Thursday, July 31, 2008

ஒரு NRI க்கு அன்னையின் கடிதம்

அமெரிக்காவில் மேல் படிப்புக்கு சென்று ...அங்கேயே வேலையும் கிடைத்து தங்கியிருக்கும் தன் மகன்/மகளுக்கு
ஒரு அன்னையின் கடிதம்.

அன்பு மகனுக்கு/மகளுக்கு
அம்மா அனேக ஆசிர்வாதத்துடன் எழுதிக்கொண்டது
இந்த காலத்துக் குழந்தையான உனக்கு அம்மா நான் சொல்லித் தெரிய வேண்டியது எதுவுமில்லை.உன் வயதில்
எங்களுக்கு தெரிந்த விஷயங்களை விட அதிகமாக உனக்கு இன்று தெரியும்.நாற்பது,ஐம்பது மதிப்பெண்கள்
பெற்று பள்ளிப்படிப்பில் கற்று தேறியவர்கள் நாங்கள்.ஆனால் இப்போதோகீழே போடப்படும் மதிப்பெண்களைவிட
மேேல் போடப்படும்மதிப்பெண்கள் அதிகரித்து விடுமோ(120/100)என்ற அளவில் படித்துத்தேறி ...ஓய்வு பெறும்
வயதில் கூட எட்டமுடியாத உன் அப்பாவின் சம்பளத்தை ஆரம்ப நிலையிலேயே 'சூப்பர்சீட்' பண்ணியவன் நீ.

கம்ப்யூட்டர் துறையில் உலக நாடுகளுடன் போட்டியிட...இல்லை...இல்லை...அந்த துறைக்கே சவால் விடும் அளவுக்கு அறிவை பெற்றவர்கள் இந்தியர்கள். ஆனால் உங்களை ஒரு இஞ்சினீயராகவோ,மென் பொருள் துறை
வல்லுனராகவோ உருவாக்க இந்திய அரசும் ஒரு கணிசமான தொகையை உங்களை நம்பி முதலீடு செய்கிறது அல்லவா?

கற்றுத்தேர்ந்ததும் உங்கள் செயல்திறனை இங்கே முதலீடு செய்ய வேண்டும்.உங்கள் கண்டுபிடிப்புகள் இங்குதான்
ஆரம்பிக்க வேண்டும்.ஆனாலும் பல காரணங்களுக்காக உன்னைப்போன்றோர் மேல் நாடுகளுக்கு படிக்க செல்கிறிர்கள்.அங்கேயே வேலைக்கும் சேர்கிறீர்கள்.
அப்படிப்பட்ட நிலை இன்று தவிர்க்கப்பட முடியாத ஒன்று.ஆனால் உங்களுக்கு படிப்பை தந்த நாட்டிற்கு உங்களால்
அந்நியச்செலவாணியை ஈட்டித்தரமுடியும்.ஆதலால் உங்கள் முதலீடுகள் இங்கேயே இருக்கட்டும்.உங்களைப்போன்றோரால்... இன்று இந்தியரை உலகளவில் மதிக்கின்றனர்.
இயற்கை சீற்றங்களான புயல்,மழை,சுனாமி வரும் நேரங்களில்...பாதிக்கப்பட்டவர்களுக்கு... கணிசமான நன்கொடைகளை நீங்கள்தான் தந்து இருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று.
கடைசியில் தாய் என்ற முறையில் உன் போன்றவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன்.
உங்களுக்கு சரியான உடலுழைப்பு இல்லை.ரத்தக்கொதிப்பு,சர்க்கரை என சிறு வயதிலேயே அவதிப்படுகிறீர்கள்.
இனியேனும் தினம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய்யுங்கள்.சரியான உணவை உட்கொள்ளுங்கள்.
உணவு பொருட்களை வாங்கும்போதே அதில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு இருக்கிறது,சோடியம் இருக்கிரது,கால்ஷியம் இருக்கிறது என பார்த்து பார்த்து வாங்காதீர்கள்.சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதமுடியும்.
இது நீங்கள் சாப்பிட வேண்டிய வயது.கல்லைத்தின்றாலும் ஜீரணம் ஆக வேண்டிய வயது.நீங்கள் சாப்பிடுவது
போதவே போதாது.அதுதான் என்னைப் போன்ற தாய் களின் ஏக்கம்.
உங்களுக்கெல்லாம் எங்களைவிடத்தெரியும் என்பது உண்மைதான்..ஆனால் அது உணவு விஷயத்தில் அல்ல என்ற எண்ணமே இந்த கடிதம்.

அன்பு அம்மா.

உண்மையான பாரதரத்னா யார் தெரியுமா?

பாரதரத்னா பற்றி இந்த ஆண்டு அதிகம் பேச்சு இருந்தது.

ஒரு நடிகன் தன் நடிப்பு தொழிலை செய்ய ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் .அதிலே ஒரு பகுதி கறுப்புப்பணம் .ஆனாலும் அவங்களுக்கு பத்மஸ்ரீ பத்மபூஷன் போன்ற நேஷனல் விருது.
ஒரு விளையாட்டு வீரர் தன் விளையாட்டு மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார் .அதைத்தவிர
விளம்பரங்களிலே நடிச்சு ப்பணம் .அவங்களுக்கும் பத்மஸ்ரீ ,பத்மபூஷன் போல விருது கொடுக்கப்படுகிறது.ஆனால் ஆசிரியர் தொழிலில் உள்ளவங்களுக்கு ஏன் இது போல விருது கொடுப்பதில்லை?
இந்த சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு .பாரதரத்னா ...
அது நம் நாட்டின் உன்னத உயரிய தேசிய விருது .அது இதுவரைக்கும் எத்தனைப்பேருக்கு கொடுத்திருக்காங்க?
எம் எஸ் .,காமராஜ் ,சி எஸ் .,டாக்டர் அம்பேத்கர் .,எம் ஜி ஆர் .,அப்துல் கலாம் போல சில அவுட் ஸ்டாண்டிங் பெர்சொனாளிட்டிகளுக்கு மட்டும் தான் .
ஆசிரியர்கள் லே இப்படி அவுட் ஸ்டாண்டிங் பெர்சொனளிட்டி ன்னு யாரை சொல்ல முடியும்? எல்லோருமே அவுட் ஸ்டாண்டிங் தான்.
இந்த ஆசிரியர்கள் உருவாக்கும் விஞ்ஞானிகள் எத்த்தனைப்பேர் .,சாபிட் வேர் என்ஜீநீர்கள் எத்தனைப்பேர் ஐ எ இஸ் .,ஐ பி எஸ் அதிகாரிகள் எத்தனைப்பேர் .,
இப்படி அனைவரையும் உருவாக்கும் ஆசிரியர் களில் யாரை பாகுப்பாடு படுத்தி இவர் உயர்ந்தவர்,இவர் தாழ்ந்தவர்னு சொல்லமுடியும்?
ஆசிரியர்கள் அனைவரும் பாரதரத்னா க்கள் தான் .
அதனால்தான் அது போன்ற நேசனல் விருதுகள் அவர்களுக்கு வழங்க ப்படுவதில்லை என நினைக்கிறேன் .

Wednesday, July 30, 2008

கன்னட திரைப்பட வர்த்தகசபைக்கு ரஜினி பக்தன் ஒருவன் கடிதம்

செயலாளர் அவர்களுக்கு,
ரஜினிகாந்த் ரசிகன் என்ற முறையில் இந்த வேண்டுகோள் கடிதம்.எனக்கு கன்னடம் தெரியாததால் தமிழில் எழுதுகிறேன்.
ரஜினி அவர்கள் ஒகேனக்கல் விவகாரத்தில் ..உதைக்க வேண்டாமா..என்று பேசியதெல்லாம் 'ஒளவாக்கட்டைக்கு"
தண்ணீருக்கு அழும் தமிழனுக்கு..வேடிக்கைக்காட்டி அவன் அழுகையை நிறுத்துவதற்கு.அதனால் அவரை தவறாக எண்ணக்கூடாது.
அவர் முன்னதாக..அம்மாவுக்கு(!!)ஓட்டுப் போட்டால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..என்று
கூறிவிட்டு..அடுத்த தேர்தலில் அம்மாவுக்கு ஓட்டுப்போட்டுவிட்டு..தன் இரு விரல்களை உயர்த்திக் காட்டியவர்.
காவேரி பிரச்னையில் சக திரைப்படத் துறையுடனருடன் சேராது தனியாக உண்ணாவிரதம் இருந்து தனது ஆதரவை(!)தெரிவித்ததோடு
அதற்கு ஒரு கோடி நன்கொடை தருவதாக தெரிவித்தவர்.
சிவாஜி படத்தில்..தான் அமெரிக்காவில் சம்பாதித்து கொணர்ந்த 200 கோடியை படிப்புக்கு செலவழிக்க..பொறியியல் கல்லூரியும்,மருத்துவக்கல்லூரியும்
கட்டுவதாகக்கூறியவர்..அவர் சம்பந்தப்பட்ட (மனைவியின்)பள்ளியில் இலவசமாக மாணவர்களை செர்த்துக்கொள்ளாதவர்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..அவர் சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..அதனால் அவர் அன்று 'உதைக்கலாம்"என்று பேசியதற்கு
எதிர்மறையான அர்த்ததை கன்னடர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.உங்களுக்கு இப்போது அவர் இயல்பு தெரிந்திருக்கும்.
எப்பாடுபட்டாவது குசேலன் படம் அங்கு வெளியாகவேண்டும் என்ற அவர் நல்ல எண்ணத்தை புரிந்துக் கொண்டு ஆதரவு தாருங்கள்.
இந்த வேளையில்..தமிழனான எங்களைப் பாருங்கள்..150,200 என்றெல்லாம் பட்ஜெட்டை மீறி செலவு பண்ணி படம்
பார்க்கவும்..அவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவும் தயாராகிவருகிறோம்.
தயவு செய்து..எங்கள் சூப்பர் ஸ்டாரின் இயல்பை புரிந்துக் கொள்ளுங்கள்.
நன்றி
இப்படிக்கு
அப்பாவி தமிழ் ரசிகன்

Tuesday, July 29, 2008

வாய் விட்டு சிரியுங்க.

