Thursday, July 22, 2010

களவாணி..- என் பார்வையில்


இந்த இடுகையை போடுவதா..வேண்டாமா..என பல நாட்களாக டிராஃப்டிலேயே வைத்திருந்தேன்..இன்று ஏனோ போடவேண்டும் எனத் தோன்றியது.

இந்தப் படம்..நல்ல பொழுபோக்கு படம் என்பதில் ஐயமில்லை. நகைச்சுவைக்கு நகைச்சுவை..கிராமத்துக் காட்சிகள் ..ரிகார்ட் டான்ஸ்..வெட்டு குத்து என எல்லாம் சரிவிகித கலவை.கஞ்சா கருப்பு வரும் காட்சிகள் எல்லாம் நரசிம்ம ராவ்களையும் சிரிக்க வைக்கும்.நாயக,நாயகி,நண்பர்கள் எல்லாம் இதிலும் உண்டு.இரண்டு மணி நேரம் படம் போனதே தெரியவில்லை.படத்தில் தொய்வென்பதே இல்லை..

இந்நிலையில்..இப்படம் கூறுவதென்ன..

அன்று பாரதிராஜா ஆரம்பித்து வைத்த அலைகள் ஓய்வதில்லை....யின் அலைகள் ஒயவில்லை.

இதே கதையம்சம் கொண்டு எவ்வளவு படங்கள்..காதல்,சுப்ரமணியபுரம் எல்லாம் இதே ரகம்தான்.

பால்ய விவாகம் என்பது..சட்டத்திற்கு விரோதமானது..ஆனால் இந்த படத்தில் எல்லாம் 10ஆம் வகுப்பு..11ஆம் வகுப்பு படிக்கும் பெண்கள்..சிறுமிகள் என்றே சொல்லலாம் ஏனெனில் வயது 16க்குள் தான் இருக்கும்..இவர்களுக்கு படிக்காமல்..ஊர் சுற்றி திரியும்..வம்பு சண்டைகளை விலைக்கு வாங்கி..வில்லனுடன் போராடி..இரு தரப்பிலும் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி..கடைசியில்..எவ்வளவு பெரிய காயங்களானாலும் அடுத்த காட்சியிலே ஜான்சன் பேன்டெய்ட் போட்டு வரும் நபருடன் காதல்.

பள்ளி சிறுவர், சிறுமியர் மனதில் இது போன்ற ஆசை நஞ்சை விதைத்து படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமா? என்பதே கேள்வி.

கட்டபொம்மன் என்றால் ,வ.உ.சி., என்றால்,கர்ணன் என்றால் பாரதி என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என அந்த நாளில் சிறுவர்கள் மனதில் வேரூன்ற வைத்தன படங்கள்..அன்றும் காதல் காட்சிகள் வந்தன..ஆனால் இளமைப் பருவத்தில்.. அப்படித்தான் சித்தரித்தன படங்கள்.

இன்று செய்தித்தாள்களைப் பார்த்தாலே..காதலன் காதலி ஓட்டம், கணவனைக் கொன்ற மனைவி,கள்ளக் காதல் காரணமா? வெட்டி கொலை, இப்படிப்பட்ட செய்திகளையே பார்க்க முடிகிறது.

அன்றும் படங்களைப் பார்த்து கொன்றேன் என கொலைகாரர்கள் கூறியதுண்டு..ஆனால் அவை சொற்பம்..

இன்றோ...நடைபெற்று வரும் பாதி குற்றங்களில்..குற்றவாளிகள்..சினிமாவைப் பார்த்துதான் அதுபோல செய்தோம் என்கின்றனர்.

இதைத் தெரிந்துக் கொண்டவர்கள் ..குற்றத்திற்கான் தண்டனையை நினைப்பதில்லை..

படத்தில்...ஆறு மாத தண்டனைக்குப் பிறகு..ஒரு வருடத்திற்குப் பிறகு என அடுத்தக் காட்சியிலேயே வரும்..வாழ்வில் அந்த தண்டனைக் காலம்..எதிர் கால வாழ்வையே பாதிக்கும் என்பதை இன்றைய இளைய சமுதாயம் உணரவில்லை.

