சமீபத்தில் பெண்எழுத்தாளர்கள் பற்றி நான் எழுதி வந்த தொடரில் ஒருவரைப் பற்றிய செய்திகளை சேகரிக்கும் போது,ஒரு பேட்டியில் அவர் ,வள்ளுவரையும், வள்ளுவத்தையும் பற்றிய தன் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.பெண்களுக்கு எதிரானது வள்ளுவரின் கூற்றுகள் என்று பொருள் படும்படியும் கூறியிருந்தார்.
அது உண்மையா? என சில குறள்கள் மூலம் ஆராயும் தொடரே இது..
இல்வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் துணைநலம் இரு அதிகாரங்களை எடுத்துக் கொள்வோம்.
இரண்டிலிருந்தும் முதற் குறள்கள்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)
இதன் பொருள்..
பெற்றோர்,வாழ்க்கைத் துணை,குழந்தைகள் (இவர்களே மூவர்) என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
இந்தக் குறளில் இல்லறம் நடத்தும் ஆணைப் பற்றி மட்டுமே சொல்லியுள்ளார்..என ஆண்கள் கொந்தளித்து எழுவது சரியா?
அதேபோலத்தான் "வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் முதல் குறள்..
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (51)
இல்லறத்துக்குரியப் பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவன் வாழ்விற்குப் பெருந்துணையாவாள்.
கணவனைப் புரிந்து கொண்டு , வருவாய்க் கேற்ப குடும்பம் நடத்துபவள் காணவனின் வாழ்வில் பெருந்துணை என பெண்ணை பாராட்டித்தானே சொல்லியுள்ளார்.
ஆகா..இந்த இரண்டு முதல் குறள்களில்...இல்லறத்தில் ஈடுபட்டுள்ள ஆண் எப்படியிருக்க வேண்டும் என முதள் குறளில் கூறியவர் அடுத்துச் சொல்லியுள்ள குறளில் கணவனுக்குப் பெருந்துணை எனபெண்ணைப் பாராட்டியுள்ளார்.
மேலும் சில குறள்களுடன் நாளை பார்ப்போம்.
(தொடரும்)

No comments:
Post a Comment