1.எங்க வீட்ல எலி உபத்திரவம் அதிகம்..உங்க வீட்லே?
என் மனைவி உபத்திரவம் அதிகம்.

2.தந்தை(மகனிடம்)உங்க டீச்சர் என்னை மக்குன்னு சொன்னாங்களா? எப்போ?
மகன்- நேற்று நீ செஞ்சுக்கொடுத்த ஹோம் ஒர்க்கை பார்த்து 'மக்கு'எப்படி
செஞ்சிருக்குப் பாருன்னாங்க.

3.டாக்டர்..என் கனவுல ஒரே ஃபிகருங்களா வருது..
கொடுத்து வச்சவர் நீங்க
ஐயோ..நான் சொல்ற ஃபிகருங்க எண்கள்..கணக்கு வாத்தியார் நான்

4.உங்க வீட்ல அவர் சமையலா?
அவன்(ovan) சமையல்

5.கார்த்தால என் மாமனார்..காய் நறுக்குவார்,துணி துவைப்பார்,கோலம் போடுவார்
உனக்கு இவ்வளவு உதவி செய்வாரா?
அவர் பையனுக்கு உதவியா இருப்பார்.

6.மனைவி(கணவனிடம்)அழகான மனைவி கணவனுக்கு எதிரி..தெரியுமா?
கணவன்-அப்போ..நீ எனக்கு எதிரி இல்லைன்னு சொல்றியா?

Sunday, July 27, 2008

வாய் விட்டு சிரியுங்க - 26

1.மனைவி-(கணவனிடம்)நீங்க புத்திசாலின்னு எப்படி சொல்றீங்க?
கணவன்-முட்டாள்களுக்குத்தான் அழகான மனைவி கிடைக்கும்னு சொல்றாங்களே

2.ரௌடித்தனம் பன்ணி பணம் பறிச்சுக்கிட்டிருந்த கேடி கபாலிக்கு..அதே மாதிரி வேலை கிடைச்சுடுத்தாமே
ஆமாம்..கான்ஸ்டபிள் வேலை கிடைச்சுருக்காம்

3.டாக்டர்-உங்க வயிற்றிலே எப்படி தீக்காயம் ஏற்பட்டது
நோயாளி-+2 பரிட்சை எழுதி இருந்த என் பையன் நல்ல மதிப்பெண் வாங்கணும்னு இத்தனை நாள் வயிற்றிலே
நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தேன்

4.டாக்டர்- உங்க வீட்டு பிரஷர் குக்கர்க்கெல்லாம் வந்து பிரஷர் செக் பண்ணமுடியாது

5.டாக்டர்-(நோயாளி பெண்ணிடம்)நீங்க இனிமே கஷ்டமான வேலை எல்லம் செய்யக்கூடாது
பெண்- ஐயோ..டாக்டர்..இனிமே கஷ்டப்பட்டு எங்க மாமியார் மேல குற்றம் கண்டுபிடிக்க முடியாதா?

6.பெண்ணின் தந்தை-(பெண் பார்க்க வந்தவரிடம்)-என் பொண்ணு தமிழும்..ஆங்கிலமும் கலந்து கொஞ்சற மாதிரி பேசுவாள்
வந்தவர்-ஓஹோ..தமிழ் சேனல்ல காம்பியரிங்க் பண்றாள்னு சொல்லுங்க

Saturday, July 26, 2008

கேள்வியும் நானே..பதிலும் நானே..

(தமிழ் பத்திரிகைகளில் கேள்வி-பதில் பகுதி..வலைப்பூவில் இப்போது டோண்டு சாரின் கேள்வி பதில்.
நாமும் அப்படி ஒரு பதிவு போட்டால் என்ன? என்ற ஆசை.ஆனால் நம்மை யாரும் கேள்விகள் கேட்கப்போவதில்லை.
அதனால்தான் கேள்வியும் நானே- பதிலும் நானே என்ற இப்பதிவு.)
1.இன்னிக்கு செத்தால் Naalaikkup Paal இது பற்றி...?
நீங்கள் சொல்வது அந்தக்காலம். இப்போதெல்லாம் எரிவாயு சுடுகாடானால் இன்னிக்கு செத்தா..இன்னிக்கே பால்.

2.சிலர் தானே கேள்விகள் கேட்டு..தானே பதில் சொல்வது பற்றி?
அது பற்றி எனக்குத்தெரியாது.ஆனால் என்னிடம் நிறைய பதில்கள் இருக்கிறது.அதற்கான கேள்விகள் தான் யாரும் கேட்கமாட்டார்களா என்ற ஆசை.

3.பத்திரிகைகளில் வரும் ராசிபலனை நம்புவது உண்டா?
நம்பிக்கை இல்லை.அது உண்மையெனில் நாட்டில் 12ல் ஒருவருக்கு பலன்கள் ஒன்றாக இருக்கும்.வாகனம் வாங்கு
வீர்கள் என ஒரு ராசிக்கு பலன் சொன்னால்..நாட்டில் 100கோடியில் கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் அன்று வாகனங்கள் வாங்கினால் என்னாவது.
(ஒரு உபரி செய்தி- கண்ணதாசன் தன் பெயரில் ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்.அதில் ராசிபலன் போடுவதுண்டு.ஒரு மாதம் உரிய நேரத்தில் ஜோதிடர் அனுப்பவில்லையாம்.பத்திரிகையோ அச்சுக்கு போக
வேண்டிய நேரம்.பார்த்தார் கண்ணதாசன்..பழைய நாலு இதழ்களை கொண்டு வரச்சொன்னார். அவற்றில் வந்திருந்த
பலன்களை ராசிகளுக்கு மாற்றி மாற்றி போட்டு பத்திரிகையை அச்சுக்கு அனுப்பினாராம்.)

4.உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்களே வருவதில்லையே..ஏன்?
சினிமா நடிக,நடிகை களுக்கு மட்டுமல்ல..இணைய பதிவாளர்களுக்கும் ரசிகர்களோ அல்லது அவர்களை தெரிந்துவைத்துள்ள மற்றைய பதிவாளர்கள் ஆதரவோ வேண்டும்.அதுஇல்லாவிட்டால் சிறந்த குணசித்திர நடிகராக இருந்தும் புகழ் பெறாத s.v.சுப்பையா கதிதான் நமக்கும்.

5.இப்பொழுதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா தமிழ் படங்களும் 100 நாட்கள் ஓடுவது போல இருக்கிறதே?
சென்னையில் கோபிகிருஷ்ணா என்று ஒரு தியேட்டர்.100days ஓடும் படங்கள் அதிகம் இங்கு தான் ஓடுகின்றன.அதுவும் 3ஆவதோ4ஆவதோ ரன்..அதுவும் தினசரி ஒருகாட்சி.

வாழ்வில் வெற்றி பெற 10 கட்டளைகள்

சுறு சுறு ப்பாய் இரு ..ஆனால் படபடப் பாய் இராதே
பொறுமையாய் இரு ...ஆனால் சோம்பலாய் இராதே
சிக்கனமாய் இரு... ஆனால் கருமியாய் இராதே
அன்பாய் இரு ...ஆனால் அடிமையாய் இராதே
இரக்கமாய் இரு... ஆனால் ஏமாந்து விடாதே
கொடையாளியாய் இரு... ஆனால் ஓட்டாண்டியாய் இராதே
வீரனாய் இரு... ஆனால் போக்கிரியாய் இராதே
இல்லறத்தானாய் இரு ஆனால் காமவெறி யனாய் இராதே
பற்றற்று இரு ஆனால் காட்டுக்குப் போய் விடாதே
நல்லோ ரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே
இந்த பத்துக் கட்டளைகள்
வாழ்வை சீராக்கும்.

Friday, July 25, 2008

குருவி படத்துக்கு நானும் ஒரு ஜோக்

சுற்றுச்சூழல் ஆர்வலர்-உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்..நகரிலிருந்து
குருவி எல்லாம் எங்கே போச்சு..
விஜய்- என் படம் வந்ததும்..அந்த கோபத்தில் அவர்கள் தாக்கப்படுவார்களோ என
பயந்து நகரத்தை விட்டு புலம் பெயர்ந்து விட்டன.

