Sunday, July 18, 2010

கவலை..கவலை..கவலை..




பணமில்லையே என்ற கவலை

அதிகாரி என்ன சொல்வாரோ

வேலையாளியின் கவலை

நாம் அறிந்த கவலைகள் இவை

ஆயின்

காதலியை... காதலன் கவலை

மணவாட்டிக்கு கணவன் மீது கவலை

இருளில் செல்லக் கவலை

நடக்கையில் கவலை

திரும்புகையில் கவலை

மரத்தில் பார்க்கும் கவலைகள்

வேதம் தவறாய் ஓதுகையில் கவலை

கொழுகொம்பற்ற கவலை

தண்ணீரில் நீந்தும் கவலை

விவசாயி வயலுக்கு நீர்பாய்ச்சும் கவலை

கவலை கவலை கவலை

தமிழில் எவ்வளவு கவலையடா!!!


(சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படிக்கும் போது ஓரிடத்தில் தமிழில் 'கவலை' என்பதற்கு நினைவு அலைதல்,அக்கறை,பயம்,பல தெருக்கள் கூடும் இடம்,பாதைகள் பிரியும் இடம்,மரக்கிளை,வேதம் ஓதுகையில் குழப்பம்,ஒரு வகைக்கொடி,சிறிய மீன்,விவசாயத்தில் நீர் இறைக்க ஏற்பட்ட தோல் பக்கெட்..இவற்றிற்கெல்லாம் கூட கவலை என்று பெயர் என்கிறார்.அதைப் படித்ததால் வந்த கவலை இது)

9 comments:

பிரபாகர் said...

பின்னூட்டம் போடுகிறோமோ, நாம்தான் முதலா, இல்லை அதற்குள் இன்னொருவர் போட்டுவிடுவாரா என கவலை...

பிரபாகர்...

பிரபாகர் said...

தமிழிஷில் சேர்க்கவில்லையே, ஓட்டுப் போடமுடியவில்லையே எனக் கவலை...

பிரபாகர்...

Unknown said...

நம்ம கமல் தெனாலில பயம் பத்தி சொல்வாரே அதைப்போல இருக்கு..

எனக்கு என்னை நெனச்சே கவலையா இருக்கு..

VELU.G said...

ரொம்ப கவலைப்படாதீங்கோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//VELU.G said...
ரொம்ப கவலைப்படாதீங்கோ//

எனக்கு எந்த கவலையும் இல்லை வேலு...
இந்த இடுகை கவலை என்பதற்கு தமிழில் எவ்வளவு அர்த்தங்கள் என்பதைச் சொல்வதற்கே..
வருகைக்கு நன்றி வேலு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
பின்னூட்டம் போடுகிறோமோ, நாம்தான் முதலா, இல்லை அதற்குள் இன்னொருவர் போட்டுவிடுவாரா என கவலை...

பிரபாகர்...//

வருகைக்கு நன்றி பிரபாகர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
நம்ம கமல் தெனாலில பயம் பத்தி சொல்வாரே அதைப்போல இருக்கு..

எனக்கு என்னை நெனச்சே கவலையா இருக்கு..//

வருகைக்கு நன்றி செந்தில்

Romeoboy said...

நாலு கவலை பார்சல் ப்ளீஸ் ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி RomeO ♥