Friday, October 29, 2010

எந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா?

எந்திரன் திரைப்படக் கதை தன்னுடையது என 'அமுதா'தமிழ் நாடன் என்னும் எழுத்தாளர் உரிமை கொண்டாடுகிறார்.இவர் உதயம் என்னும் தமிழ் பத்திரிகையில் ஏப்ரல் மாதம் 1996ஆம் ஆண்டு எழுதிய ஜுகிபா என்னும் கதையே எந்திரன் கதை என்கிறார்.
(www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/october/291010c.asp)


இதை பைத்தியக்காரன் bazz ல் போட்டப்போது அதில் யுவகிருஷ்ணா இப்படி ஒரு பதிலைப் போடுகிறார்.

யுவ கிருஷ்ணா - எந்திரன் படத்தின் பாதி கதையின் கரு இதுதான்.

அப்படியானால் சுட்டது யார்?

ஷங்கரா - சுஜாதாவா

இது தேவையில்லை என்பதே என் கருத்து.
எந்திரன் படத்தின் கதை பல ஆண்டுகளாக தன் மனதில் இருந்தது என ஷங்கர் முன்னமேயே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எந்திரன் படத்தில் வசனம் மட்டுமே சுஜாதா..அதுவும் மூவரில் ஒருவர். ரோபோ பற்றிய சில நுணுக்கங்களைத் தெரிந்துக் கொள்ள சுஜாதா பயன்பட்டிருப்பார் ..அவரின் பங்களிப்பு அதற்கு மேல் அப்படத்தில் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது.
இந்நிலையில் இன்று நம்மிடையே இல்லாத ஒரு ஜீனியஸ்ஸை இழுத்திருக்க வேண்டாம்.
சுஜாதா தொடாத சப்ஜெக்ட் இல்லை..இன்று எந்த எழுத்தாளரிடமும்..அவர் பாதிப்பு இருப்பதை மறைக்கமுடிவதில்லை.
தவிர்த்து..சுஜாதாவின் சில படைப்புகளை..ஆங்கிலக் கதைகள் சாயல் இருப்பதாகக் கூறுவர் உண்டு.
சாயல் இருக்கும்..ஏதேனும் பாதிப்பு இருக்கும்..ஆனால் அவரிடம் 'காபி' இருக்காது.
ஆகவே, நண்பர்களே! எந்திரன் சர்ச்சையில்..அவர் பெயரை இழுக்க வேண்டாம்

12 comments:

goma said...

சுட்டது யாரோ ,எடுத்தது யாரோ,...எழுதியது யாரோ,
ஃபர்ஸ்ட் கம்ஸ் ஃபர்ஸ்ட் தான் பாலிசி..

Chitra said...

சொல்றேனே என்று தப்பா எடுத்துக்காதீங்க..... இருக்கிறதிலேயே எந்திரன் படத்தையும் ரஜினியையும் பிடிக்காத நீங்கள் தான், அதை பற்றி நிறைய பதிவுகள் போட்டு இருக்கீங்க...... உங்களின் திருக்குறள் விளக்கங்கள் போன்ற பதிவுகளை ரசித்து வாசிக்கிறேன். ம்ம்ம்ம்.....

மர்மயோகி said...

ஒரு படம் பிரபலம் ஆனாலோ அல்லது பிரபலமாக்குவதற்கோ இது மாதிரி நிறைய பேர் கிளம்புவார்கள்..
www.maramayogie.blogspot.com
பாருங்களேன்..

vasu balaji said...

ஆர்னிகா நாசரை விட்டுட்டீங்களே:)). கருவாவது மண்ணாங்கட்டியாவது. 1979னு நினைக்கிறேன் அல்லது 1980. Demon's Seed. சத்யம் த்யேட்டர்ல பார்த்தது. முதல் நாள். முதல் ஷோ. பால்கனில 4 பேருதான். லின்க் தேடுறேன். அதுதான் ஒரிஜினல். :)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
சொல்றேனே என்று தப்பா எடுத்துக்காதீங்க..... இருக்கிறதிலேயே எந்திரன் படத்தையும் ரஜினியையும் பிடிக்காத நீங்கள் தான், அதை பற்றி நிறைய பதிவுகள் போட்டு இருக்கீங்க...... உங்களின் திருக்குறள் விளக்கங்கள் போன்ற பதிவுகளை ரசித்து வாசிக்கிறேன். ம்ம்ம்ம்.....//
அன்பின் சித்ரா
வணக்கம்
ரஜினியை பிடிக்காது என நான் எங்கும் சொன்னதில்லை.இன்னும் சொல்லப் போனால் அவர் படங்கள் எதையும் நான் மிஸ் செய்ததில்லை.
அதனால்..அவரின் பிடிக்காத செயல்களை சொல்லக்கூடாது என்பதில்லையே.
உண்மையில் ரஜினியின் 60ஆம் பிறந்த நாள் குறித்து நான் இட்ட ட்டுகையை வேறு யாரும் இடவில்லை.
எப்படியோ..தங்கள் வெள்ளந்தி மனம் பிடித்துள்ளது.இனி எந்திரன் பற்றி (கவனிக்கவும்..ரஜினி பற்றி அல்ல) எழுதவில்லை.
http://tvrk.blogspot.com/2009/12/60.html


மற்றபடி வருகைக்கு நன்றி

அன்புடன்

TVR

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மர்மயோகி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்,தகவலுக்கும் நன்றி பாலா

போளூர் தயாநிதி said...

vazhthugal
polurdhayanithi

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சுஜாதாவை ஏன் திருவுருவாக்குகிறீர்கள் என்பதுதான் புரியவேயில்லை :(

கேளிக்கையை மட்டுமே பிரதானமாய் முன்னிறுத்திய ஒரு எழுத்தாளர் சுஜாதா.

Subha said...

@ஜ்யோவ்ராம் சுந்தர்
So what?