இருந்தால் நன்றாயிருக்கும் (அறிவியல் போட்டிக்கான கதை)

தன் பழைய மாணவன் வந்து சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பேராசிரியர் அனுமந்த ராவ்.
கிருஷ்ணகுமார்..அவரிடம் படித்த மாணவன்.புத்திசாலி.அதனால்தான் பல ஆண்டுகள் ஆகியும் அவன் அவர்
ஞாபகத்தில் இருந்தான்.அவன் முதுநிலை படிப்பு படித்து முடிந்ததுமே..ஏதேனும் ஒரு தலைப்பில் ஆராய்ச்சி
செய்து..டாக்டர் பட்டம் வாங்க்கச் சொன்னார்.ஆனால்..அன்று அவன் மறுத்து விட்டான்.ஆனால் ஏழெட்டு
ஆண்டுகள் கழிந்து அவனே வலிய வந்து கேட்கிறான் என்றால்...அதுக்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
அவன் ஆராய்ச்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு..'கடவுள் இருக்கிறாரா..இல்லையா'
'குமார்..இப்படிப்பட்ட தலைப்பை பல்கலைக்கழகம் அங்கீரித்து இருக்க வேண்டும்.நான் கேட்டுப் பார்க்கின்றேன்.
பிறகு நீ உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்'
ஒரு நிமிடம்..யோசித்தவன்'சார்,இந்த தலைப்பில்..ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றாலும்..நான்
ஆராய்ச்சி செய்யத்தான் போறேன்..என்றான் பிடிவாதமாக.
'சரி..உன் ஆசையைக் கெடுப்பானேன்..நீ முயற்சி செய்..ஆனால் பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடம் இருந்து வரும்
நம்பிக்கை கடவுள் பக்தி.எந்த ஒரு காரியத்திற்கும்..அது முதல் நம்பிக்கை ஆகும்'
'இல்லை சார்..நீங்கள் சொல்லும் அந்த நூற்றாண்டுகளில்..அதைப்பற்றி அபிப்ராயபேதங்களும்..இருந்திருக்கின்றன'
'குமார்..எனக்குத் தெரிந்தவரை..சிவன் பெரியதா..சக்தி பெரியதா..சைவம் பெரியதா..வைஷ்ணவம் பெரியதா..இப்படித்தான்
அபிப்பிராய பேதங்கள் இருந்திருக்கின்றன.நீ சொல்லும்..அந்த அடிப்படையிலேயே மறுப்பு சென்ற நூற்றாண்டில்தான்
ஏற்பட்டிருக்கிறது என நினைக்கின்றேன்'
'சார்..இது சம்பந்தமாக அனேக புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்.கடவுளை மறுத்த பெரியாரின்
சிந்தனைகளையும் படித்து வருகின்றேன்..நாயன்மார்கள்..ஆழ்வார்கள் சொன்னதை படிக்கிறேன்..'
பேச்சை..திசைதிருப்ப எண்ணிய பேராசிரியர்'சரி..இப்போ உன்னைப் பற்றி சொல்.உனக்கு திருமணமாகிவிட்டதா,
குழந்தைகள் உண்டா?'
'சார்..எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஓடி விட்டன.இது நாள் வரை குழந்தைகள் இல்லை..இப்போதுதான் என் மனைவி
7 மாத கர்ப்பம்'என்றான்.
'பாராட்டுகள்' என்றார் பேராசிரியர்.
'ஏன் சார்..நீங்கள் சொல்லும் கடவுள் இருந்திருந்தால்..அந்த ராமர் கடவுள்தானே..அவர் ஏன் சிவ பக்தனான ராவணனை
அழிக்க வேண்டும்.சிவ பக்தனான ராவணனுக்கு சிவன் ஏன் முதலிலேயே அறிவுறித்தி பிறன் மனை விழையாமையை
உணர்த்தி..அவனை சீதை மேல் ஆசை வராமல் தடுத்திருக்கலாமே'
'அது இதிகாசம்..மேலும்..ராமர்..சீதை இவர்கள் பூமியில் அவதரித்ததுமே மனிதர்கள்.இறைவன் இல்லை'
'சரி அது போகட்டும்.தன் மாமன் கம்சனைக்கொல்ல ..கிருஷ்ணன் அவதரித்தான்..பின் அவனே பாண்டவர்களுடன்
சேர்ந்து கௌரவர்களை அழித்தான்..திரௌபதியை துகில் உரித்தபோது உடன் காப்பாற்றவரவில்லை.நீ என்னை முற்றிலும்
நம்பாமல் கைகளால் மறைத்திக்கொண்டிருந்தாய்.எப்போது என்னை நம்பி..கைகளை உயர்த்தினாயோ அப்போது உதவிக்கு வந்தேன்
என்பது..நீங்கள் சொல்லும் அந்த கடவுள் ஒரு sadist என்று ஆகவில்லையா?'
'கடவுளை முழுவதுமாக நம்ப வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது'
ஏன் சார்..தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்..என்பதற்காக திரௌபதி அப்படி
செய்திருக்கலாம்..இல்லையா?'
பேராசிரியர் இதற்கு பதில் கூற வாயைத்திறந்த போது ..குமாரின் அலைபேசி ஒலித்தது.
அதை இயக்கினான் குமார்'என்ன..அப்படியா?..இப்போதே வருகிறேன்' என்றவன்..'சார் என் மனைவிக்கு திடீரென உடல்னலம்
சரியில்லை..அவள் வயிற்றில் கரு அசையவே இல்லையாம்..உடன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.பிறகு சந்திக்கிறேன்'என
விரைந்தான்.
பேராசிரியர் தலை ஆட்டினார்.
**** **** **** ****
இரண்டு..மூன்று மாதங்கள் ஓடி விட்டன
திரும்ப ..ஒரு நாள் கிருஷ்ணகுமார் அவரைப் பார்க்க வந்தான்.தன் ஆராய்ச்சித் தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என
அறிந்துக்கொள்ள.
'அது இருக்கட்டும்..உன் மனைவி எப்படி இருக்கிறாள்?குழந்தை பிறந்து விட்டதா?'
'அந்த ஆச்சர்யத்தை ஏன் கேட்கிறீர்கள்?உங்களிடம் வந்த அன்று அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்.
வயிற்றில் இருந்த சிசுவிற்கு மூச்சே இல்லை.மருத்துவர்கள் இறந்துவிட்டது என்றனர்.ஆனாலும் ஒரிரு நாட்கள் பார்க்கலாம் என்றனர்
மருத்துவர்கள்.அழுதபடியே வீட்டிற்கு வந்தவள்..இளையராஜாவின் திருவாசகத்தை வி.சி.டி.யில் ஓட விட்டாள்.அது ஒலிக்க..ஒலிக்க..
சிசு அசையத்தொடங்கியது.மருத்துவருக்கு விஷயத்தைச் சொல்ல..ஆச்சர்யப்பட்ட அவர்..தினமும் என் மனைவியை அதைக்
கேட்கச் சொன்னார்.போன வாரம் சுகப்பிரசவம்.பையன்'என்றான் உற்சாகத்துடன்.
ஆச்சரியம் அடைந்தார்..பேராசிரியர்..'ஏம்ப்பா இது எதனால் என்று நினைக்கிறாய்?''இது கடவுளின் அருள் என்று உனக்குத்
தோன்றவில்லையா?கடவுள் காப்பாத்திட்டாரு'என்றார்.
'அப்போ அதற்கு முன்னால்..அந்த சிசுவிற்கு..அந்த நிலை ஏற்பட்டது யாராலே?'பதில் கேள்விக் கேட்டான்.
'குமார்..பிரபஞ்சம் தான் கடவுள்.நேற்று அறியாததை இன்று அறியலாம்.இன்று அறியாததை நாளை அறியலாம்.
ஆனால்..எப்போதுமே அறிய முடியாதது ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்..அது பிரபஞ்ச ரகசியம்.புரிந்துக் கொள்'
என்றார்.சற்றே குழம்பியவன்..'சரி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..இறைவன் என்று ஒருவன் தானே இருக்க
முடியும்..நீங்கள் பல கடவுள்களை சொல்கிறீர்களே?'
'குமார்..நீ..ஒருவன்..ஆனால் உன் பேற்றோருக்கு நீ மகன்..மனைவிக்கு கணவன்..தம்பிக்கு அண்ணன்..அண்ணனுக்கு
தம்பி..இப்படி இருக்கும்போது..அந்த கடவுள் பலருக்கு பல பெயரில் இருப்பது என்ன தப்பு'
சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல்..யோசித்தான் அவன்.
அதை பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர்'இப்ப நீ கடவுள் இருக்கிறதை நம்புகிறாய் இல்லையா'என்றார்.
'இருந்தால்..நன்றாயிருக்கும்'என்றான்.

