Tuesday, July 13, 2010

பதிவுலகில் வானம்பாடிகள் எப்படிப்பட்டவர்..




பாமரனாயிருந்து வானம்பாடிகளாய் மாறிய பாலா 'பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்' என்ற பதிவு ஒன்றை இட்டு இருந்தார்.

உண்மையில் நாம் எப்படிப்பட்டவர் என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும்..நம்மைப் பற்றி நாமே சொல்லிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

ஆகவே ..'கிணற்றுதவளை'யாக இருந்து பின் வானம்பாடியாய் சிறகடித்து பறந்துக் கொண்டிருக்கும் வானம்பாடி பாலாஜி (வாசுதேவன் பாலாஜி) பதிவுலகையும் தாண்டி, எப்படிப்பட்டவர் என நான் அறிந்தவரையில் கூறுகிறேன்.

ரயில்வேயில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாய் பணிபுரிந்து வரும் இவர் மனிதநேயம் மிக்கவர்..யார் உதவி என்று வந்தாலும் தன்னால் முடிந்தால்..அந்த உதவியைச் செய்யத் தயங்காதவர்.

ஒரு நபர் எப்படிப்பட்டவர் என்பதை..அறிந்து கொள்ள அவருடன் சில நிமிடங்கள் பழகினாலே போதும்..அதுபோல நானும் பாலாவை ஒருமுறை தான் சந்தித்துள்ளேன்.பின் ஒரு மின்னஞ்சலும்..ஒரு அலைபேசி பேச்சும்தான்.

அதிலேயே நான் அறிந்து கொண்டது ஏராளம்.

டெம்ப்ளேட் பின்னூட்டம் இடாமல்..அனைத்து பதிவர்கள் பதிவும் படித்து...பின்னூட்டம் இடுபவர்...புது பதிவர்களையும் ஊக்குவிப்பவர். பதிவு பிடித்திருந்தால் பரிந்துரையும் உண்டு.

மொக்கை பதிவுகளுக்கும் தன்னால் மொக்கை பின்னூட்டம் போட முடியும் என நிரூபிப்பவர்.

இவரின் அனைத்து பதிவுகளும் சிறந்தது என்றாலும், இவர் துறை சார்ந்த பதிவுகள், கேரக்டர் என்ற தலைப்பில் வித்தியாசமான நபர்கள் பற்றிய இடுகை இவர் புகழ் பாடும் இடுகைகள்.

உண்மையான..நியாயமாக வாசகர்களின் வாக்குகளைப் பெற்று..வாசகர் பரிந்துரையிலும்...மகுடத்திலும் இடம் பெறும் ஒரு சில பதிவர்களில் இவரும் ஒருவர்.

எந்த எதிர்வினை பதிவானாலும் படித்து..தன் கருத்தைச் சொல்லத் தயங்காதவர்.

சற்றும் அகங்காரம் இல்லாதவர்...ஆனால் அதே வேளையில்..ஒருவரிடம் உடனே நெருங்கி பழகாத கூச்ச சுபாவம் உள்ளவர்.

இவருக்கான குறள்

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

(உறுதியான உள்ளமும் ..அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்

63 comments:

எல் கே said...

100% sari

பிரபாகர் said...

அவரது கேரக்டர் மூலம் சொல்வது போல் அவரைப் பற்றி அழகாய் தகவல்கள் சொல்லி அசத்தியிருக்கிறீர்கள் அய்யா. இன்னும் சொல்லாத விஷயங்கள் இருக்கின்றன என் ஆசானைப் பற்றி. என் வாழ்வில் சந்தித்த உன்னதமான மனிதர்களில் ஒருவர். மாதா, பிதா, குரு(ஆசான்) தெய்வம்...

பிரபாகர்...

Vidhya Chandrasekaran said...

மதிப்பு உயர்கிறது பாலாஜி சார் மேல். உங்கள் நட்பு தொடர வாழ்த்துகள்.

சூர்யா ௧ண்ணன் said...

எங்கள் தலைவரை பற்றிய இடுகைக்கு நன்றி!..

Thenammai Lakshmanan said...

