Sunday, October 10, 2010

வெல்டன்..காமினி (சவால்-சிறுகதை)

நியோ டிடெக்டிவ் ஏஜென்சி என்னும் போர்டை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தாங்கி நின்றது அந்தக் கட்டிடம்.
அதன் முன் பிரபல நடிகர் கார் ஒன்று வந்து நின்றது.
அவர் மகளுக்குத் திருமணம்..அடுத்த மாதம் வைத்திருந்தார்..அதற்கான அழைப்பிதழ் கொடுக்க வந்திருக்கக் கூடும் என வாயிலில் அவரைக் காணக் கூடியிருந்தக் கூட்டம் பேசிக்கொண்டிருந்தது.

*** ***** **** ****

வந்ததிலிருந்து சிவா சரியில்லை..காமினி உணர்ந்துக் கொண்டாள்.அவனுடன் அவளுக்கு ஒரு வாரம் தான் பழக்கம்.சிவாவிடம் தான் எதிர்பார்த்ததைக் கூறியிருந்தாள்.அதனால் தான் அவன் அப்செட்டோ என எண்ணினாள்.
'காதலும் காமமும் ஆண் பெண் இணைப்புக்கு அடிப்படை..காதல் இல்லா காமம் ருசிக்காது.அதுபோல காமம் இல்லா காதலும் இனிக்காது.காதல் மட்டும் போதுமெனில் அதற்கு ஒரு பிராணி போதும்..காமம் மட்டும் போதுமானால் அதற்கு ஒரு விலைமகள் போதும்' என்றவாறே காமினியை அணைக்கப் பார்த்தான் சிவா.
'நிறுத்து..சிவா,,நிறுத்து..என்னா ஆச்சு இன்னிக்கு உனக்கு' என்ற காமினியின் கண்களில் அது பட்டது.சிவாவிற்கு உடன் ஒரு செல்லிடை பேசி வர..அவன் எழுந்து நின்று அவளுக்குத் தெரியாமல் ஏதோ பேசினான்.
இருவரும் பெசண்ட் நகர்..எலியட்ஸ் பீச்சில் அமர்ந்துக் கொண்டிருந்தனர்.சிவாவின் கண்களில் காமத்துடன், குரோதமும் கலந்திருந்தது.அவன் பார்வை அவளது உடலின் கவர்ச்சி பிரதேசங்களை விழுங்கிக் கொண்டிருந்தது.
'நோ சிவா..இன்னிக்கு நீ சரியில்லை..நான் கிளம்பறேன்'
அப்போதுதான் தான் செய்யவிருந்த செயலை மறந்தது ஞாபகம் வந்தது அவளுக்கு.
அது எப்படி பெண்களுக்கு உடனே ஒரு பாதுகாப்பு உணர்ச்சி வந்து விடுகிறது.
காமினியின் பின்னாலேயே..'காமினி..காமினி..ஐ ஆம் சாரி' என ஓடினான் சிவா..அப்போதும் அவனது செல்லிடைபேசி அலறியது.அதை எடுத்துப் பேசப் பேச அவன் முகம் மாறியது.
அந்த நேரம் பார்த்து சுண்டல்காரப் பையன் 'சார் சுண்டல் என்றான்"
'டேய்..என் பொழப்பு உனக்கும் கிண்டலாப் போச்சு இல்ல" என அவன் மீது எரிந்து விழுந்து விட்டு..தனது பைக் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தான்.காமினி மௌனமாக அதன் மீது அமர்ந்திருந்தாள்.
'சாரி, காமினி..மன்னிச்சுடு..இனிமே இப்படி நடக்க மாட்டேன்'
'சரி..சரி..வண்டியை எடு 'என்றாள் காமினி.
சிவா..வண்டியை ஸ்டார்ட் செய்ய..தன் உடல் அவன் மீது படாமல் ஜாக்கிரதையாக இருந்தாள்.ஆனால்..சென்னை நகர வீதி அந்த ஜாக்கிரதை உணர்வை சட்டை செய்யவில்லை.
தன் கோபத்தையெல்லாம் சிவா..வண்டியில் காட்ட வண்டி சீறிப் பாய்ந்தது.
அடையாறு சிக்னலில் வண்டி திரும்பும் போது..எதிரே வந்த லாரியின் மீது பைக் பயங்கரமாக மோத..இருவரும் வீசி எறியப்பட்டனர்.
சிவாவை ஹெல்மெட் காப்பாற்ற ..காமினி விழுந்த வேகத்தில் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
விபத்தை வேடிக்கைப் பார்த்த கும்பலிலிருந்து ..ஒருவர் காமினியையும்,சிவாவையும் ஆட்டோவில் ஏற்றி..பக்கத்திலிருந்த மருத்துவ மனைக்கு அழைத்து வந்தார்.
சிவாவிற்கு புற நோயாளிப் பிரிவில் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த நேரத்தில்..காமினி ICU வில் அனுமதிக்கப் பட்டாள்.பின் ICUவெளியே வந்து அமர்ந்தான் சிவா.....
நடு இரவு நெருங்கிக் கொண்டிருந்தது..ஜன சந்தடி அடங்கியது..
