Sunday, July 11, 2010

நடிகை ரோகிணியும்..ஐஸ்வர்யா (ராயும்) பச்சனும்..




குரு,ராவணன் ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராயைப் பார்த்து..அவர் நடிப்பையும் பாராட்டியவர்கள் அதிகம்...

அவர்..ஏற்ற இறக்கத்துடன் பேசுவதும்...சோகக் காட்சியில் சோகத்துடன் பேசுவதும்..ஆத்திரக் காட்சியில் ஆத்திரப்படுவதும்...பயந்து வீல் என அலறுவதையும் ..அடடா..ஐஸ்வர்யா என்னமாய் நடித்திருக்கிறார் என வியந்தவர் பலர்...

ஆனால்..அவர் பேசும் வசனங்கள்..அவர் படத்தில் வாயைத் திறந்தால்..அது சோகமோ,ஆச்சரியமோ,மகிழ்ச்சியோ வரும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் நடிகை ரோகிணி ஆவார்.

ஆம்..ஐஸ்வர்யாவிற்கு டப்பிங் கொடுத்தவர் ரோகிணி..ராவணன் படத்தில்..ஐஸ்வர்யா அலறும் காட்சிகளில் 25முறைகளுக்கு மேல் ரோகிணி கத்தியிருக்காராம் டப்பிங்கில்.இதைத் தவிர்த்து ரோகிணி
ஜோதிகாவிற்கு..'வேட்டையாடு விளையாடு' படத்திலும்,இந்தியன் படத்தில் மனிஷா கொய்ராலாவிற்கும் குரல் கொடுத்துள்ளார்.

சிம்ரன் நடித்த படங்களில் குறிப்பாக வாலி படத்தில்...கிளைமாக்சில்..அவருக்கு டப்பிங் கொடுத்த கலைஞரால்தான் அவரது நடிப்பு பிரகாசித்தது.குரு படத்தில் அபிஷேக் பச்சனுக்கு சூர்யா குரல் கொடுத்துள்ளார்..அதே போல் தாரே ஜமீன் பர் படத்தில் தமிழ் டப்பிங் அமீர்கானிற்கு சூர்யா.

இவர்களை விடுங்கள்..வெளியுலகிற்குத் தெரியாமல்..பல நாயகியர்க்கு குரல் கொடுத்து..அவர்கள் நடிப்பைப் பாராட்டவைத்தவர்கள் இக் கலைஞர்கள்.

இப்படி..பல நடிக,நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்து, அந்த நடிகர்களின் நடிப்பை உயர்த்திக் காட்டியவர்கள் இவர்கள்..ஆனால் தகுந்த முறையில் இவர்கள் சிறப்பிக்கப் படுகிறார்களா என்றால்...இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது..

தயாரிப்பாளர்களே..சற்று சிந்தித்துப் பாருங்கள்...சம்பந்தப்பட்ட நடிகர்களே குரல் கொடுத்திருந்தால்..அதற்கான கால்ஷீட்டிற்கு எவ்வளவு சம்பளம் கேட்டிருப்பார்கள்..அதில் கால் பகுதியேனும்..திறமை மிக்க இவர்களுக்குக் கிடைத்திருக்குமா...

இன்னும்..என்னை ஆச்சரியப் பட வைத்த ஒன்று...

இப்போதெல்லாம்..தமிழில் டப் செய்யப்பட்டு..வரும்..ஆங்கிலப் படத்திற்கு என்னமாய்..இவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்..

இன்று கோடம்பாக்கத்தில்..இந்த டப்பிங் ஆர்டிஸ்டுகள் இல்லையெனில்..தமிழ்திரை உலகம் பல கோடியை அதிகமாக சம்பந்தப் பட்ட நடிக, நடிகையருக்கு செலவழிக்க வேண்டியிருக்கும்..தமிழ்த் தெரியாத நடிகைகள் கதாநாயகியாக நடிக்க முடியாது..

டப்பிங் கலைஞர்களுக்கு பாராட்டுகள்..

தமிழ்த் தயாரிப்பாளர்கள்..இவர்களையும் பெருமைப் படுத்த வேண்டும்..

9 comments:

Anonymous said...

உண்மையை உண்மையாக சொன்ன நல்ல பதிவு.

vasu balaji said...

நிச்சயம் செய்யப்பட வேண்டிய விஷயம் சார்.

Vidhya Chandrasekaran said...

சிம்ரனுக்கு சவீதா என்பவரின் குரல் ரொம்ப பொருத்தமாய் போகும். இவரின் பேட்டியை எங்கோ படித்ததாய் ஞாபகம். சரிதா, பானுப்ரியா ஆகியோரும் பிண்ணனி பேசியிருக்கிறார்கள். நல்ல பதிவு.

goma said...

பின்னணிப் பாடகர்கள் சூப்பர் சிங்கர் ...மாதிரி நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்து விட்டார்கள்....பாவம் இந்த டப்பிங் ஆர்டிஸ்ட்கள்தான் படத்தின் வெற்றிக்குக் காரணமான ,தங்கள் பெயர் கூட நிலைக்காமல் நிலை குலைந்து போகிறார்கள்

ராம்ஜி_யாஹூ said...

வித்யா குறிப்பிட்டு உள்ளது போல, சவீதா என்பவர் தான் பெரும்பாலான தமிழ் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசுபவர். வாலி, ஜென்டில்மன், பம்பாய், தசாவதாரம் என பல படங்கள்.

அதே போல நடிகர் மோகனுக்கு சுரேந்தர் என்பவர். நிழல்கள் ரவி, எஸ் பி பாலசுப்ரமணியம் (கமலுக்கு தெலுங்கில்) டப்பிங் பேசுபவர்கள்.

இவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப் படுகிறதே. பலமுறை சவீதா பேட்டியில் இதை கூறி இருக்கிறார்.

டப்பிங் கலைஞர்கள் சங்கம் கூட உள்ளது,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தோர்க்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

ராம்ஜி வருகைக்கு நன்றி..
முதன் நிலை கலைஞர்களுக்கு ஓரளவு நல்ல சம்பளம் கொடுக்கப் படுகிறது..மற்று அனைத்து நிலை கலைஞர்களுக்கு அப்படி வழங்கப் படுவதில்லை.
மேலும் இப்போது டீ.வி. சிரியல்களிலும் இவர்கள் டப்பிங் பேசுகிறார்கள்

ஹேமா said...

சரியாகச்
சொல்லியிருக்கிறீர்கள்.
ரோகினி எனக்குப் பிடித்த
நடிகையும் கூட !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா