்த போட்டியில் என்னால் எழுத இயலாமல் போனது.
அதுபோல் சில காரணங்கள் பலருக்கு இருக்கலாம். என்னை பொருத்தவரை இத்தனை பேர் எழுதியதே பிரமிப்புதான் அதிலும் சளைக்காமல் கதைகள் எழுதி குவித்திருப்பவர்களும் உண்டு, குறிப்பாக கோபி.
அடுத்த முறை நீங்கள் ஒரு போட்டி நடத்துங்கள் ஐயா. :)//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..நான் போட்டி நடத்தினால் கண்டிப்பாக நீங்கள் மட்டுமே எழுதுவீர்கள்.அந்த அளவு வொர்த் நான்
//ராம்ஜி_யாஹூ said...
இதில் என்ன பிரபல பதிவர், பழைய பதிவர் என்ற பாகுபாடு.
இன்று காலை ஐ டி ஆரம்பித்து எழுதும் ஒரு நபர் சிறப்பாக எழுதினால் அவரு௦ பாராட்டப் பட வேண்டியவர், பரிசு பெற அணைத்து தகுதியும் உள்ளவர்.//
தாலுகா அலுவலகம் போல அவர் பழைய பதிவர், இவர் புதிய பதிவர் என்ற சிந்தனையை அடியோடு தவிர்ப்போம்.///
ராம்ஜி ..தவறாக என்னைப் புரிந்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.பல புதியவர்கள் போட்டியில் கலந்துக் கொண்டது மகிழ்ச்சி.ஆனால் நான் சொல்லும் பலரும் கலந்துக் கொண்டிருந்தால்..மிகவும் சிறப்பாயிருக்கும் என்ற ஆதங்கம் தான்.
வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி கெக்கே பிக்குணி
//ஆதிமூலகிருஷ்ணன் said...
கதைப் போட்டி மீது நீங்கள் கொண்ட ஆர்வம் தெரிகிறது. நன்றி ஸார்.
'இவர்களென்ன நடத்துவது?' என்ற எண்ணம் இருக்க பொதுவாக வாய்ப்பில்லை. பலருக்கும் நியாயமான காரணங்கள் இருக்கலாம். எங்களுக்கு பர்சனலாக தெரிந்த நண்பர்களாக இருப்பதனாலேயே கலந்துகொள்ளாமல் தவிர்த்தவர்கள் பலருண்டு.//
//பரிசல்காரன் said...
ஐயா..
வாட்டு ஈசு திஸ்ஸூ?
இதுல என்ன சங்கடம்லாம்? நிஜமாவே கதைக்கு வரிகளெல்லாம் குடுத்து எழுதச் சொன்னது அவங்க சுதந்திரத்துல தலையிடற விஷயம் இல்லையா? அதைக் கூட தப்பா நினைக்காம இத்தனை பேர் கலந்து கிட்டது நிஜமாவே பிரமிப்பான விஷயம்தாங்க ஐயா!
பிரபலம்ன்னு இந்த உலகில யாருமே இல்லை! சுஜாதா சொன்ன மாதிரி எல்லாமே 15 நிமிட புகழ்தானே!
அதை விட ஒண்ணு கவனிச்சீங்களா? இதுவரைக்கும் எழுதாத சில பேர் எழுதி இருக்காங்களே.. அதை விட வேற என்ன வேணும்?
உங்க அன்புக்கு நன்றி.. ஆனா இதுக்கும் அதிகமா எதிர்பார்க்கற அளவு வொர்த் இல்லைங்க நானு! //
என் ஆதங்கத்தைப் புரிந்துக் கொண்டு அருமையாய் யார் மனமும் நோகாது பின்னூட்டமிட்ட ஆதி, பரிசல் உங்கள் இருவருக்கும் நன்றி
Post a Comment