திடுமென காமினி கண் விழித்தாள்..'காமினி..உன்னைக் காப்பாற்றிக் கொள்..காப்பாற்றிக் கொள்..' என மனதில் ஒரு குரல் எச்சரித்தது..
இரவு டூட்டி டாக்டர் உள்ளே நுழைந்து..நோயாளிகளின் கேஸ் ஷீட்டுகளை நோட்டம்விட்டு விட்டு..தன் கடமை முடிந்ததாக வெளியேறினார்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்....கொரியன் பச்சை பஞ்சு மெத்தையாய் தாங்கிக் கொண்டது அவளை.
எழுந்து ஓடத் தொடங்கினாள்..ஆங்காங்கே நாய்கள் குரைக்கத் தொடங்க..திடீரென விழித்தான் சிவா..
ஓடிக்கொண்டிருந்த காமினியைப் பார்த்துவிட்டு , அவளை துரத்த ஆரம்பித்தான்..இரவு ரோந்து போலீஸ் வேன் ஒன்று அவர்களைப் பார்த்துவிட்டது..யாரோ பெண் ஓட ஆண் துரத்துகிறான்.கண்டிப்பாக ரேப் கேஸ் தான் என ஜீப்பைத் திருப்பச் சொன்னார் அதிலிருந்த காவல் அதிகாரி.
அடையாறின் ..சின்னச் சின்ன சந்துகளில் காமினி ஒட..சிவா துரத்த..அவர்கள் நுழைந்த தெருவில் எல்லாம் போலீஸ் ஜீப் நுழைய முடியாததால் போலீஸ் அதிகாரியும் இறங்கி ஓட..ஆங்காங்கே தென்பட்ட மக்கள் சினிமா சூட்டிங் என எண்ணினர்.
அவளைப் பிடித்துவிட்டான்...தன் பையிலிருந்த ரிவால்வரை எடுத்து.."சாரி..எனக்கு வேற வழி தெரியலை' என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.'என்னைப் பற்றி எல்லா விஷயமும் உனக்குத் தெரியும் என நான் அறிவேன்..நாம் கடற்கரையில் இருக்கையில் என் நண்பன் ஒருவன் செல்ஃபோனில் தெரிவித்து விட்டான்..நீயாரென"
டெலிஃபோன் மணி போல அந்த நேரமும் சிரித்தாள் காமினி..'சிவா.. நீ திருடி வந்த டைமண்ட் விஷயம் எனக்குத் தெரிந்துவிட்டது..நீ கடற்கரையில் என் மீது காம வயப்பட்டிருந்த போது..உன் பையிலிருந்த ரிவால்வர் கீழே விழ..அப்போது உனக்கு செல்லிடைப்பேசி வந்தது.உன் கால்சட்டையிலிருந்து விழுந்த ரிவால்வரைலிருந்து குண்டுகளை எடுத்து விட்டு மீண்டும் உன்னிடம் வெறும் ரிவால்வரைக் கொடுத்தேன்.அதை நீ கவனிக்க வில்லை.பின் நீ பிதற்ற ஆரம்பித்ததும்..நான் மன்னித்தது போல நடித்தேன்.கோபித்து வந்து உன் பைக்கில் அமர்ந்த நான் சைட் பேக்கில் இருந்த டயமண்ட் கற்களையும் எடுத்துக் கொண்டேன்' என்றாள்.
ஒரு நிமிடம் அதிர்ந்தான் சிவா..உடன் தன் பலத்தை உபயோகித்து அவளை துன்புறுத்த ஆரம்பித்தான்..அப்போது ஒரு கார் வர ஒடி ஒளிந்தான் சிவா.துரத்தி வந்த போலீஸ் அதிகாரியைக் காணோம்.இதைவிட பெரிய வேட்டைக் கிடைத்து விட்டதோ?அல்லது..இவர் ரேப் செய்ய கேஸ் கிடத்துவிட்டதோ..தெரியவில்லை
வந்த கார் அருகே நிற்க காமினி காரில் ஏறிக் கொண்டாள்.
**** **** **** ****
டயமண்டை திருடிய என் உறவுப் பையனிடமிருந்து..திரும்பிப் பெற்று என்னிடம் ஒப்படைத்தற்கு நன்றி என்றார் பிரபல நடிகர்.என் மகள் திருமணத்திற்கு வைர மாலைக்காக நான் வாங்கிவைத்திருந்த வைரங்கள் அவை..இந்த திருட்டு போலீசிற்குத் தெரிந்தால்..என் உறவு பையன் பெயர் கெடுவதோடு..எனக்கு வருமான வரியினரிடமிருந்து தேவையில்லா சிக்கல்கலும் வந்திருக்கும்..உங்களுக்கு நன்றி..என்றார் நடிகர் நியோ டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர் பரந்தாமனிடம்.
அந்த பாராட்டு காமினிக்குத்தான்..சிவாவிடமட்டுமல்ல ,போலீசாரிடம் இருந்தும் டயமண்டை காப்பாற்றி இருக்கிறாள், 'வெல்டன் காமினி.போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டயமண்டைக் கொண்டு வந்துவிட்டியே!" என பாராட்டினார் பரந்தாமன்