Thursday, July 24, 2008

பத்தை விட ஒன்பது பெரியது என்கிறார் சுப்பு தாத்தா

நவராத்தியையும்,தசாவதாரத்தையும் அடுத்து அடுத்து சமீபத்தில் பார்த்தாராம் சுப்பு தாத்தா.
அவர் கூறிய கருத்துக்கள்.
சமீபத்தில் 1964ல் வந்த சிவாஜியின் 100வது படம் நவராத்திரி.இதில் ஒன்பது மாறுபட்ட வேடங்க்களில்
சிவாஜி நடித்திருக்கிறார்.ஒரே வேடத்தில் நடித்திருந்தாலும் சாவித்திரி 9 மாறுபட்ட உணர்ச்சிகளை
வெளிப்படுத்தி சிவாஜிக்கு இணையாக நடித்திருப்பார்.சிவாஜி..கதாநாயகனாகவும்,அற்புதராஜ் என்ற
மனைவியை இழந்து ஒரு குழந்தையுடன் வசித்துவருபவராகவும்,குடிகாரனாகவும்,வயதான மனநல
மருத்துவராகவும்,கொலைகாரனாகவும்,கிராமத்து அப்பாவியாகவும்,குஷ்டரோகியாகவும்,கூத்துக்கலைஞனாகவும்,
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாகவும் வருவார்.எந்த வெளிநாட்டு மேக்கப்காரனையும் நம்பாமல்..சாதாரண மேக்கப்புடன்
ஒவ்வொரு பாத்திரத்திலும் வந்து நடிப்பில் நவரசத்தையும் கொட்டி வேறுபாடுகளைக் காட்டி இருப்பார்.

ஆனால்..தசாவதாரமோ..நடிப்பைவிட ஒப்பனைக்கு முக்கியத்துவம் கொ டுக்கப்பட்டிருந்தது.சில பாத்திரங்கள்
ஒப்பனை..சப்பாத்திமாவை ஒட்ட வைத்ததுபோல இருந்தது. கஷ்டப்பட்டு மணிக்கணக்கில் ஒவ்வொரு பாத்திர மேக்கப்பும்
போடப்பட்டதாம்(?!)கமல் என்பதற்காக ஒப்புக்கு ஓகோ என பாராட்டுபவர்களை கமல் நம்பக்கூடாது.மனதைத்
தொட்டு அவர் தனியாக அமர்ந்து..தனிப்பட்ட சாதனை இதில் என்ன என்று யோசிக்கவேண்டும்.
சாவித்திரி ஒன்பது இரவுகளும் நடிப்போடு ஓடிக்கொண்டிருந்தார்..ஆனால் அசின்.. எதற்கு வீணாக
மலையையும், மடுவையும் ஒப்பிட வேண்டும்.
மொத்தத்தில்..நவராத்திரியின் அருகில் கூட தசாவதாரம் வர முடியாது.திரைக்கதையில் வேறு பல ஓட்டைகள்தசாவதாரத்தில்.
ஆகவே என்னைப் பொறுத்தவரை 10ஐ விட 9 பெரியது என்றார் சுப்பு தாத்தா.
எச்சுமிபாட்டியோ தன் பங்குக்கு சிவாஜி நவராத்திரியில் டாக்டராக வருவாரே..அந்த பாத்திரமும்..சாவித்திரியின்
பைத்திய நடிப்பையும் லேசில் மறக்க முடியுமா?என்றார்.

Wednesday, July 23, 2008

வாய் விட்டு சிரியுங்க - 25

நீ இன்னிக்கு அழகாய் இருக்கேன்னு சொன்னதுக்கு உன் மனைவி ஏன் சண்டை போட்டாள்?
அப்போ நேற்று வரைக்கும் அசிங்கமாய் இருந்தேனான்னு..

2.எங்க வீட்ல என் மனைவி வேலைக்காரியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா..உங்க வீட்ல..
வேலைக்காரி மனைவியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா

3.அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற
ஷூகர் டெஸ்ட் பண்ணனும்னா ஒரு கிலோ ஷூகருக்கு 20ரூபாய் ஆகும்னு சொல்றார்

4.எங்க ஹாஸ்பிடல்ல இன் பேஷண்ட்டே கிடையாது
எப்படி
அவங்க தான் அட்மிட் ஆனதுமே அவுட்பேஷண்ட் ஆயிடறாங்களே

5.போலீஸ்காரங்க எல்லாம் வலையை எடுத்துக்கிட்டு எங்கே போறாங்க..
குற்றவாளியை வலைவீசி தேடத்தான்

6.உன்னோட புடவை இப்ப எல்லாம் இவ்வளவு வெளுக்கிறதே சோப்பை மாத்திட்டியா?
என் கணவரை மாத்திட்டேன்

Monday, July 21, 2008

கலைஞர் எந்த பேரனைச் சொன்னார்

பேரன்களை வாழ்த்துவதே ஆபத்து என்று கலைஞர் பேசியுள்ளார்.அவரது பேரனும்..மு.க.முத்துவின் மகனுமானவனைப்
பற்றி பேசும்போது அவர் இதைக் கூறியுள்ளார்.ஆனால் அவர் யாரை மனசில் வைத்து அப்படிக் கூறினார் என்பது
அனைவருக்கும் தெரிந்ததே.அவர் மனசில் இருந்த பேரன்களின் தந்தை முரசொலி மாறன் கடைசி வரை
கலைஞரின் வலது கையாக செயல் பட்டவர்.அவர் ஒரு கூட்டத்தில் பேசும்போது தி.மு.க.மந்திரிகளை
வாங்கு..வாங்கு..என வாங்கினார்.கலைஞர் கண்டுக்கொள்ளவில்லை.ஆனால் மாறனின் மகன்களோ கலைஞரின்
மகன் அழகிரிக்கு எதிராகச் சொன்னதால் தான் தகராறு.மாறன் சகோதரர்களைப் பொறுத்தவரை..அவர்கள் தந்தை
செய்ததைப் போலத்தான் செய்திருக்கிறார்கள்.
ஆனால் கலைஞர் வாழ்த்திய பேரனின் தந்தையும்..அவர் மகனுமான மு.க.முத்து தந்தைக்கு வேண்டாதவர்.
ஆனாலும் கலைஞரால் வாழ்த்தப்பட்டார்.ஒரு சந்தேகம்.
கலைஞர் ஒரு சமயம் குருவி படம் எடுத்த உதய நிதியை மனதில் நினைத்து இதை சொல்லியிருப்பாரோ?

மாற்றம் மட்டுமே மாறாதது அல்ல (அறிவியல் போட்டிக்கான என் கதை)