எனக்கும் மிகப் பைடித்த பதிவுலக நண்பர்.. பாலா சார்.. நன்றீ டி வி ஆர் பகிர்வுக்கு..

CS. Mohan Kumar said...

சக பதிவரை மனம் விட்டு பாராட்டும் உங்களை முதலில் பாராட்டனும் சார். இன்னும் சில பதிவர்கள் குறித்தும் இதே போல் எழுதுங்கள். நிறைய எதிர் மறை எழுத்துக்கள் வரும் இந்த நேரத்தில் இத்தகைய உண்மையான பாராட்டு பதிவுகள் தேவையே.

பாலா சார்: உங்களை பற்றி பாராட்டி பல பதிவுகள் வாசித்துள்ளேன். நேரில் ஒரு முறை சந்திக்கணும் சார்!

ஈரோடு கதிர் said...

||"பதிவுலகில் வானம்பாடிகள் எப்படிப்பட்டவர்.."||

ரொம்ப வில்லத்தனமான ஆளுங்க

நான் கவிதை போட்ட எதிர் கவிதைனு போட்டு என்னைவிட அதிக ஓட்டு வாங்கிடறாருங்க...

முதல்ல அதுக்கு ஒரு பஞ்சாயத்து வைக்கனும்

ஈரோடு கதிர் said...

||"பதிவுலகில் வானம்பாடிகள் எப்படிப்பட்டவர்.."||

பதிவுலகம் மூலம் மனதுக்கு கிடைத்த மிக மிக நெருக்கமான மனிதர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

நாங்கள் தினமும் பேசாத நாட்கள் இல்லையென்றே சொல்லலாம்...

அவருடைய நண்பராக, அவருடைய வாசிப்பு பட்டியலில் இருப்பவனாக மிக மிக பெருமைப் படுகிறேன்.

குறைகளே பொங்கி வழியும் இந்நேரத்தில், நெகிழ்ச்சியா இடுகைக்கு ஆயிரம் வணக்கங்கள்..

வாழ்த்துகள் பாலாண்ணா

நன்றி டிவிஆர் சார்

VELU.G said...

எனக்கு சரியான அறிமுகம் இல்லையென்றாலும் வானம்பாடிகள் இடும் விமர்சனங்கள் மிகவும் sharp.

நான் மிகவும் மதிக்கும் எதிர்பார்க்கும்படியான விமர்சனங்கள் இவருடையது.


அவரை பற்றிய பகிர்விற்கு மிக்க நன்றி

Paleo God said...

நீங்களும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்தான் சார் :))

உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள்/நட்புகள் இந்த வலையுலகிற்கு பெரும் பலம்.:))

சிநேகிதன் அக்பர் said...

பாலா சாரின் இடுகைகளை தவறாமல் படித்து வருகிறேன். நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை. அவரின் எழுத்துக்கு ரசிகன் நான்.

அவரின் கேரக்டரை பற்றிய விமர்சனத்தில் உங்களின் கேரக்டரும் தெரிந்து விடுகிறது ஐயா.

உங்களைப்போன்றோரின் வழிகாட்டுதல்கள் நிச்சயம் தேவை.

Unknown said...

நர்சிம் ஒருமுறை வானம்பாடிகள் ஐயா செய்த உதவி பற்றி சொல்லியிருக்கிறார்.. அந்த நேரத்தில் ஒரு போன் செய்தவுடன் உடனே நடவடிக்கை எடுத்து ரயிலில் அடிபட்டு இறந்த தன் நண்பனின் உடலை சீக்கிரம் கிடைக்க வழி செய்து கொடுத்தது ஒரு அளப்பரிய சேவை.. ஏனென்றால் சாதரணமாக அதனை அவ்வளவு சுலபத்தில் செய்யமுடியாது.. அதன்பிறகு டாக்டர் புருனோ மூலம் போஸ்ட் மார்ட்டம் சீக்கிரம் செய்து அந்த நண்பரின் வீட்டிற்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது எனக் குறிப்பிட்டார்..

வானம்பாடிகள் ஐயாவிற்கு என் வந்தனம்...