38 comments:

நசரேயன் said...

ஐயா பரிசிலே எனக்கு ஒரு பங்கு கொடுங்க

எல் கே said...

நல்லா இருக்கு

பிரபாகர் said...

நல்லாருக்குங்கய்யா... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

பிரபாகர்...

செல்வா said...

:-))

ஹேமா said...

முயற்சிக்கு நிச்சயம் வெற்றிதான் உங்களுக்கு !

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

Vidhya Chandrasekaran said...

ஆல் தி பெஸ்ட்:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
ஐயா பரிசிலே எனக்கு ஒரு பங்கு கொடுங்க//

அதற்கென்ன..செய்துவிட்டால் போச்சு..ஆதி,பரிசலிடம் பேசவும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//LK said...
நல்லா இருக்கு//

நன்றி LK

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
நல்லாருக்குங்கய்யா... வெற்றி பெற வாழ்த்துக்கள்..//.

நன்றி பிரபா

பவள சங்கரி said...

ஆகா, நல்லா இருக்குங்க......சவால் கதையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

vasu balaji said...

// நசரேயன் said...

ஐயா பரிசிலே எனக்கு ஒரு பங்கு கொடுங்க//

ங்கொய்யால இதுக்கு மட்டும் ஒரு எழுத்துப் பிழையும் வராதே:)).

சார் நல்லாருக்கு கதை

Ramesh said...

நல்ல முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ப.செல்வக்குமார் said...
:-))//

வருகைக்கு நன்றி செல்வக்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
முயற்சிக்கு நிச்சயம் வெற்றிதான் உங்களுக்கு !//


நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எஸ்.கே said...
மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!//


நன்றி எஸ்.கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
ஆல் தி பெஸ்ட்:)//

நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
ஆகா, நல்லா இருக்குங்க......சவால் கதையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரியமுடன் ரமேஷ் said...
நல்ல முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்//

நன்றி பிரியமுடன் ரமேஷ்

aru(su)vai-raj said...

நல்லா இருக்கு வெற்றி பெற வாழ்த்துகள்

Unknown said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா ..

க ரா said...

நல்லா இருக்கு சார்

R. Gopi said...

நல்லா இருக்கு கதை. அப்ப எனக்குப் பரிசு கிடைக்காதா?:(

T.V.ராதாகிருஷ்ணன் said...

// aru(su)vai-raj said...
நல்லா இருக்கு வெற்றி பெற வாழ்த்துகள்//

நன்றி aru(su)vai-raj

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா ..//

நன்றி செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராமசாமி கண்ணண் said...
நல்லா இருக்கு சார்//

நன்றி இராமசாமி கண்ணண்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Gopi Ramamoorthy said...
நல்லா இருக்கு கதை. அப்ப எனக்குப் பரிசு கிடைக்காதா?:(//

:))

Chitra said...

கதை ரொம்ப நல்லா இருக்குதுங்க. கலக்கல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

for followup

Madhavan Srinivasagopalan said...

Good.... nice story.

என்னோட கதையை படிச்சிட்டு கமெண்டு போடுங்க.. இன்ட்லில ஒட்டு போடுங்க..
நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Madhavan said...
Good.... nice story.

என்னோட கதையை படிச்சிட்டு கமெண்டு போடுங்க.. இன்ட்லில ஒட்டு போடுங்க..//

நன்றி
Madhavan


நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது. ரொம்ப நல்லாருக்கு டிவிஆர் சார். வெற்றிபெற வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Starjan

Radhakrishnan said...

பரபரப்பாக இருந்தது. வாழ்த்துகள் ஐயா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Abhi

T.V.ராதாகிருஷ்ணன் said...

//V.Radhakrishnan said...
பரபரப்பாக இருந்தது. வாழ்த்துகள் ஐயா.//

நன்றி V.Radhakrishnan