Thursday, July 23, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (24-7-09)

1.தமிழ்மொழி பற்றி பேசும் தகுதி கலைஞர் ஒருவருக்குத்தான் உள்ளது.வேறு யாருக்கும் அந்த தகுதி கிடையாது.அவர் தொடாத துறைகளே இல்லை.கதை,கட்டுரை,கவிதை,துணுக்குகள்,நாடகம்,நகைச்சுவை,உரையாடல் என அனைத்து துறைகளிலும் முதல்வர் தடம் பதித்துள்ளார் என்று அன்பழகன் சமீபத்தில் சட்டசபையில் பேசும்போது கூறினார்.

2.ஆறிப்போன காஃபி,தேநீர் ஆகியவற்றை மீண்டும் சுடவைத்து குடிப்பது.சூடான நீரை பாலிதீன் கவர்களில் ஊற்றி குலுக்கி பாலுடன் கலப்பது.உலோகப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி சூடாக்குவது..ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் வாழ்வது போன்றவை புற்றுநோயை உண்டாக்கக் கூடுமாம்.

3.ஒரு மனைவி போதும் என்பவன் ராமனை வணங்குவான்
இரு மனைவி போதும் என்பவன் முருகனை வணங்குவான்
இரண்டுக்கு மேல் வேண்டும் என்பவன் கண்ணனை வணங்குவான்
நான் கண்ணனின் தாசன்..என ஒரு முறை கண்ணதாசன் கூறினார்.

4.அடிமை இந்தியாவில் பிறந்தார்
சுதந்திர இந்தியாவில் கோலோச்சினார்
மீண்டும் அடிமை இந்தியாவில் மறைந்தார்
அன்னையின் விலங்கொடித்து அன்னியனை விரட்டினார்
இன்னொரு அன்னையால் பாரத அன்னை விலங்கிடப்பட்ட காலை
மனம் உடைந்து மரணமடைந்தார்.
தலைமாட்டில் உட்கார்ந்து அழ மனைவியோ..
கால்மாட்டில் உட்கார்ந்து அழ மக்களோ இல்லாதவர் அவர்...ஆனால்
அவர் மரணத்தில் நாடே அழுதது..வானமும் அழுதது..
(காமராஜ் பிறந்த நாள் அன்று தினமணியில் வந்த தலையங்கத்தில் ஒரு பகுதி)

5.ஞாபகங்கள் என்பது மூளைக்குள் செயல்படும் சின்னச்சின்ன ரசாயன மின்சுழற்சிகள்

6.ஒரு ஜோக்

பொய் பேசறவங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?
ஓ..கல்யாணம் ஆகாமலேயே மாமியார் வீட்ல இருக்கறதாயிடும்..

7 comments:

bandhu said...

actually the first joke was good!

ஆ.ஞானசேகரன் said...

எல்லாமெ நல்லாயிருக்கு

பொன்னர் said...

முதலாவது ஜோக் ரொம்ப பிடிச்சிருக்கு

goma said...

மனம் உடைந்து மரணமடைந்தார்.
தலைமாட்டில் உட்கார்ந்து அழ மனைவியோ..
கால்மாட்டில் உட்கார்ந்து அழ மக்களோ இல்லாதவர் அவர்...ஆனால்
அவர் மரணத்தில் நாடே அழுதது..வானமும் அழுதது..
(காமராஜ் பிறந்த நாள் அன்று தினமணியில் வந்த தலையங்கத்தில் ஒரு பகுதி)

நாட்டுக்காக வாழ்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தனக்காக வாழும் தலைவர்கள் மனதில் பதிய வேண்டிய விஷயம் இது

மங்களூர் சிவா said...

எனக்கும் அன்பழகன் சொன்ன அந்த மொத ஜோக்தான் பிடிச்சிருக்கு!
:)))

Unknown said...

முதலாவதுக்கும், இரண்டாவதுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கா? (ஹி...ஹி...)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Ravi
ஆ.ஞானசேகரன்
நாவேந்தன்
goma
சிவா
karpaka