இயக்குநர்களே..சினிமா ஒரு பவல்ஃபுல் மீடியா..அதில் ஈடுபடும் அதிர்ஷடம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது..சமூக பொறுப்புணர்வுடன் பணியாற்றி வெற்றிகளை குவியுங்கள்..

வெற்றி பெறுவது என்பதைவிட எப்படி வெற்றி பெற்றோம் என்பதே உண்மையான வெற்றியாகும்.

டிஸ்கி..இந்த இடுகைக்கு ஆதரவு..எதிர் ஒட்டு போடும் அனைவருக்கும் நன்றி

21 comments:

a said...

//
இயக்குநர்களே..சினிமா ஒரு பவல்ஃபுல் மீடியா..அதில் ஈடுபடும் அதிர்ஷடம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது
//
ஆமாம். ஆனால் பெரும்பாலானோர் அதில் புதைந்து போகிறார்கள்.....

Vidhya Chandrasekaran said...

நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரிதானென்றாலும் சினிமாவை ஒரு பொழுதுபோக்கும் அம்சமாகவே பார்த்தால் பிரச்சனை இருக்காது என நினைக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வழிப்போக்கனின் கிறுக்கல்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அதுதான் இல்லையே வித்யா..இன்றைய இளைய சமுதாயம் எளிதில் உணர்ச்சிவசப்படும் சமுதாயம்.சினிமா இவர்களுக்கு பொழுது போக்கு அல்ல.அந்த கதாநாய(கி)கன் இடத்தில் தன்னைவைத்துவிட்டு..கதாநாயகி(கன்) யாரேனும் வேண்டும் எனத் தேடி தவறிழைக்கிறான் (ள்) .பல குற்றங்கள் இன்று அதனாலேயே நடக்கின்றன.
(தவிர்த்து சமீபத்தில் ஒரு குழந்தை கொலையில்..கொலையாளி ஆசை படத்தில் பிரகாஷ்ராஜ் பாணியில் கொலைசெய்திருப்பதாகக் கூறப்பட்டது)

உண்மைத்தமிழன் said...

ஐயையோ..

தலைவரே.. நீங்க சொல்றதும் கரெக்ட்டுதான்..! அலைகள் ஓய்வதில்லை மாதிரியான எடுக்கப்படக் கூடாத கதைதான்..!

ஆனால் ஊர், ஊருக்கு இப்படியும் நாலைஞ்சு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்..! அவர்களில் ஒருவரின் கதையை எடுத்திருக்கிறார்கள்ன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..!

goma said...

உங்கள் விமரிசனம் பார்த்த பிறகே படம் படம் பார்க்க வேண்டும்....

Chitra said...

படத்தில்...ஆறு மாத தண்டனைக்குப் பிறகு..ஒரு வருடத்திற்குப் பிறகு என அடுத்தக் காட்சியிலேயே வரும்..வாழ்வில் அந்த தண்டனைக் காலம்..எதிர் கால வாழ்வையே பாதிக்கும் என்பதை இன்றைய இளைய சமுதாயம் உணரவில்லை.


...... இருபது வருஷத்தையே, ஒரு சைக்கிள் பெடலில் இரண்டு செகண்ட்ல உருட்டிருவாங்க...... லாஜிக் பார்த்தால், படம் இல்லை. Reality வேறு - Fantasy வேறு - என்று தெரியாமல் நிறைய பேர் குழம்பி விடுவதால் வரும் சீரழிவு பற்றி நல்லா எழுதி இருக்கீங்க.....

VANDHIYAN said...

"நீங்க கூறுவதுதான் சரி , அந்த படத்தில் ஒரு காட்சியில் தங்கையின் திருமணத்தை நடத்திவைக்க அண்ணன் சார்பதிவாளர் அலுவகத்தில் காத்திருக்கிறார் கதையின் நாயகிக்கு பதினாறு வயதுதான் கதைப்படி இருக்கிறது . அதெப்படி என்பதை இயக்குனர் விளக்கவேண்டும்.

