Tuesday, July 27, 2010

திரைப்பட இயக்குநர்கள் -1 S.S.வாசன்


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரைப் பற்றி ஒரு தொடர் இது.தமிழ்த் திரைப்படங்களை இயக்கி சரித்திரம் படைத்த சில இயக்குநர்களின் விவரங்கள் இதில் இடம்பெற உள்ளன.

சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன் மார்ச் 10 ஆம் நாள் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார்.இவரே பின்னாளில் பெரும் புகழ் பெற்ற ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் ஆவார்.

1928ல் ஆனந்தவிகடனை வாங்கி நடத்திவந்த இவர்..நாவல்கள், சிறுகதைகள் எழுதும் எழுத்தாளராய் திகழ்ந்தார்.இவரது நாவலான 'சதி லீலாவதி' யை மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.1941ல் அந்த நிறுவனம் தீக்கிறையானது.அதனால் நஷ்டப்பட்ட அந்நிறுவனத்தை வாங்கி மீண்டும் கட்டி அங்கு 'ஜெமினி ஸ்டூடியோ' வை நிறுவினார் வாசன்.பின் முழு நேர வெற்றி படத் தயாரிப்பாளர் ஆனார்.1969ல் இந்திய அரசு 'பத்மபூஷன்' தேசிய விருதை வழங்கி அவரை கவுரவித்தது.தவிர்த்து தமிழ்த் திரையுலகின் 'சிசில் பி டிமிலி' என மக்களால் போற்றப்பட்டார்.Film federation of india வின் தலைவராய் இருந்தார்.ராஜ்ய சபா எம்.பி, ஆகவும் இருந்தார்.ஜெமினி நிறுவனம் மூலம் அவரது காலத்தில் 30 படங்களுக்கு மேல் வந்துள்ளது.அவற்றைப் பற்றி சிறு குறிப்பு.

1948ல் சந்திரலேகா..ஹிந்தி,தமிழ் என இரு மொழிகளிலும் வாசன் இயக்கத்தில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.அந்த காலத்திலேயே இப்படம் 600 பிரிண்ட்கள் போடப்பட்டது.முதல் முறையாக ஒரு
திரைப்படம் நாடு முழுதும் வெற்றி பெற்ற பெருமையை இப்படம் பெற்றது.இந்த படத்தில் டிரம் நடனம் இன்றும் பேசப்படுகிறது.

1951ல் சன்சார், சம்சாரம் ஆகிய படங்களை தயாரித்து இயக்கினார்.இவர் தயாரித்து இயக்கிய மற்ற படங்கள்..

மிஸ்டர் சம்பத் (1952) (ஹிந்தி)

பகுத் தின் ஹுயே (1954)

இன்ஸானியத் (1955) ஹிந்தி மற்றும் தமிழ்

வஞ்சிக் கோட்டை வாலிபன் (1958) ஜெமினி,பத்மினி,வைஜெயந்தி மாலா,வீரப்பா ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றி படம்.நடனப் போட்டி இன்றும் மறக்க முடியாமல்'சபாஷ் சரியான போட்டி' என்று சொல்ல வைக்கிறது.

ராஜ் திலக் (1958) வஞ்சிக் கோட்டை..ஹிந்தியில்

பைகம் (1959)ல் ஹிந்தி.. 1960ல் சிவாஜி, வைஜெயந்தி நடித்து வந்த 'இரும்புத்திரை"

கரானா (1961)

தீன் பஹுருன்னியான் (ஹிந்தி)

ஸ்த்ரஞ் (1969)

தவிர்த்து வாசன் தன் தயாரிப்பில் மற்ற இயக்குநர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்துள்ளார்.

1947ல் மிஸ் .மாலினி இப்படத்தில் தான் ஜெமினி கணேசன் அறிமுகம்.

