Wednesday, June 30, 2010

விஜய்....ஆச்சரியம்..ஆனால் உண்மை

சமீப காலங்களாக விஜய் படங்கள் தோல்வியைத் தழுவி வருகின்றன..

..எல்லோரிடம்..'நீங்க சொல்றது சரிங்ணா..' என்று அன்புடன் பேசும் அவரையும் தோல்வி..ஒரு பேட்டியின் போது..'சைலன்ஸ்..பேசிக்கிட்டு இருக்கேன்..இல்ல..' என கோபப்பட வைத்தது..(இந்த இடத்தில் இதே பாணியைப் பின்பற்றிய நர்சிம் உங்க ஞாபகத்திற்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)

வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா..என..ஹேட்ரிக் தோல்வியையும் மிஞ்சி தோல்வியத் தந்த இவரா...ஒரு காலத்தில்..மதுர,திருப்பாச்சி,சிவகாசி,கில்லி என பல வெற்றி படங்களைத் தந்தார் ..என திரை உலகினரை மட்டுமன்றி அனைவரையும் வியக்க வைத்தது..

அரசியல் ஆசை, தந்தையின் குறுக்கீடு, கதை அமைப்பு என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்...

அவரது படங்கள் ஒரே மாதிரி கதை அமைப்புக் கொண்டவையாய் இருந்ததே உண்மைக் காரணம்..தவிர்த்து..எம்.ஜி.ஆர்., ரஜினி ஆகியவர்களைப் பின்பற்றி சண்டைக் காட்சிகளும்..பஞ்ச் வசனங்களும் வேறு..

ரஜினியின் வெற்றி..அவர் யார் பாணியையும் பின்பற்றாததால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்று தந்தது..

விஜய்க்கு ரஜினியைப் போல்..அனைவரும் விசிறிகள்..அவர்கள் விரும்புவதைக் கொடுக்க வேண்டியது அவரது கடமை..

இந்நிலையில் சமீபத்தில் வந்துள்ள செய்தி ஒன்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது...அந்த செய்தி..

விஜய் நடித்து வரும்..'காவல்காரன்' என்ற படம் 'பாடிகார்ட்' என்ற பெயரில்..தான் தயாரித்து சித்திக் இயக்க்த்தில் வந்து வெற்றிகரமாக ஓடிய படம் என்றும்..தனது ஒப்புதல் இல்லாமல் சித்திக் அதை தமிழில் தயாரித்து வருவதாகவும்..அதற்கு அவருக்கு உரிமை இல்லையென்றும் ஜானிதாமஸ் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.சென்னை உயர் நீதி மன்றமும்..இதை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது..

இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..

பிற மொழியில் நல்ல கதையம்சத்துடன் வெற்றிகரமாக ஓடிய படம்...விஜய்க்கு இது மற்றொரு கில்லியாக அமையும்..

இதற்குப் பிறகு ..யாரும் விஜய் படங்கள் ஒரே மாதிரியானவை என யாரும் சொல்லமாட்டார்கள் என நம்புவோம்.

18 comments:

சுரேகா.. said...

அப்போதும் சொல்வோமுல்ல..விஜய் எப்பவும் ஒரே மாதிரி பிறமொழியில் வெற்றியடைந்த படங்களையே எடுத்து நடிக்கிறார் என்று!

Paleo God said...

அருமையான ஒரு படம் கொடுத்தா பாக்க மாட்டோம்னா சொல்றோம் சார்! :)

Unknown said...

சங்கர் சொல்றதுதான் ...

goma said...

நடிக்ற வரைக்கும் நடிக்கட்டும்,நாமும் ரசிக்கிற வரைக்கும் ரசிப்போம்....தியாகராஜபாகவதர்ன்னா யாருன்னே தெரியாம போகும் போது இந்த விஜய் விஷால் ரவி எல்லாம் ஜு ஜுபிகள்

vasu balaji said...

/(இந்த இடத்தில் இதே பாணியைப் பின்பற்றிய நர்சிம் உங்க ஞாபகத்திற்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)/

:))).வாய்விட்டு சிரிங்க மிக்ஸ்.ஆமாம் சார், போலீஸ் வேடத்துல மிஸ்ஸான தொப்பை விளம்பரப் படத்துல எப்புடி சார் வந்தது:))))

தமிழ் உதயம் said...

விஜய் படங்கள் வெற்றி பெற்றதே மிக பெரிய ஆச்சர்யம். நீங்கள் தோல்வி குறித்து ஆச்சர்யப் படுகிறிர்கள்.

Vidhya Chandrasekaran said...

வரட்டும். பார்ப்போம்.

Karthick Chidambaram said...

சங்கர், கே.ஆர்.பி.செந்தில் சொல்றதுதான் ...

முரளிகண்ணன் said...

வெற்றி பெறட்டும்

M.G.ரவிக்குமார்™..., said...

இந்தப் பதிவுக்கு நகைச்சுவைன்னு லேபிள் கொடுக்காம விட்டுட்டீங்களே!

சிநேகிதன் அக்பர் said...

எல்லாரும் அதைத்தான் எதிர்பார்க்குறாங்க. (கும்முறதுக்கு):)

ஹேமா said...

எங்களுக்குத்தான் பிடிக்கவில்லை அவரை.எப்படியோ குழந்தைகளை மட்டும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.கில்லிதான் !

கார்க்கிபவா said...

/எப்படியோ குழந்தைகளை மட்டும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.கில்லிதான்/

நானும் குழந்தைதான்..குழந்தைதான்

பழூர் கார்த்தி said...

வில்லு - தோல்விப் படமா என்ன? சுமாரான வெற்றிப் படமென்றே நினைக்கிறேன்.. சென்னை வடபழனி கமலாவில் 50 நாட்கள் ஓடியதாக நினைவு.. நான் கூட ரொம்ப தாமதமாகத்தான் அங்கே பார்த்தேன், வடிவேலு காமெடியும், நயன்தாரா கவர்ச்சியும் படத்திற்கு உதவின என நினைக்கிறேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தவர்கள்..கருத்தினை தெரிவித்தவர்கள் அனைவருக்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
:))).வாய்விட்டு சிரிங்க மிக்ஸ்.ஆமாம் சார், போலீஸ்

வேடத்துல மிஸ்ஸான தொப்பை விளம்பரப் படத்துல எப்புடி சார் வந்தது:))))///
வேஷ்டியைக் கட்டிக்கொண்டு..அவிழாமல் இருக்க பெல்டையும் இறுக்கக் கட்டி..டைட்டான ஜிப்பாவும் போட்டா..தொப்பை வெளியே தெரியாம எங்கே போகும் :))))

tamil blog said...

விசய் அண்ணே. நீங்க திருந்தவே மாட்டீங்களா

கவி அழகன் said...

வெற்றி