Radhakrishnan said...

எளிமையும், தன்னடக்கமும் நிறைந்த மனிதரை அறிந்து கொண்டேன், தங்கள் பதிவு மூலம் மேலும் பல விசயங்கள் தெரிந்து கொண்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
நர்சிம் ஒருமுறை வானம்பாடிகள் ஐயா செய்த உதவி பற்றி சொல்லியிருக்கிறார்.. அந்த நேரத்தில் ஒரு போன் செய்தவுடன் உடனே நடவடிக்கை எடுத்து ரயிலில் அடிபட்டு இறந்த தன் நண்பனின் உடலை சீக்கிரம் கிடைக்க வழி செய்து கொடுத்தது ஒரு அளப்பரிய சேவை.. ஏனென்றால் சாதரணமாக அதனை அவ்வளவு சுலபத்தில் செய்யமுடியாது.. அதன்பிறகு டாக்டர் புருனோ மூலம் போஸ்ட் மார்ட்டம் சீக்கிரம் செய்து அந்த நண்பரின் வீட்டிற்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது எனக் குறிப்பிட்டார்..///

செந்தில்...அதைத்தான்..அவரால் முடிந்தால் அந்த உதவியைக் கண்டிப்பாய் செய்வார் என கோடிக் காட்டினேன்

Jackiesekar said...

வானம்பாடிக்கு வாழ்த்துக்கள்...

ராஜ நடராஜன் said...

புகழ்ந்தால் செம்மொழி மாநாட்டு கவிஜர் ஆகி விடுவோமோ என்ற பயத்தால் தூரத்திலிருந்து ரசிக்கிறேன்.

நிகழ்காலத்தில்... said...

\\உண்மையான..நியாயமாக வாசகர்களின் வாக்குகளைப் பெற்று..வாசகர் பரிந்துரையிலும்...மகுடத்திலும் இடம் பெறும் ஒரு சில பதிவர்களில் இவரும் ஒருவர்.\\

முழுக்க முழுக்க உண்மை.

வாழ்த்துகிறேன்..

அது ஒரு கனாக் காலம் said...

வணங்குகிறேன்...
உங்கள் இருவரையுமே

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

ஃபித்னா.காம் said...
This comment has been removed by the author.
பா.ராஜாராம் said...

superb டி.வி.ஆர். சார்! :-)

வழி நடத்தும், தோழமையான, ஆறுதலான குரல்.

நன்றி சார்.

ரோஸ்விக் said...

ஐயா நீங்க எழுதியிருக்கிற பதிவுக்குக் கீழும், இங்கு வந்துள்ள சில பின்னூட்டங்களின் கீழும்... தங்களன்புள்ள / உண்மையுள்ள-னு நானும் கையொப்பமிட்டுக்கொள்கிறேன்.

ரோஸ்விக் said...

ரொம்ப நல்ல மனிதர்களில் அவருக்கு ஒரு இடம் என் மனதில் எப்போதுமே உண்டு.

உங்களைப் பற்றியும் அறிந்திருக்கிறேன். நேரில் சந்திக்கும் தருணத்திற்காக வெயிட்டிங்கு.... :-)

vasu balaji said...

சார்! நேர்ல உங்க முன்னாடி நின்னாலே நான் அண்ணாந்து பார்க்கணும். இந்த அன்புக்கு விசுவரூபம்தான். எனக்கு கால்தான் வசதி:). நமஸ்காரம். ரொம்ப நெகிழ்ந்து போயிற்று மனது.

vasu balaji said...

அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

க.பாலாசி said...

//"பதிவுலகில் வானம்பாடிகள் எப்படிப்பட்டவர்.."//

என்றுமென் வணக்கங்களுக்கு உரித்தானவர்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஒரு நல்ல மனிதரை பற்றிய இடுகை. அதை ஒரு பண்பாளர் எழுதியிருப்பது சிறப்பிலும் சிறப்பு.

பாலா சார் இடுகைகளை ஒன்றுவிடாமல் படிப்பவன். அனைத்துமே நல்லாருக்கும். கருத்துமோதல் இடுகைகளை அவருடைய பதிவில் எதிர்பார்க்க இயலாது.

