ஆவதும் பெண்ணாலே..அழிவதும் பெண்ணாலே என்பார்கள்.
ஆம்..பெண் வலிமை வாய்ந்தவள்.அவளின்றி இல்லறம் நல்லறம் ஆகாது.அவளின்றி இல்லறத்தில் ஒன்றும் அசையாது.
அதுவும் நற்பண்புள்ள மனைவி (ஓருவனுக்கு அமையவில்லையாயின்).அமையா இல்வாழ்க்கை..எவ்வளவு சிறப்புள்ளதானாலும்,அதற்கென தனிச்சிறப்புக் கிடையாது..
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் (52)
ஒருவனின் இல்வாழ்க்கை சிறப்புற அமைய வேண்டுமாயின் அந்த வீட்டினுள்ளே இருக்கும் பெண்ணால்தான் இயலும்..
அப்படிப்பட்ட மனவி அமைந்தவன் வாழ்வில் எல்லாம் இருக்கும் (அன்பு, பாசம்,செல்வம்,கல்வி ஆகிய அனைத்தும்)..அப்படி ஒரு மனைவி அமையாதவன் வாழ்க்கையில் எதுவுமே இருக்காது
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை (53)
இத்துடன் நில்லாது மேலும் சொல்கிறார்..
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால்,அதைவிட பெருமைக்குரியது வேறு யாது?(வேறு எதுவுமில்லை)
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின் (54)
மேலே சொன்ன குறள்களில் ..எல்லாம் பெண்மை பாராட்டப்படவில்லையா?
ஒருவனது வாழ்வு சீராக மைய ஒரு பெண்ணால்தான் முடியும்? என்று போற்றப்படவில்லையா?
இனி அடுத்து நான் சொல்ல இருக்கும் குறள்களை நாளைப் பார்ப்போம்.

No comments:
Post a Comment