காலை எழுந்ததும், அப்பா வேலைக்குக் கிளம்பியதுமே அம்மாவிடம், "அம்மா..நான் வெளியே கிளம்பறேன்..ஃபிரன்ட் வீட்டுக்குப் போரேன்"ணு சொல்லிவிட்டுக் கிளம்பப் பார்த்தேன்.
அம்மாவோ "இருடா..இட்லி சாப்பிட்டுட்டுப் போ" என்றாள்.
இட்லியா..இன்னிக்கு உன் பையன் மசாலா தோசை சாப்பிடப்போறானாக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டே.."வேணாம்மா பசியில்லைன்னு" சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்.
கடைக்கு வந்து பார்த்தால்..பாபு என்னும் அங்கிள் எனக்காக அங்கே காத்திருந்தார்.
இந்த பாபு அங்கிள் ஏற்கனவே தெரிஞசவர். அவர் போட்ட டிராமாவுல அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கி நான் நடிச்சிருந்தேன்.
அவர் என்னைப் பார்த்ததுமே.."வாடா..வா...உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்" என்று சொல்லியபடியே ஒரு கட்டு நோட்டீசை கையில் திணித்தார்.
அதைத் தூக்கிக் கொண்டு நடந்த நான்"அங்கிள்..,மசாலாதோசை சாப்பிட்டுக் கிள்மபலாமா?" என்றேன்.
அவரோ"இவ்வளவு சீக்கிரம் எதற்கு.இரண்டு தெரு முடிச்சுட்டுப் போலாம்" என்றார் சிகரெட்டை பத்த வைத்தபடி.காலையில் ஏற்கனவே டிபன் சாப்பிட்டு இருப்பார்..பசிக்கலை..ஆனால் நான் வெறும் வயிறு..ஆனாலும் அதை அவரிடம் நான் சொல்லவில்லை .
நாராயண பிள்ளை என்று அம்பத்தூர் வட்டத்திற்கு காங்கிரஸ் செயலாளர் ஒருவர் இருந்தார்.அவர், அப்பாவிற்கு ரொம்ப வேண்டியவர்.
நானும், பாபு அங்கிளும் நோடீஸ் கொடுக்க நுழைந்தத் தெரிவில்..அவர் தன் கட்சிக்கான வேட்பாளர் ஆதரவு நோட்டீஸ்களைக் கொடுத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்..அவர் என்னை பார்த்துவிட்டு.."டேய் நீ என்ன பண்ற..இந்த சின்ன வயசுல அரசியல் நோட்டீசா.."என்றவர், பாபுவிடம், "என்ன பாபு, படிக்கற வயசு சின்னப் பையனை இழுத்துக்கிட்டு திரியற..இது இவங்கப்பனுக்குத் தெரிஞ்சா..அவ்வளவுதான்" என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, "வீட்டுக்குப் போ..இல்லை உங்கப்பா கிட்ட சொல்லிடுவேன்" என்றார்.
நானும் பயந்தபடியே..வீட்டிற்குக் கிளம்பினேன்.
அம்மா சாப்பிட்டு போகச் சொன்ன இட்லியும் போச்சு.."மசாலா தோசை" கிடைக்கும் என்ற எண்ணத்தையும் நாராயண பிள்ளை கெடுத்துட்டார்.
ஆனால் அடுத்த நாள் பாபு என்ன செய்தார் தெரியுமா?

No comments:
Post a Comment