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// LK said...
100% sari//

வருகைக்கு நன்றி LK

T.V.ராதாகிருஷ்ணன் said...

// பிரபாகர் said...
அவரது கேரக்டர் மூலம் சொல்வது போல் அவரைப் பற்றி அழகாய் தகவல்கள் சொல்லி அசத்தியிருக்கிறீர்கள் அய்யா. இன்னும் சொல்லாத விஷயங்கள் இருக்கின்றன என் ஆசானைப் பற்றி. என் வாழ்வில் சந்தித்த உன்னதமான மனிதர்களில் ஒருவர். மாதா, பிதா, குரு(ஆசான்) தெய்வம்...

பிரபாகர்...//

நன்றி பிரபாகர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
மதிப்பு உயர்கிறது பாலாஜி சார் மேல். உங்கள் நட்பு தொடர வாழ்த்துகள்.//

வருகைக்கு நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// சூர்யா ௧ண்ணன் said...
எங்கள் தலைவரை பற்றிய இடுகைக்கு நன்றி!..//

நன்றி சூர்யா ௧ண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// சூர்யா ௧ண்ணன் said...
எங்கள் தலைவரை பற்றிய இடுகைக்கு நன்றி!..//

நன்றி சூர்யா ௧ண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//thenammailakshmanan said...
எனக்கும் மிகப் பைடித்த பதிவுலக நண்பர்.. பாலா சார்.. நன்றீ டி வி ஆர் பகிர்வுக்கு..//

நன்றி thenammailakshmanan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மோகன் குமார் said...
சக பதிவரை மனம் விட்டு பாராட்டும் உங்களை முதலில் பாராட்டனும் சார். இன்னும் சில பதிவர்கள் குறித்தும் இதே போல் எழுதுங்கள். நிறைய எதிர் மறை எழுத்துக்கள் வரும் இந்த நேரத்தில் இத்தகைய உண்மையான பாராட்டு பதிவுகள் தேவையே.//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி மோகன்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் பாலாண்ணா

நன்றி டிவிஆர் சார்//

வருகைக்கு நன்றி கதிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//VELU.G said...
நான் மிகவும் மதிக்கும் எதிர்பார்க்கும்படியான விமர்சனங்கள் இவருடையது.


அவரை பற்றிய பகிர்விற்கு மிக்க நன்றி//

நன்றி Velu

T.V.ராதாகிருஷ்ணன் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நீங்களும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்தான் சார் :))//

நன்றி ஷங்கர்..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

http://paamaranpakkangal.blogspot.com/2009/11/blog-post_06.html

இந்த பதிவில் மேற்படி பதிவர் லஞ்சம வாங்குவதை சப்பைக்கட்டு கட்டி இருப்பார். அப்புறம் அலுவலக நேரத்தில் பிளாக் எழுதுவதையும் பின்னூட்டம் படிப்பதையும் இடுவதையும் நியாயப்படுத்தி இருப்பார்.

'ஏனுங்க, இதெல்லாம் தப்பில்லீங்களா?' என்று கேட்டதுக்கு "அவருக்கே புரியாம ஏதோ சொல்லிட்டு போறாரு" என்றார் பார்க்கலாம்...

எத்தனை இந்தியன் தாத்தா/ரமணா வந்தாலும் இவங்கள திருத்தமுடியாத். அன்றிலிருந்தே இவரைக்கண்டாலே 'ச்சீ' என்று வெறுப்பாகி விட்டது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
பாலா சாரின் இடுகைகளை தவறாமல் படித்து வருகிறேன். நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை. அவரின் எழுத்துக்கு ரசிகன் நான்.

அவரின் கேரக்டரை பற்றிய விமர்சனத்தில் உங்களின் கேரக்டரும் தெரிந்து விடுகிறது ஐயா.