அந்தரங்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஈகடார் நகர் விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் 5 வினாடிகளாக காத்திருந்தான் கே789456.
கவச உடைகளுடன்.காலை இந்திய நேரம் 7.01.அவனது வாட்ச்சில் இந்திய நேரம் அதுதான் என்றது.இந்திய - சென்னை ஷட்டில் வரவேண்டிய நேரம்.
அவன் இந்த ஷட்டிலை பிடித்தால் தான்.9.02க்கு சென்னையை அடைய முடியும்.
சற்று இரைச்சலுடன் விண்வெளிகலம் வந்து நிற்க..பறக்கும் மனிதக்கூட்டத்துடன் தானும் பறந்து..அடித்து ,பிடித்துக் கொண்டு கலத்தினுள் சென்றான்.அதில் இருந்த வருகை
மாணிட்டரில்..தனது மாதாந்திர பயணச்சீட்டை காண்பிக்க..அது சிறு விசில் ஒன்றை அடித்து..அவன் பயணத்தைக் குறித்துக்கொண்டது.அவன் பயணம் முடியும் முன் ..நாம் சற்று பின்
நோக்கிச் செல்வோம்.
அவனது முன்னோர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்..இந்தியாவின் ஒரு பகுதியான சென்னையில் வாழ்ந்து வந்தவர்கள்.அங்கு சாஃப்ட்வேர் நிறுவனங்கள்..வளர..வளர..
மக்கள் வாழும் பகுதிகளெல்லாம் கட்டிடங்கள் கட்டப்பட்டன.வயல்வெளிகளில் பயிர் விளைந்ததுப் போக..கான்கிரீட் கட்டிடங்கள் விளைந்திருந்தன.ஜனத்தொகை ஆயிரம் கோடியை
எட்டிப்பிடித்தது.உலகில் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வேலைகளை இந்தியாவிற்கு அவுட்சோர்ஸிங்க் செய்தது.
உண்ண உணவின்றி..மக்கள் தவிக்க..விஞ்ஞானிகள் தங்கள் மூளைக்கு முழுநேர வேலைக்கொடுத்து..காலை உணவிற்கு..நீல நிறத்தில் ஒரு மாத்திரையும்,மாலை உணவிற்கு
ஒரு சிவப்பு மாத்திரையும்..இரவு டின்னருக்கு மஞ்சள்நிற மாத்திரையும் கண்டுபிடித்தனர்.ஆனால் ஒரு வேலை மாத்திரை பத்தாயிரம் இந்திய ரூபாய்.மக்கள் உணவுத் தேவை
பூர்த்தி ஆயிற்று.இருக்க இடம்..என்ன செய்வது என்றபோதுதான்...
..உலக நாடுகள் அனைத்தும் ஐ.நா.வில் கூடின.விண்வெளியில் பகுதிகளை..தங்கள் நாட்டு நிலப்பப்புக்கேற்ப..அவை பிரித்துக் கொண்டன.அங்கு தொங்கும் வீடுகள்
கட்டப்பட்டன.அனைத்து மக்கள் குடியிருப்பும்..விண்ணுக்கும்..தொழில்கள் அனைத்தும் மண்ணுக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
நீச்சே பாரத்..ஊஞ்சே பாரத் மகான் ஆயிற்று.
அப்படி குடியேறிய ஒரு குடும்பத்தில் பிறந்தவன் தான் நாம் முதல் பாராவில் பார்த்த கே789456.அவன் வசிக்கும் இடம் ஈகடார் எனப்பட்டது.அங்கு புவிஈர்ப்பு இல்லாததால்
பறக்கும் ஜாக்கெட்டுகளுடன் மக்கள் இருக்க வேண்டும்.அந்த செலவே மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் பகுதியை சாப்பிட்டன.அந்த ஜாக்கெட்டை அணிந்தால்தான்
அவர்களால் குறிப்பிட்ட இடங்களை அடையமுடியும்.இல்லையேல்..விண்வெளியில் சுற்றிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
அவனது இருப்பிடத்திலிருந்து இரண்டு நிமிட பயணம் ஈகடார் நிலையத்திற்கு.அவனது முன்னோர்கள் இந்தியாவில் ரயில் பயணம் செய்திருப்பதாக அவனது தாத்தா ஒரு முறை
அவனிடம் கூறியிருந்தார்.
*** **** ****
9.01 க்கு கலம் வங்கக்கடலில் இறங்கியது.அங்கு தயாராய் நின்றிருந்த மோட்டார் படகுகளில் பயணிகள் ஏற்றப்பட்டனர்.அவர்களை கரையில் கலங்கரை விளக்கம் அருகே கொண்டுவந்து விட்டன அவை.அங்கு நின்றுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றில் அவன் ஏறினான்.அது அவனையும்..மற்ற சில பயணிகளையும் சுமந்துக்கொண்டு...சிறுசேரி என்ற இடத்தில் இருந்த ஒரு உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று அவனையும்,மற்றவர்களையும் இறக்கிவிட்டது.மேலிருந்து கீழ் வரும் லிஃப்டில் ஏறி 65ம் மாடியில் இறங்கினான்.அங்கிருந்த உடைமாற்றும் அறைக்குச்சென்று..அவன் பெயர் பொறித்திருந்த லாக்கரைத் திறந்து..தன் ஜாக்கெட்டுகளைக் கழட்டி அதில் வைத்துவிட்டு..சாதாரண பேண்ட்..சட்டைக்கு மாறினான்.
தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தபோது மணி 9.58
பத்து மணிக்கு வேலை ஆரம்பம்.அவன் பார்க்கும் வேலை வெளிக்கம்பெனி ஒன்றால் ஒப்படைக்கப்பட்டிருந்த ப்ராஜக்ட் ஒன்று.
அப்போது தான் தனக்கென கொடுத்திருந்த உதவி ஆள் வராத்தைப் பார்த்தான்.அந்த ஆள் வந்த போது மணி10.15.
தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டான்.
'நான் ஏறவேண்டிய கடக விண்வெளி ஸ்டேஷனில்..விண்வெளிக்கப்பலை நிறுத்தி அரசியல்வாதிகள் போராட்டம்' என்றான் அவன்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்கள்.ஆனால்..எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தியஅரசியல்வாதிகளும் மாறமாட்டார்கள் என்று நினைத்தான்.
அதற்குள்...அவன் வேறு சிந்தனையில் இருப்பதை..அவன் தலைக்கு மேல் இருந்த சிவப்பு விளக்கு எறிந்து காட்டிக்கொடுத்தது.
இது முதல் எச்சரிக்கை..வேலையில் உஷாரானான் அவன்.
மாலை மணி 5.
ஷட்டவுன் போட்டுவிட்டு வேகமாக எழுந்தான்.
உடை மாற்றும் அறைக்கு வந்து..ஜாக்கெட்டுக்குள் மாறினான்.5.22க்கு ஹெலிகாப்டர் உச்சிக்கு வரும்..அதைப் பிடித்தால்தான் அவனால்5.38 விண்வெளிக்கப்பலை வங்கக்கடலில் பிடிக்கமுடியும்.எட்டு மணிக்கு வீடு போய் சேரமுடியும். டின்னர் மாத்திரையை முழுங்கிவிட்டுப் படுத்தால்தான் காலையில் சீக்கிரம் எழுந்து 7.01 கப்பலை பிடிக்க முடியும்.
சற்று சலிப்பு ஏற்படத்தான் செய்தது.

Sunday, July 20, 2008

வாய் விட்டு சிரியுங்க - 24

போன வாரம் 50% டிஸ்கவுண்ட்ல ஒரு புடவை வாங்கினியே..அது சாயம் போகாம நல்லாயிருக்கா?
(கையில் உள்ள கர்சீப்பைக்காட்டி)சாயம் போயிருக்கான்னு நீங்களே பாருங்க.

2.நம்ம தலைவர் டிபாசிட் இழந்துட்டார்
எந்த தொகுதியிலே
நான் சொல்றது..அவர் டிபாசிட் போட்டு வைத்திருந்த ஃபைனான்ஸ் கம்பனி மூடிட்டதால

3.ஹலோ..நடிகை நளினி இருக்காங்களா?
நளினிதான் பேசறேன்..நீங்க..
எங்க கட்சியிலே நீங்க சேரணும்..மேடம்..தலைவர் கேட்கச் சொன்னார்.
கண்டிப்பா சேரறேன்..எனக்கும் ரொம்ப நாளா உங்க கட்சியிலே சேரணும்னு ஆசை
ரொம்ப நன்றி..மேடம்..
ஆமாம்..உங்ககட்சி பெயர் என்ன?

4.தலைவரே! நம்ப கட்சியில் இருந்து எதிர்கட்சிக்கு போறவனைப் பத்தி கூட்டத்திலே என்னன்னு பேசணும்
நம்பிக்கைத்துரோகின்னு சொல்லுங்க
எதிர் கட்சியிலே இருந்து நம்ம கட்சிக்கு வர்றவனை
குடும்பத்திலிருந்து பிரிந்த உடன்பிறப்பே மீண்டும் குடும்பத்துடன் இணைய வந்துள்ள உன்னை நெஞ்சார தழுவி வரவேற்கிறேன்னு சொல்லுங்க

5.நிருபர்(கவர்சி நடிகையிடம்) கவர்ச்சின்னு நீங்க எதை நினைக்கிறேங்க
நடிகை-நம்மிடம் இருப்பது பாதி..நம்மிடம் இருப்பதாக பிறர் நினைத்துக் கொண்டிருப்பது பாதி..
இரண்டும் சேர்ந்ததுதான் முழு கவர்ச்சி

6.நீ ரிடையர் ஆனப்பிறகு மிகவும் கஷ்டப்படறியா...ஏன்?
pin.gemclip எல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கு.

Saturday, July 19, 2008

வாய் விட்டு சிரியுங்க - 23

1.தலைவர் இன்னிக்கு கூட்டத்திலே வாரிசு அரசியலை எதிர்த்து பேசப்போறாராம்
யார் தலைமை? யார் முன்னிலை?
அவர் மச்சான் தலைமையிலே..மாமா முன்னிலையிலே..மகன் வரவேற்புரை வழங்கியதும்.

2.எங்க தலைவர் எப்போதும் கைகளுக்கு கிளவ்ஸ் போட்டுட்டுத்தான் இருப்பார்
ஏன்?
தன் கை சுத்தம்ன்னு சிம்பாலிக்கா சொல்றாராம்.

3.போன மாசம் என் கிட்ட 100 ரூபாய் கடன் வாங்கினியே..மறந்துட்டியா?
சேச்சே..வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு..அதுக்குள்ள மறந்துடுவேனா?

4.நூறு ரூபாய் இருந்தா கை மாத்தா கொடேன்..
கொடேன்..கொடேன்..

5.என்னது..ஆவியை நீ பார்த்திருக்கியா? எப்போது?
இட்லி வேகும்போது..பிரஷர் குக்கர்ல வெயிட் போடும்பொது..தண்ணீர் கொதிக்கிறப்போது
இப்படி பல தடவை பார்த்திருக்கேன்.

6.குறவர்கள் கிட்ட ஓட்டு கேட்கப்போன தலைவர்..அவர்களது மூதாதையர் தமிழுக்கு செய்த
சேவைக்கு பாராட்டு தெரிவித்தாராமே!
சமயக்குரவர்கள் என்பதை..இவர்கள் தான் என நினைத்து விட்டார்.