1953ல்ஔவையார் படத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடிக்க வேண்டும் என நினைத்த வாசன்..அவரை அணுக..கணவரை இழந்தது முதல் திரையலகை விட்டு விலகி இருந்த சுந்தராம்பாள்..நடிப்பை தட்டிக் கழிக்க எண்ணி அதிக சம்பளமாக ஒரு லட்சம் கேட்க உடனே சம்மத்தித்தார் வாசன்.இந்த இரு படங்களையும் 'கொத்தமங்கலம்' சுப்பு இயக்கினார்..தவிர்த்து இரும்புத்திரையின் ஹிந்தி வடிவை ராமானந்த் சாகர் இயக்கினார்.


1968ல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடிக்க எம்.ஜி.ஆரின்.125 ஆவது படமான ஒளிவிளக்கு படத்தை சாணக்கியா வை இயக்கச் செய்தார் வாசன்.

வாசன் தயாரிப்பில் வந்த மற்ற வெற்றிபடங்கள், மங்கம்மா சபதம், கண்ணம்மா என் காதலி,வள்ளியின் செல்வன்,மூன்று பிள்ளைகள் அபூர்வ சகோதரர்கள் ஆகியவை.

வாசன் 1969 ஆம் ஆண்டு அமரரானார்.

12 comments:

சிநேகிதன் அக்பர் said...

பல அரிய தகவல்கள். நன்றி சார்.

vasu balaji said...

சூப்பர்ப் சார்:). மிக்க நன்றி.

IKrishs said...

//1947ல் மிஸ் .மாலினி இப்படத்தில் தான் ஜெமினி கணேசன் அறிமுகம்.1953ல் கே.பி.சுந்தராம்பாள் நடிக்க வேண்டும் என நினைத்த வாசன்..அவரை அணுக..கணவரை இழந்தது முதல் திரையலகை விட்டு விலகி இருந்த சுந்தராம்பாள்..நடிப்பை தட்டிக் கழிக்க எண்ணி அதிக சம்பளமாக ஒரு லட்சம் கேட்க உடனே சம்மத்தித்தார் வாசன்.இந்த இரு படங்களையும் 'கொத்தமங்கலம்' சுப்பு இயக்கினார்..தவிர்த்து இரும்புத்திரையின் ஹிந்தி வடிவை ராமானந்த் சாகர் இயக்கினார்//



Indha Para konjam kulappama irukka madhiri irukku..
Matrapadi ,
arumaiyana kalathil meendum ungal thodarai padippathil magilchi!

goma said...

ஒளவையார் படத்தின் இயக்குனர் திரு எஸ் எஸ்.வாசன்தானே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
பல அரிய தகவல்கள். நன்றி சார்.//

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வானம்பாடிகள் said...
சூப்பர்ப் சார்:). மிக்க நன்றி.//


நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கிருஷ்குமார் said...
Indha Para konjam kulappama irukka madhiri irukku..
Matrapadi ,
arumaiyana kalathil meendum ungal thodarai padippathil magilchi!//

சரி செய்து விட்டேன்

வருகைக்கு நன்றி கிருஷ்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// goma said...
ஒளவையார் படத்தின் இயக்குனர் திரு எஸ் எஸ்.வாசன்தானே//


ஔவையார் படத் தயாரிப்பாளர் வாசன்.மற்றபடி திரைக்கதை,பாடல்,இயக்கம் கொத்தமங்கலம் சுப்பு ஆவார்.
வருகைக்கு நன்றி goma

பிரபாகர் said...

தகவல்களுக்கு நன்றி அய்யா!

பிரபாகர்...

Thamizhan said...

திரு வாசன் தந்தை பெரியாரிடம் விற்பனையாளராக வேலை செய்தவர்.ஆனந்த விகடன் தொடங்க இருப்பதாகச் சொல்லவும் பெரியாரே பண உதவியும் செய்து வாழ்த்தியுள்ளார்.கடைசிவரை பெரியார் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்."ஜெமினி" அவருக்கு வெற்றிகளைத் தேடித்த்ந்த பந்தயக் குதிரையின் பெயர் !

butterfly Surya said...

அருமை. தொடருங்கள். காத்திருக்கிறோம்...

மங்குனி அமைச்சர் said...

வஞ்சிக் கோட்டை வாலிபன்///


இந்த ஒரு படம்தான் பாத்திருக்கேன் சார்