உங்களைப்போன்றோரின் வழிகாட்டுதல்கள் நிச்சயம் தேவை.//

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// V.Radhakrishnan said...
எளிமையும், தன்னடக்கமும் நிறைந்த மனிதரை அறிந்து கொண்டேன், தங்கள் பதிவு மூலம் மேலும் பல விசயங்கள் தெரிந்து கொண்டேன்.//

வருகைக்கு நன்றி V.Radhakrishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

.
//ஜாக்கி சேகர் said...
வானம்பாடிக்கு வாழ்த்துக்கள்...//

நன்றி ஜாக்கி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
புகழ்ந்தால் செம்மொழி மாநாட்டு கவிஜர் ஆகி விடுவோமோ என்ற பயத்தால் தூரத்திலிருந்து ரசிக்கிறேன்.//

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நிகழ்காலத்தில்... said...
\\உண்மையான..நியாயமாக வாசகர்களின் வாக்குகளைப் பெற்று..வாசகர் பரிந்துரையிலும்...மகுடத்திலும் இடம் பெறும் ஒரு சில பதிவர்களில் இவரும் ஒருவர்.\\

முழுக்க முழுக்க உண்மை.

வாழ்த்துகிறேன்..//

நன்றி நிகழ்காலத்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அது ஒரு கனாக் காலம் said...
வணங்குகிறேன்...
உங்கள் இருவரையுமே//

நன்றி அது ஒரு கனாக் காலம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமை //

நன்றி நண்டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பா.ராஜாராம் said...
superb டி.வி.ஆர். சார்! :-)

வழி நடத்தும், தோழமையான, ஆறுதலான குரல்.

நன்றி சார்.//

நன்றி பா.ரா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரோஸ்விக் said...
ஐயா நீங்க எழுதியிருக்கிற பதிவுக்குக் கீழும், இங்கு வந்துள்ள சில பின்னூட்டங்களின் கீழும்... தங்களன்புள்ள / உண்மையுள்ள-னு நானும் கையொப்பமிட்டுக்கொள்கிறேன்//

வருகைக்கு நன்றி ரோஸ்விக்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
சார்! நேர்ல உங்க முன்னாடி நின்னாலே நான் அண்ணாந்து பார்க்கணும். இந்த அன்புக்கு விசுவரூபம்தான். எனக்கு கால்தான் வசதி:). நமஸ்காரம். ரொம்ப நெகிழ்ந்து போயிற்று மனது.//

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
//"பதிவுலகில் வானம்பாடிகள் எப்படிப்பட்டவர்.."//

என்றுமென் வணக்கங்களுக்கு உரித்தானவர்...//


நன்றி க.பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஒரு நல்ல மனிதரை பற்றிய இடுகை. அதை ஒரு பண்பாளர் எழுதியிருப்பது சிறப்பிலும் சிறப்பு.

பாலா சார் இடுகைகளை ஒன்றுவிடாமல் படிப்பவன். அனைத்துமே நல்லாருக்கும். கருத்துமோதல் இடுகைகளை அவருடைய பதிவில் எதிர்பார்க்க இயலாது.

வாழ்க வளமுடன்//

நன்றி Starjan

என்றும் அன்புடன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// mohamed ashik said...
http://paamaranpakkangal.blogspot.com/2009/11/blog-post_06.html//

ஐயா..ashik அந்த பதிவு பாலாவின் எண்ணங்கள் இல்லை..ஒர் அரசு ஊழியன் பார்வையில் எழுதப்பட்ட நகைச்சுவை பதிவு..அவ்வளவுதான்..

Ashok D said...

நானும் அவரால ஈர்க்கப்பட்டு... அவரு ஹேர்ஸ்டெயில்ல வெச்சுகிட்டேன்.. :)))

vasu balaji said...

// mohamed ashik said...
http://paamaranpakkangal.blogspot.com/2009/11/blog-post_06.html

இந்த பதிவில் மேற்படி பதிவர் லஞ்சம வாங்குவதை சப்பைக்கட்டு கட்டி இருப்பார். அப்புறம் அலுவலக நேரத்தில் பிளாக் எழுதுவதையும் பின்னூட்டம் படிப்பதையும் இடுவதையும் நியாயப்படுத்தி இருப்பார்.