இந்த படத்திற்கு கலைஞர் வசனமா?சுப்பு தாத்தா ஆச்சர்யம்

கலைஞரால் இப்படியும் சாதாரணமாக வசனம் எழுத முடியுமா?என ஆச்சர்யப் பட்டாராம் சுப்பு தாத்தா.
அவர் சமீபத்தில் பார்த்த படத்தை விமரிசிக்கிறார்.
சிவாஜி கதானாயகனாக வந்து...சரோஜாதேவி கதானாயகியாக நடித்து சமீபத்தில் வந்த 'இருவர் உள்ளம்'தான் அப்படம்.
எழுத்தாளர் லட்சுமி எழுதிய 'பெண்மனம்'நாவல் தான் படம்.கலைஞர் வசனம்.
சிவாஜி ஒரு ஜாலி பேர்வழி.பார்க்கும் பெண்களை எல்லாம் தன் வலையில் வீழ்த்தி விடுவார்.அவர் கண்களில்
ஒரு நாள்சரோஜாதேவி பட..விடுவாரா..மனுஷன்..அவரை உண்மையாகவே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.
ஆனால்..அவரது குணம் பற்றி அறிந்த naayaki அவரை வெறுக்கிறாள்.'உன் மேல் உள்ள காதல்..என்னை மாற்றிவிட்டது'
என சிவாஜி கூறுவதை அவர் நம்ப மறுக்கிறார்.சந்தர்ப்பங்களும் அப்படியே அமைகின்றன.சரோஜாதேவி உடல் நலம் குன்றி
படுத்துள்ளபோது..சிவாஜி செய்யும் பணிவிடைகள்..நாயகியின் மனதை மாற்றுகிறது.சிவாஜி திருந்திவிட்டார் என்பதை
உணரவைக்கிறது.கடைசியில் எல்லாம் சுபமாக முடிகிறது.
இப்படத்தில்..M.R.ராதா,முத்துலட்சுமி ஜோடி நகைச்சுவையில் தியேட்டரையே அதிரவைக்கிறது.
'புத்திசிகாமணி பெற்ற பிள்ளையே'என அவர்கள் பாடும் போதும்..கோர்ட்டில் ராதா பேசும்போதும் எச்சுமி பாட்டியாலேயே சிரிப்பை
அடக்கமுடியவில்லையாம்.
மற்றபடி,'பறவைகள் பலவிதம்'நதி எங்கே போகிறது' 'அழகு சிரிக்கிறது' (இந்த படத்தில் உண்மையிலேயே அபிநயசரஸ்வதி கொள்ளை
அழகாக இருப்பாராம்..தாத்தா இதைச்சொல்லும் போது பாட்டி..முகவாயை தோள்பட்டையில் இடித்துக்கொள்கிறார்)'இதய வீணை தூங்கும்
போது' 'ஏன் அழுதாய்" என எல்லா பாட்டுகளும் ஹிட்டாம்.
படம் மா பெரும் வெற்றியை தயாரிப்பாளர் L.V.பிரசாத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்ததாம்.

Thursday, July 17, 2008

வாய் விட்டு சிரியுங்க - 22

1. டாக்டர் - உங்க மாமியார் புழைக்கறது ரொம்ப கஷ்டம்
மருமகள்- டாக்டர்..அப்படியெல்லாம் சொல்லாதீங்க..கண்டிப்பா பிழைக்கமாட்டார்னு சொல்லுங்க.
உங்களை கடவுள் மாதிரி நினைப்பேன்.

2.தலைவர் ஏன் மீட்டிங்ல பேசறதுக்கு முன்னாலே ஒரு புத்தகத்தை மக்களுக்கு திறந்து காட்டிவிட்டு பேசறார்?
தன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்னு symbolicஆ சொல்றாராம்

3.எங்க தமிழ் ஆசிரியை நேற்று கவர்ச்சிகரமா இலக்கண பாடம் நடத்தினாங்க
என்ன சொல்ற
இடை,தொடை பற்றி எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க

4.நிச்சயதார்த்தம் முடிஞ்சு ரொம்ப நாள் கழிச்சு கல்யாணம் வைச்சுண்டது தப்பாப்போச்சு
ஏன்
கல்யாணத்தோடு வளைகாப்பையும் சேர்த்து வைச்சுடச் சொல்றா என் பொண்ணு

5.மனைவி- காலைலே ஏன் கழுதை மாதிரி கத்திக்கிட்டு கிடக்கறீங்க
கணவன்-பேப்பர்காரனை இன்னும் காணும்

6.என் கணவருக்கு என்னைப்பார்த்தா பயம்..நான் என்ன புலியா இல்ல சிங்கமா?
சேச்சே..அது எல்லாம் சாதுவான மிருகங்கள் ஆச்சே!

Wednesday, July 16, 2008

வாய் விட்டு சிரியுங்க - 21

தலைவரே..எந்த படக்கடைக்குப்போனாலும் அங்க உங்க படம்தான் இருக்கு
அப்படியா?
ஆமாம்..மத்த தலைவருங்க படம் எல்லாம் உடனே வித்துப்போவுதாம்.

2.அவர் கணக்கிலே புலின்னு எப்படி சொல்ற
அவரது மகன் கடைக்குப் போனாலும்'பை' எடுத்துட்டுப்போன்னு சொல்லமாட்டாராம்..22/7
எடுத்துட்டுப் போன் னுதான் சொல்வாராம்.

3.என்னோட மனைவி சரியான ஏமாளி..ஈஸியா ஏமாத்திடலாம்
அப்படியா
ஆமாம்..நேத்து வைச்ச சாம்பாரை இன்னிக்கு வைச்சதுன்னு சொன்னேன்..நல்லாயிருக்குன்னு
சாப்பிட்டுட்டு போயிட்டா.

4.ஹீரோ..டைரக்டர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வர்றார்
எப்படி
முன்னாலே ரப்பர் எஸ்டேட்ல வேலை பார்த்தவராம்.

5.(சாப்பிட்டுக்கொண்டே.டி.வி.பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியிடம் கணவன் அழும் குழந்தையைக்காட்டி)
குழந்தை ஏன் அழறான்?
சாப்பிடும்போது கார்ட்டூன் சானல் பார்க்கணும்னு சொன்னான்..அதனாலே அடிச்சேன்.

6.முன்னெல்லாம் மீந்துப்போன சாதம்,குழம்பு எல்லாம் கொடுப்பியாம்..இப்போ ஒன்னும் கொடுக்கறது இல்லைன்னு
உன்னோட வேலைக்காரி புலம்பறா..
என் மாமியார் ஊர்லே இருந்து வந்திருக்காங்க..அதான்..

Monday, July 14, 2008

வாய் விட்டு சிரியுங்க - 20

அந்த நீதிபதி தீர்ப்பு சொல்லும் போது எல்லாம் கையிலே ஒரு தீப்பந்தத்தை வைச்சிருப்பார்
ஏன்?
சட்டம் ஒரு இருட்டறைன்னு யாரும் சொல்லிடக்கூடாது இல்லையா?

2.உங்களுக்கு மாடு வாங்க லோன் தந்தா அதை எப்படி திருப்பிக் கட்டுவீங்க?
கால் நடையா வந்துதான்.

3.கள்ள நோட்டை அடிச்ச நீ எப்படி மாட்டிண்ட
நோட்டிலே ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெழுத்து போட வேண்டிய இடத்திலே என் கை நாட்டை வைச்சுட்டேன்.

4.தலைவர் போற இடத்திற்கெல்லாம் ஒரு கட்டு பேப்பர்களை எடுத்துட்டுப் போறாரே..ஏன்?
அவர் மேல உள்ள வழக்குகளுக்கு முன் ஜாமீன் வாங்கினத்துக்கான பேப்பர்களாம்

5.என் கணவர் தூங்கும்போதும் கண்ணாடி போட்டுக்கிட்டுத்தான் தூங்குவார்
ஏன்?
கனவுல வர்றவங்க சரியா தெரியணும்னுட்டுத்தான்

6.நீங்க பேய்,பிசாசு இருக்கறதை நம்பறீங்களா?
கல்யாணம் ஆறவரைக்கும் எனக்கு அதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது

சுப்பு தாத்தாவின் திரை விமரிசனம்

சுப்பு தாத்தா படம் பார்ப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆயிற்றாம்.அவரிடம் நீங்கள் பார்த்த கடைசி படம் என்ன?
என்று கேட்க ..அதைப்பற்றி ஒரு விமரிசனமே எழுதிக்கொடுத்து விட்டார்.
சமீபத்தில் வி.சி.கணேசன் நடித்து வெளிவந்த தூக்குத்தூக்கி என்ற படத்தில் திருவாங்கூர் சகோதரிகளான..லலிதா,
பத்மினி,ராகினி மூவரும் நடித்துள்ளனர்.கதாநாயகன் ஒரு நாள் அறிஞர்கள் சபையில் கீழ்கண்ட வற்றைகேள்விப்படுகின்றான்.
'கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்'
உடனே அவற்றை பொய் என நீரூபிப்பேன் என சூளுரைத்து கிளம்புகின்றான்.ஆனால் நடந்தது என்ன?
தந்தையால்..வீட்டை விட்டு வாளாயிருப்பதால் விரட்டப் படுகிறான்..தாயோ கண்ணீர் விடுகிறாள்.
தன் சகோதரிவீடு சென்றவன் அன்பாக வரவேற்கப்படுகின்றான்.வெள்ளித்தட்டில் சாப்பாடு.
ஆனால்..அவன் தனக்கு எந்த சீரும் கொண்டுவரவில்லை என்று எண்ணி அடுத்தாநாள் வாழையிலையில் சாப்பாடு.
அடுத்த நாள் மந்தார இலையில் என அவமானப்படுத்தப் படுகின்றான்.தான் கொண்டு வந்திருந்த பொருளைக்காட்டி,
அவளது குணத்தை ஏசி வெளியேறுகிறான்.
அவன் இல்லாத வேளையில் அவன் மனைவி லலிதாவிற்கு ஒரு பனக்கார மார்வாடி சிநேகம் ஏற்பட..அவனுடன் சேர்ந்து கணவனை கொலை
செய்ய திட்டமிடுகிறாள்.மார்வாடியாக வரும் டி.ஸ்.பாலையா...'ப்யாரி நிம்பல்கி நும்பல் மேல மஜா"என பாடி நடிப்பில் அட்டகாசப் படுத்துகிறார்.
பின் கதாநாயகன் மீது கொலை குற்றம் சாட்டப்படுகின்றது.ராஜ சபையில் வந்து..அவன் உயிரை காப்பாற்றுகிறான் அவன் நண்பன்.
கடைசியில் அறிஞர்கள் சொன்ன அனைத்தும் உண்மை என உணர்கிறான் .
மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில்..அனைத்து பாடல்களும் அருமை.டி.எம்.எஸ்.குரலில் ஒளித்த 'பெண்களை நம்பாதே'''ஏறாத மலைதனிலே"
'சுந்தரி சௌந்தரி'அபாய அறிவிப்பு" 'ஏலம்..ஏலம்"மற்றும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்'.
இப்ப்டத்தில் பத்மினி மிகவும் அழகாக இருப்பார்..என பொக்கை வாய் ஜொள்ளுவிட சுப்பு தாத்தா சொல்ல..இடையில் புகுந்த எச்சுமி பாட்டி
சிவாஜி மட்டுமென்ன சும்மாவா?குறு..குறுன்னு அழகாய் இருப்பார் என்றாள்.