Karthick Chidambaram said...

உங்கள் சீட்ட்ரம் ஞாயமானதே !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
உண்மைத் தமிழன்
Goma
Chitra
VANDHIYAN
Karthick Chidambaram

Unknown said...

ஏதோ ஒரு காரணத்துக்காக இப்படம் நன்றாக ஓடும் வேலையில்.. இப்படத்தை தூக்கிவிட்டு தங்கள் படத்தை போடுமாறு சில பவர்புல் சினிமா ஆட்கள் மிரட்டுகிறார்களாம்.. ( ஒரு தகவலுக்காக)..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
ஏதோ ஒரு காரணத்துக்காக இப்படம் நன்றாக ஓடும் வேலையில்.. இப்படத்தை தூக்கிவிட்டு தங்கள் படத்தை போடுமாறு சில பவர்புல் சினிமா ஆட்கள் மிரட்டுகிறார்களாம்.. ( ஒரு தகவலுக்காக).. //

:)))

நசரேயன் said...

நானும் கல்லூரி படிக்க வேண்டியவ,ஆனா 1 ம் வகுப்பிலே ரெண்டு வருசம், 5 ம் வகுப்பிலே ரெண்டு வருஷம், 11 ம் வகுப்பிலே இது ரெண்டாவது வருஷம்ன்னு நாயகி சொல்லுற மாதிரி ஒரு வசனம் வைத்து இருந்தா வயசு கணக்கு சரிவரும்.

vasu balaji said...

நம்ம தளபதி கணக்கே கணக்கு:)). நல்ல கருத்துகள் சார்.

நசரேயன் said...

//இயக்குநர்களே..சினிமா ஒரு பவல்ஃபுல் மீடியா..அதில் ஈடுபடும் அதிர்ஷடம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது..சமூக பொறுப்புணர்வுடன் பணியாற்றி வெற்றிகளை குவியுங்கள்..//

ஐயா வாய்ப்பு கிடைக்க படத்தோட இயக்குனர் எவ்வளவு தூரம் கஷ்டம்பட்டு இருப்பாரோ, சமூக பொறுப்புணர்வு பற்றி வயத்திலே பசி இருக்கிறவங்ககளுக்கு யோசிக்க நேரம் இருக்க வாய்ப்பு இல்லை.

Cable சங்கர் said...

senthil நீங்கள் சொல்லும் தகவல் சரியானதுஅல்ல.. நன்றாக போகும் படத்துக்கு மேலும் சில ஷோக்கள் அதிகரிக்க முடியவில்லை. அது பெரிய படங்களின் வருகையினால். அவ்வளவுதான்.

ISR Selvakumar said...

வெற்றி பெற்ற ஒரு கமர்ஷியல் திரைப்படத்தில் இருக்கும் சமூகக் கேடுகளை யாரும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை.

நீங்கள் மட்டும் சீரியஸ் லென்ஸ் வைத்து பார்த்திருக்கிறீர்கள். எத்தனை பேர் உங்கள் கருத்துகளை ஒப்புக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் வரவேற்கிறேன்.

பிரபாகர் said...

படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததய்யா...

உங்க விமர்சனமும்.

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நசரேயன்
Bala
Cable Sankar

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
selvakkumar
பிரபாகர்

Radhakrishnan said...

படம் பார்த்து மட்டுமே கெட்டு போகும் அளவுக்கு சமூகம் முடங்கிப் போகவில்லை. ஒருவர் கெட்டு போவதில் அவரின் பங்கும் நிறைய இருக்கிறது.

ஒரு சினிமாவின் வெற்றி சில மாதங்களோ, சில வருடங்களோ மட்டுமே. அங்காடி தெருவை நினைப்பவர் எத்தனை பேர்?

நன்றி ஐயா.