'ஏனுங்க, இதெல்லாம் தப்பில்லீங்களா?' என்று கேட்டதுக்கு "அவருக்கே புரியாம ஏதோ சொல்லிட்டு போறாரு" என்றார் பார்க்கலாம்...

எத்தனை இந்தியன் தாத்தா/ரமணா வந்தாலும் இவங்கள திருத்தமுடியாத். அன்றிலிருந்தே இவரைக்கண்டாலே 'ச்சீ' என்று வெறுப்பாகி விட்டது.//

அந்த இடுகையில் இந்தப் பெயரில் ஒரு பின்னூட்டமும் இல்லைங்களே. நெத்தியடி முஹம்மத் கிண்டலாக ஏதோ சொல்லியிருந்தார்.

/'ஏனுங்க, இதெல்லாம் தப்பில்லீங்களா?' என்று கேட்டதுக்கு "அவருக்கே புரியாம ஏதோ சொல்லிட்டு போறாரு" என்றார் பார்க்கலாம்...//

இது மாதிரியும் அங்க ஒன்னுமில்லை.

இந்தியன்/ரமணா மாதிரி இந்த கதை புதுசா இருக்கு. :)).

ஹேமா said...

ராதாகிருஷ்ணன் ஐயாவுக்கு நன்றி.

வானம்பாடி ஐயா...என் பதிவுகளில் கூட அறிமுகம் இல்லாவிட்டாலும் உங்களுக்கு என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பாலா ஐயாவுக்கு வாழ்த்துகள்!

பதிவிட்டு வாழ்த்தும் டி.வி.ஆர் ஐயாவுக்கும் வாழ்த்துகள்!

Ravichandran Somu said...

பாலா ஐயாவுக்கு வாழ்த்துகள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Mahi_Granny said...

புலிகேசித் தம்பி யாரெனத் தெரியாத போதும் பாலா சாரின் இடுகைக்கு காரண கர்த்தா என்பதால் அவருக்கு ஒரு மின்னஞ்சல் கொடுத்தேன் நன்றி சொல்ல. இப்போது இவ்வளவு அழகாக பாராட்டியிருக்கும் தங்களுக்கு என்ன வார்த்தை சொல்லி பாராட்டுவேன். விட்டால் இந்தியா வரும் போது நேராக சதர்ன் ரயில்வே ஆபீசுக்குப் போய் விட்டுத் தான் வீட்டுக்கு போவேன் என நினைக்கிறேன். நன்றி சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
ராதாகிருஷ்ணன் ஐயாவுக்கு நன்றி.

வானம்பாடி ஐயா...என் பதிவுகளில் கூட அறிமுகம் இல்லாவிட்டாலும் உங்களுக்கு என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.//

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
பாலா ஐயாவுக்கு வாழ்த்துகள்!

பதிவிட்டு வாழ்த்தும் டி.வி.ஆர் ஐயாவுக்கும் வாழ்த்துகள்!//

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரவிச்சந்திரன் said...
பாலா ஐயாவுக்கு வாழ்த்துகள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்//

வருகைக்கு நன்றி ரவிச்சந்திரன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Mahi_Granny said...
புலிகேசித் தம்பி யாரெனத் தெரியாத போதும் பாலா சாரின் இடுகைக்கு காரண கர்த்தா என்பதால் அவருக்கு ஒரு மின்னஞ்சல் கொடுத்தேன் நன்றி சொல்ல. இப்போது இவ்வளவு அழகாக பாராட்டியிருக்கும் தங்களுக்கு என்ன வார்த்தை சொல்லி பாராட்டுவேன். விட்டால் இந்தியா வரும் போது நேராக சதர்ன் ரயில்வே ஆபீசுக்குப் போய் விட்டுத் தான் வீட்டுக்கு போவேன் என நினைக்கிறேன். நன்றி சார்//

நன்றி Mahi_Granny

Karthick Chidambaram said...

நல்ல அறிமுகம். நண்பர் வானம்பாடிக பற்றி எனக்கு அதிகம் தெரியாது.
நன்றிகள் TVR ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Karthick Chidambaram