Thursday, July 29, 2010

தமிழக காங்கிரஸ் மண்குதிரையா...?

தமிழகத்தில்..காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை இழந்த 1967 முதல்.. அது வெற்றி வாய்ப்பை பெறவில்லை.தவிர்த்து..தி.மு.க., உடைந்து அ.தி.மு.க., உருவானதும் அதன் நிலைமை மேலும் மோசமானது.ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலே ..அக்கட்சி சட்டசபையில் நுழைய முடிந்தது..அதே போன்று காங்கிரசுடன் கூட்டணியால் தான் திராவிடக் கட்சிகளுக்கும் கூட்டணிக்கு ஏற்றார்போல் நாடாளுமன்றத்தில் நுழைய முடிந்தது.மத்திய அமைச்சர்கள் பேரம் பேச முடிந்தது.

ஆனால்..சமீப காலமாக ராகுல் காந்தி கட்சிக்கு புது ரத்தம் ஊட்ட முற்பட்டுக் கொண்டிருக்கிறார்.அதற்கு அச்சாரமாக உத்தரபிரதேஷ்,பீஹார் ஆகிய மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரசால்
கணிசமான இடங்கள் வெற்றிபெற முடிந்தது.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு ராகுல் ஆலோசனையின் பெயரிலேயே தமிழகத்திலும் காங்கிரஸ் செயல்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதற்கேற்றாற் போல ராகுலும் இரண்டு முறை தமிழகம் வந்தும் கலைஞரை சந்திப்பதை தவிர்த்திருக்கிறார்.

காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஜெ விரும்புகிறார்.அதற்கான முயற்சிகள் நடந்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.அதனால் தான் கோவை யில் அவர் பேசுகையில் கூட 'நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி உருவாகும்..அதை நான் கவனித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

தங்கள் கூட்டணியில்..காங்கிரசை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு உள்ளது. 18 எம்.பி.க்களை தன் வசம் வைத்துள்ள தி.மு.க.,மத்தியில் 3 கேபினட் அமைச்சர்கள்,4 இணை அமைச்சர்களை பேரத்தில் பெற்றிபெற்றருக்கிறது. ஸபெக்ட்ரம் ஊழல்,அழகிரியின் மொழிபிரச்னை போன்றவை இருந்தாலும் மைய அரசுக்கு பல விஷயங்களில் சாதகமாகவே தி.மு.க., இருப்பதால்..2011ல் கூட்டணி மாறினால் பிரச்னைகள் எழும் என காங்கிரஸ், கூட்டணயை மாற்றவும் தயங்குகிறது.இது தி.மு.க.விற்கு சாதகம்.

தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போவதில் பெரும் பங்கு காங்கிரஸிற்கு இருக்கும் என்பதால்...அதை இப்போது உணர்ந்து சட்டசபையில் ஆட்சியிலும் இம்முறை பங்கு கேட்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தி.மு.க., தங்கள் கூட்டணியில் இம்முறை ம.தி.மு.க.,வையும் எதிர்பார்க்கும் எனத் தெரிகிறது.அதனாலேயே வைகோ வை பாராட்டி முரசொலி சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டது.பா.ம.க., வையும் தி.மு.க. எதிர்பார்க்கிறது. அதனாலேயே..டா ஸ்மாக் ஊழியர் பற்றி ராமதாஸ் கூறியதற்கு..மதுவிலக்கு ஏற்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது என கலைஞர் கூறியுள்ளார்.

இந்நிலையில்..செம்மொழி மாநாடு, அ.தி.மு.க., கூட்டம் என அல்லோகலப்பட்ட கோவையில் ஆகஸ்ட் 2ஆம் நாள் தி.மு.க., பொதுகூட்டம் நடைபெற உள்ளது.கலைஞர் கலந்து கொள்ளும் இக்கூட்டத்திற்கு ஜெ க்கு வந்த கூட்டத்திற்கு மேல் கூட்டம் கூட்டவேண்டும் என ரகசிய உத்தரவு.

எல்லாவற்றையும்..calmஆக கையில் ஓட்டுச் சீட்டுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் காமன் மேன்.

10 comments:

அபி அப்பா said...

ஏன் அய்யாயா?

sathishsangkavi.blogspot.com said...

//உத்தரபிரதேஷ்,பீஹார் ஆகிய மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரசால்
கணிசமான இடங்கள் வெற்றிபெற முடிந்தது.//

உத்திரபிரதேசம், பீகார் போல தமிழ்நாட்டை நினைக்கிறார்....

பொறுத்து இருந்து பார்க்கலாம்... அவர் கனவு பலிக்குமா என்று

Chitra said...

இந்நிலையில்..செம்மொழி மாநாடு, அ.தி.மு.க., கூட்டம் என அல்லோகலப்பட்ட கோவையில் ஆகஸ்ட் 2ஆம் நாள் தி.மு.க., பொதுகூட்டம் நடைபெற உள்ளது.கலைஞர் கலந்து கொள்ளும் இக்கூட்டத்திற்கு ஜெ க்கு வந்த கூட்டத்திற்கு மேல் கூட்டம் கூட்டவேண்டும் என ரகசிய உத்தரவு.

..... போட்டி போட்டு, மக்களுக்கு நல்லது செய்வதற்கு பதிலாக - கூட்டம் நடத்துகிறார்கள். மக்களுக்கு என்ன லாபம்?

vasu balaji said...

//எல்லாவற்றையும்..calmஆக கையில் ஓட்டுச் சீட்டுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் காமன் மேன்.//

எதிர் பார்த்துக் கொண்டுன்னு வரணுமோ:)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எதோ மக்களுக்கு நல்லது பண்ணினா சரிதான் பாஸ்..

( இலவசங்களை செல்லவில்லை..அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர ஏதாவது பண்ணவேண்டும்...)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அபி அப்பா said...
ஏன் அய்யாயா?//

கூட்டணி விவகாரத்தில் பெரும் மாற்றம் வரும் என்றே தோன்றுகிறது அபி அப்பா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said... உத்திரபிரதேசம், பீகார் போல தமிழ்நாட்டை நினைக்கிறார்....

பொறுத்து இருந்து பார்க்கலாம்... அவர் கனவு பலிக்குமா என்று//

பார்க்கலாம் Sangkavi

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி சித்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
எதிர் பார்த்துக் கொண்டுன்னு வரணுமோ:)))//

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பட்டாபட்டி.. said...
எதோ மக்களுக்கு நல்லது பண்ணினா சரிதான் பாஸ்//

:)))