Friday, July 11, 2008

டோண்டு சாருக்கு வந்த கேள்வியும் அதற்கான என் பதிலும்

//தென்காசி
நாடக குழுக்களில்'பிசி'யாக உள்ள குழு யாருடையது?
பதில்-நண்பர் காஞ்சனா ராதாகிருஷ்ணனுக்கு இக் கேள்வி அனுப்பி வைக்கப் படுகிறது//

இந்த கேள்விக்கு சற்று விரிவாகவே பதில் சொல்ல ஆசைப்படுகிறேன்.சமீபத்தில் 1985 வரை நாடகங்கள்
சக்கைப்போடு போட்டன.சாதாரண என்னைப்போன்ற அமைச்சூர் குழு நாடகங்ககளும் 100 தடவைகளுக்கும்
மேல் நடைப்பெற்றன.சிவாஜி.மனோகர்,பாலசந்தர்,கோமல்,சோ,மெரினா இவர்களின் நாடகங்களுக்கு
blackல் டிக்கட்டுகள் விற்கப்பட்டிருக்கின்றன.சென்னையில் 100க்கும் மேற்பட்ட சபாக்கள்,வெளியூர்களில்30
க்கும் மேற்பட்ட சபாக்கள் இருந்தன.ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாதம் 30 நாட்களில் 45காட்சிகள்
(சனி,ஞாயிறு 3 காட்சிகள்)நாடகங்கள் நடந்த காலங்கள் உண்டு.ஆனால் இன்றோ ஒரு டஜன் சபாக்கள் தான்.
அதுவும் தென் சென்னையில் மட்டும்.நாடகம் மூலம் வெள்ளித்திரைக்குப் போனவர்கள் நாடக மேடையை
மறந்தார்கள்.ஆனாலும்..சில அமெச்சூர் குழுக்கள் நாடகக்களையை I.C.U. வில் வைத்து காப்பாற்றிவருகிறார்கள்.
அவற்றுள் எனது சௌம்யா நாடகக் குழுவும் ஒன்று.(எனது சமீபத்திய நாடகம்'மாண்புமிகு நந்திவர்மன்' a political
satire)
இப்போது..உங்கள் கேள்விக்கான பதில்
இன்றும் பிசி யாக உள்ள குழுக்கள் S.Vee.சேகர்,கிரேசி மோகன் குழுவினர்.இவர்களுடன் எந்த நாளிலும்
நாடகத்தை மறக்காத Y.G.மஹேந்திரனின் குழு.ஆகிய 3 troupe தான்.T.V.வரதராஜனை அடுத்து கூறலாம்.மற்றபடி என் போன்றவர்களுக்கு நாடகத்தன்றுதான் பிசி.
R.S.மனோகரின் நாடகங்களை அவரது நேஷனல் தியேட்டர் குழுவைச் சேர்ந்த சில மூத்த கலைஞர்கள் நடத்தி
வருகின்றனர்.இவர்கள் நாடகங்களுக்கு ஆகும் செலவு பல ஆயிரங்கள்.அதைக் கொடுக்க சபாக்கள்தான் இல்லை.

டோண்டு..சார்..உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வியை எனக்கு அனுப்பிவைத்த உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.

Thursday, July 10, 2008

புள்ளிவிவரத்துடன் விஜய்காந்த் பேச்சு

கழிவறை போய் திரும்பும்போதும்,வெளியில் போய் வீடு திரும்பும்போதும் கைகளை தண்ணீரால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் தொற்று நோய்களான வாந்தி,பேதி,காலரா,நிமோனியா போன்றவை ஏற்படும்.
இன்று கலைஞர் ஆட்சியில்..53% தான் ஒழுங்காக கை கழுவுகின்றனர்.அதிலும் உணவளிக்கும் முன் 30% தான்
கை கழுவுகின்றனர்.மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கை கழுவுவோர் எண்ணிக்கை குறைவு.இந்த சதவிகிதத்தை
அதிகரிக்க முதல்வர் என்ன செய்தார்?
இந்தியாவில் 18லட்சம் பேருக்கு வாந்தி பேதி ஏற்படுகிறது.இதில் 90%குழந்தைகள்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்
45% பாதிப்புகள் குறையும்.
இந்த முக்கிய பிரச்னையை விட்டு விட்டு..கலைஞர் என் கல்யாண மண்டபத்தை இடித்தார்.எனது கல்லூரியில் புறம்போக்கு நிலம்
எவ்வளவு சதவிகிதம் என்று பார்க்கிறார்.புதுச்சேரியில் உள்ள எனக்கு சம்பந்தமில்லாத..என் மனைவியின் சகோதரியின் மருத்துவ கல்லூரி
பற்றி பொன்முடியை தூண்டிவிட்டு..அது என்னுடயது என்று பேசச்சொல்லுகிறார்.
இதையெல்லாம் என் சொல்கிறேன் என்றால் மக்களில் 100% உண்மையை உணர வேண்டும் என்றுதான்.
இப்படி விஜய்காந்த் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
(உபரி செய்தி..புள்ளிவிவரங்கள் தினமலர் கொடுத்தது..விஜய்காந்த் பேச்சு ஹி...ஹி...நம்ம கைங்கர்யம்)

Wednesday, July 9, 2008

வாய் விட்டு சிரியுங்க - 19

1.எங்க தொகுதி M.L.A. இதுவரைக்கும் அசெம்பளிலே 40தடவை எழுந்து..
தொகுதி பற்றி பேசியிருக்கிறாரா?
இல்லை..அவிழ்ந்து போன வேட்டியை கட்டிக்கிட்டு இருக்கார்.

2.கோயிலுக்கு போறவங்க எல்லாம்..பொய் சொல்றவங்களாக இருப்பாங்க..
எப்படி சொல்ற.
'மெய்' மறந்து தானே சாமியை கும்பிடுவாங்க

3.

4.தலைவரோட கூட்டத்தில என்ன கலாட்டா?
மேடைக்கு வந்த கிழவியை எப்பவும் அணைச்சுக்கிற மாதிரி தலைவர் அணைச்சுக்கிட்டாராம்..ஆனா அது கிழவி
இல்லையாம்..மேக்கப் இல்லாமல் வந்த நடிகை பூஜாவாம்.

5.ஆஃபீஸ்ல கடைசி சீட்ல உட்கார்ந்துண்டு ஃபைல் பார்த்துக்கிட்டிருப்பாரே...அவரை ஆஸ்பத்திரில அட்மிட்
பண்ணியிருக்காங்களாம்..
என்ன உடம்பாம்
ஃபைல்ஸாம்

6.போன மாசத்துக்கு இந்த மாசம் எல்லாமே ஏறியிருக்கு..எதுலயும் இறக்கம் இல்லை
நம்ம பையனோட ப்ரொக்ரஸ் ரிபோர்ட் ல இறக்கம் இருக்கே..

