இந்த கேள்விக்கான பதில் இரண்டாய் இருக்கும்..
நம்பினவருக்கு நாராயணன்..நம்பாதவருக்கு.....
இறைவனையே நினைக்காத ஆத்திகவாதிகளும் உண்டு...இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கும் பகுத்தறிவாளரும் உண்டு.
நமக்கு ஒருவரால்..ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால்..அவரை கடவுள் ரேஞ்சிற்கு உயர்த்துவதுண்டு.
நடிகர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்..ரசிகர்கள் தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வம் என்பார்கள்.
***** **** **** *****
அமிதாப் பச்சன்,ஷாருக்கான்,சல்மான்கான் படங்களுக்கு எதிராக..மாறி மாறி போர்க்கொடி தூக்குபவர்கள்..மகாராஷ்டிரத்தில் சிவசேனாவும்..ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நல நிர்மாண் சேனா அமைப்பினரும்.
**** ***** ***** ******
எந்திரன் ஹிந்தி பதிப்பை பாலிவுட்டினருக்குப் போட்டுக்காட்ட ரஜினிகாந்த் மும்பை சென்றார்.அங்கு பால் தாக்கரே வீட்டுக்குச் சென்று, அவரை சந்தித்து ஆசி பெற்றார்.
பின் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்.."தாக்கரே தனக்கு கடவுள் போன்றவர் "என்று கூறினார்.மேலும் கூறுகையில் 'என் பெற்றோர்கள் மராட்டியர்கள்.எனக்கும் மராட்டி படத்தில் நடிக்க ஆசை' என்றுள்ளார்.
**** ****** ***** *****
மனிதனுக்கு மனிதன்..அவ்வப்போது கடவுள்களும் மாறுபடுகின்றனர்..
**** ***** ***** *****
இப்போது சொல்லுங்கள் இறைவன் இருக்கின்றானா..
இருந்தால் நன்றாயிருக்கும்.
16 comments:
ஊழல் (லஞ்சம்) ஆரம்பிக்கும் இடமே இறைவன் தான். எல்லாமே டீல் தான். நான் இதைத்தருகிறேன் எனக்கு இதைக் கொடு.
இறைவனும் வணக்கமும் எல்லமே சுயநலத்திறகாகத்தானே.
கட்சி மாறினால் என்ன?, சமயம் மாறினால் என்ன? எது செய்தாலும் தனக்காக என எண்ணுபவர்கள் அதைத்தான் செய்வார்கள்.
தினசரி ஒருவனை கடவுளாக மாற்றி காரியம் சாதிக்கும் சுயநலபிசாசுகளுக்கு பணமே குறிக்கோள். அரவரசன்
கட்சி மாறினால் என்ன?, சமயம் மாறினால் என்ன? எது செய்தாலும் தனக்காக என எண்ணுபவர்கள் அதைத்தான் செய்வார்கள்.
ம்ம் சந்தர்ப்பத்தைப் பொறுத்தது..டி வி ஆர்:))
வருகைக்கு நன்றி thamizhan
வருகைக்கு நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்
வருகைக்கு நன்றி naga
வருகைக்கு நன்றி ஜோதிஜி
வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்
இருந்தால் நன்றாயிருக்கும்..
யார் கடவுள்ன்னு தெரியணும்.அப்புறம்தான் இருக்கிறாரான்னு தேடலாம் !
வருகைக்கு நன்றி செந்தில்
//ஹேமா said...
யார் கடவுள்ன்னு தெரியணும்.அப்புறம்தான் இருக்கிறாரான்னு தேடலாம் //
:)))
மொத்தத்தில் பணம்தான் கடவுள்
மொத்தத்தில் பணம்தான் கடவுள்
Post a Comment