Sunday, July 6, 2008

பொதுத்தொண்டும்..பண விவகாரமும்

பொதுத்தொண்டு செய்யப் புறப்படுபவர்கள் பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நல்ல ஆதரவு நம் காரியத்துக்கு கிடைத்தாலும் அதனால் over enthusiastic ஆகி நிறைய பணம் collect
பண்ண ஆரம்பிக்கக் கூடாது.இப்படி ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது.இதனாலே, உதவும் அன்பு
எண்ணத்தை 'வசூல் எண்ணம்' முழுங்கிவிடும்.எப்போது பார்த்தாலும் ரசீதும்..கையுமாக அலைவதும்,பேப்பர்காரர்களைப்
பிடித்து அப்பீல் பன்னலாமா...அட்வெர்டைஸ்மென்ட் பிடித்து ஸோவனீர் போடலாமா..என்பதே சிந்தையாகத்
தவித்துக் கொண்டிருக்கும்படியும் ஆகும்.நிறைய பணம் சேர்த்து அதைக் கையாள வேண்டியிருக்கும் போது, நாமே எப்படி
மாறிப்போய் விடுவோமோ என்ற பயம் எப்போதும் இருக்க வேண்டும்.அதுவுமில்லாமல் ரொம்பவும் பணம் சேர்த்தால் ஊரிலிருப்போருக்கும்
அது சரியாகப் பிரயோஜனமாகிறதா என்ற சந்தேகம் எழும்பும்.இதோடு கூட..சற்று முன் சொன்னபடி ,இஷ்டமில்லாதவனையும்
நிர்பந்தப்படுத்தி வாங்குவதும்..இப்படி வாங்கிவிட்டால் அவனிடம் பந்தப்பட்டு நிற்பதும்..நம் பணியையே அசுத்தம் செய்துவிடும்.
ஆதலால்..எந்த நல்லக்காரியமானாலும் 'அதி'யாக அதைக் கொண்டு போய் விடாமல்..அவசியத்தோடு நிறுத்திக் கொண்டு
சிக்கனமாகவே அதற்கான வரவு செலவுகளை நிர்வகிக்கவேண்டும்.
பொதுத்தொண்டுக்கு மூல பலம் பணம் இல்லை..ஐக்கியப்பட்ட மனம்தான் என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.

(மகா பெரியவர்)

இப்படிச் சொன்னவர் யார்? கண்டுபிடித்து பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம்..

வாய் விட்டு சிரியுங்க - 17

1.என் பையன் போற போக்கிலே உருப்படமாட்டான் போல இருக்கு
ஏன் அப்படி சொல்றே
டாக்டருக்கு படிக்கணும்னு சொல்றான்..ஆனா..கையெழுத்து தெளிவா இருக்கு

2.அதோ போற பேரணி எந்த கட்சியோடது
கட்சி பேரணியில்லை..கூட்டணி தலைவருங்க எல்லாம் ஒன்னா வராங்க

3.மெகா சீரியல் டைரக்டரை லவ் பண்ணினியே எப்ப கல்யாணம்
நடக்காத விஷயத்தை எல்லாம் பேசறார்..எப்ப கல்யாணம்னு கேட்டா..சீரியல் முடியட்டும்னு சொல்றார்

4.உன் கணவர் உன் மேல் சந்தேகப்படறாரா? ஏன்?
என் ஜாக்கெட்டை டைலர் அளவு சரியா தச்சிருக்கார்னு சொன்னேன்..அவ்வளவுதான் சந்தேகம் வந்துடுத்து

5.கவர்ச்சி நடிகை நளினாவை இயக்குநர் ஏமாற்றிட்டாராம்.குணசித்திர வேஷம்னு சொல்லிட்டு படம்
முழுவதும் புடவைக் கட்டி நடிக்க விட்டுட்டாராம்.

6.மேனேஜர் மடியிலே..ஸ்டெனோ உட்கார ஜோக்கையே எவ்வளவு நாள் எழுதுவீங்க?
சரி..இனிமே..ஸ்டெனோ மடியிலே மேனேஜர் உட்காரரான்னு மாற்றி எழுதிடறேன்

Friday, July 4, 2008

வாய் விட்டு சிரியுங்க - 16

1.மன்னா..நீங்க சொன்னபடி நம்ப எதிரி நாட்டு மன்னனின் படை ரகசியத்தை தெரிஞ்சுக் கிட்டு வந்துட்டேன்
சொல்லுங்கள் மந்திரியாரே
அவர்கள் தங்கியுள்ள பகுதியில் கொசு தொந்தரவு தாங்காமல் சொறிஞ்சு..சொறிஞ்சுதான் படை வந்திருக்காம்.

2.தலைவருக்கு எப்பவும் தங்க ராசி உண்டு..
எப்படிச் சொல்றே
முதல் மனைவி பெயர் 'தங்கம்' இரண்டாம் மனைவி பெயர்'பவுனு'மூணாவது மனைவி 'சொர்ணம்"

3.ஜன்னல் வழியே எலி புகுந்துடுத்து
அப்புறம் என்ன பண்ணினே
டைலர் கிட்ட ஜாக்கெட்டை கொடுத்து ஜன்னலை மூடச் சொல்லிட்டேன்.

4.அந்த கவர்ச்சி நடிகையை கல்யாணம் பண்ணினப் பின்னாடி தெரிஞ்சுது
ஏன் முன்னாடி தெரியலையா?
முன்னாடிதான் பல படங்கள்ல பார்த்திருக்கேனே..

5.பிரசவத்துக்கு பின் உன் வயிற்றிலே இருந்த சுருக்கங்கள் எங்கே?
என் கணவர் தண்ணீர் தெளிச்சு இஸ்திரி போட்டுட்டார்.

6.(நடுவானில்) பிளேன் நகராமல் திடீரென நின்னுப்போச்சு..யாராவது பத்து பேர் இறங்கி தள்ளுங்க.

Thursday, July 3, 2008

அந்த கிரகமும்..அதன் மக்களும்..

அந்த கிரகத்தில் அரைகுறையாக ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணைச்சுற்றி..ஒரு கூட்டம்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது போல ..சேட்டிலைட் மூலம் எடுக்கப் பட்டிருந்த புகைப்படத்துடன்
செய்தி ஒன்று அன்றைய செய்தித் தாள்களில் வந்திருந்தது.
அத்துடன் அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சத்தியக்கூறுகள் இருப்பதாகவும்..உயிர்கள்
வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.
விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள்..அடுத்ததாக உயிருள்ளவர்களை அந்த கிரகத்திற்கு அனுப்பி
வைக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி,பிரதமர் முதல் குப்பன்..சுப்பன் வரை பாராட்டு
தெரிவித்திருந்தனர்.
சில வல்லரசு நாடுகள் இந்த கண்டுபிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல்..விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சியில்
ஈடுபடலாயினர்.
பத்து விண்வெளி வீரர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டு...நான்கு பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அதில் சாதனா சாவ்லா என்று ஒரு பெண்ணும் இருந்தார்.
நாட்டின் பொருளாதார நிலை சரியாய் இல்லாததாலும்..பணவீக்கம் அதிகரித்து வருவதாலும்..
மேற்கொண்டு ஆராய்ச்சிகளுக்கு பண ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் இருப்பதாக நிதி அமைச்சர்
பட்டினியார்...தெரிவிக்க..அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சில கட்சிகள்..ஆதரவை..வாபஸ் வாங்கப்போவதாகவும்..அவர்கள்
தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென்றால்..விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான பணம்
ஒதுக்க வேண்டும் என்றும்..நிதி அமைச்சர் பட்டினியார் பதவி விலக வேண்டும் என்றும் நிபந்தனைகள்
விதித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல்..பிரதமர் தன் தலைப்பாக்குள் கையை விட்டு முடியை பிய்த்துக்
கொண்டார்.கட்சித் தலைவர் மானியா..விண்வெளி ஆராய்ச்சிக்கு...தடை இல்லை என்றும்..
தொடர்ந்து நிதி ஒதுக்கப் பட்டு..திட்டமிட்டப்படி வீரர்கள் அனுப்பப்படுவர் என்றும் கூறி
தற்காலிகமாக ஆட்சியை காப்பாற்றினார்.
நான்கு வீரர்களுடன் விண்கலம் புறப்படும் நாள் வந்தது.விண்வெளி விஞ்ஞானி சங்குண்ணி
மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார்.
10..8...7..6..5..4..3..2..1..0..
உஷ் என கலம் புகையைக் கக்கிக்கொண்டு பறந்தது.
**** ***** ***** *****
இரண்டு மாதம் தன் பயணத்தை முடித்துக்கொண்டு..சில புகைப்படங்களை அனுப்பிய வீரர்கள்
திரும்பினர்.
அவர்கள் பின் அளித்த அறிக்கை..

'நாங்கள் போன இடம் பூமி எனப்பட்டது.அதில் மக்கள் வாழ்கிறார்கள்.மூன்று பாகம் கடல்..ஒரு பாகம் நிலம்.
நாங்கள் இறங்கிய இடத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாய்..தியேட்டர் எனப்படும் இடத்தில் கூடுகின்றனர்.
வறுமையில் வாடினாலும்..ஒலி,ஒளி நிகழ்ச்சியான இவற்றுக்கு மக்கள் பணத்தை செலவழிக்க தயங்குவதில்லை.
அரைகுறையாக உடை உடுத்தியுள்ள நடிகைகளை பார்ப்பதிலும்..தனக்குப் பிடித்த நடிகர்களுக்கு பால்..பீர் போன்ற
திரவ பொருள் கொண்டு அபிஷேகம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.இந்த பகுதிக்கு தமிழ்நாடு என்கிறார்கள்.
அவர்கள் பேசும் மொழி தமிழ்.இதுபோல பல மொழி பேசுபவர்கள் மற்ற இடங்களிலும் இருக்கிறார்களாம்.
தண்ணீருக்கு இவர்கள் மாற்றி...மாற்றி..அடித்துக் கொள்கிறார்கள்.
இப்படி இவர்கள் அறிக்கை நீண்டுக்கொண்டே போகிறது.
அவை அனைத்தும்..செவ்வாய் கிரக பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தன.
உடன்...நமீதாவின் ஒரு குத்தாட்ட புகைப்படமும் பிரசுரமாகி இருந்தது.